என் மலர்
நீங்கள் தேடியது "சிலம்பரசன்"
இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து "அரசன்" என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதில் நடிகர் சிலம்பரசன் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்கான முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே கோவில்பட்டியில் நடந்து முடிந்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.
வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவை கொண்டாடினார்.
- புதிய நடிகரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளேன்.
தமிழ் திரையுலகில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் கவுதம் வாசுதேவ் மேனன். இயக்கம் மட்டுமின்றி பல திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இடையில் திரைப்படங்களை தயாரிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவை கொண்டாடினார்.
இதனிடையே சமீபத்திய பேட்டியளித்த கவுதம் வாசுதேவ் மேனன், "எனது அடுத்த படத்திற்காக ஒரு காதல் கதையைத் தயார் செய்து வைத்திருக்கிறேன். இப்போது பெரிய ஹீரோக்கள் யாரும் காதல் கதைகளில் நடிக்கத் தயாராக இல்லை. அதனால், நான் இளம் நடிகர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன், மேலும் அதில் ஒரு புதிய நடிகரை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்.
நானும் சிலம்பரசனும் கூட இதற்கு முன்பு 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இல்லாததால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதனால் நாங்கள் 'வெந்து தணிந்தது காடு' படத்தை செய்தோம்.
இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் காதல் கதை, இரண்டு பேருக்கு இடையேயான ஒரு தூய்மையான நாடகமாகும். ஜென்-இசட் தலைமுறையினரின் காதல் வித்தியாசமானது என்று பலர் சொல்கிறார்கள், ஆனால் காதலின் மொழி இப்போது மாறிவிட்டது என்று நான் நினைக்கவில்லை," என்றார்.
- அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
- அவரது அரசியல் பயணத்திற்கு எனது நல்வாழ்த்துக்கள்.
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் "அரசன்" படத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சிலம்பரசன் மூன்று கெட்டப்களில் நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் சிலம்பரசன் சமீபத்திய பேட்டியில் ஜனநாயகன் ரிலீஸ் மற்றும் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது பேசிய சிலம்பரசன், "விஜய் இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். ஜனநாயகன் என்பது அவரது கடைசிப் படம். அந்தப் படம் வெளியாக வேண்டும், அதனால்தான் நான் ட்வீட் செய்தேன். எனக்கு அரசியல் தெரியாது, அதைப் பற்றிப் பேச நான் சரியான ஆளும் அல்ல. அவரது அரசியல் பயணத்திற்கு எனது நல்வாழ்த்துக்கள்," என்றார்.
முன்னதாக ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான வழக்கு நடைபெற்ற சமயத்தில் நடிகர் சிலம்பரசன் விஜய்-க்கு ஆதரவாக X தளத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நான் வரலாமா என்று அவரிடம் கேட்டேன்.
- அவரை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை.
நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் "அரசன்" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து இவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக நடிகர் சிலம்பரசன் துபாயில் வைத்து நடிகர் அஜித் குமாரை சந்தித்து இருந்தார். சிலம்பரசன் - அஜித் குமார் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் சிலம்பரசன் துபாயில் வைத்து நடிகர் அஜித் குமாரை சந்தித்தது பற்றி மனம் திறந்துள்ளார்.
இது குறித்து பேசிய சிலம்பரசன், "நான் ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்காக துபாய் சென்றிருந்தேன். அஜித் குமாரின் பந்தயப் பயிற்சி செய்யும் இடம் வழியிலேயே இருந்தது. நான் அவரை நீண்ட நாட்களாக சந்திக்க திட்டமிட்டிருந்தேன், இப்போது சரியான வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில், பந்தயத்தின் போது அவரை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. அதனால், நான் வரலாமா என்று அவரிடம் கேட்டேன். AK வரச் சம்மதித்து என்னை சந்தித்தார். என்னை சந்தித்த பிறகு AK மிகவும் மகிழ்ச்சியடைந்தார், மேலும் தனது பந்தயம் குறித்து மிக விரிவாக பகிர்ந்துகொண்டார். நானும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்," என தெரிவித்தார்.
- எல்மா பிக்சர்ஸ் தமிழகமெங்கும் இந்தப் படத்தை வெளியிடுகிறது.
- "மங்காத்தா" மட்டும் தான் வெற்றி பெற்றது.
STR பிறந்தநாளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான பிளாக்பஸ்டர் படமான சிலம்பாட்டம் திரைப்படம், வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. முன்னணி வெளியீட்டு நிறுவனமான எல்மா பிக்சர்ஸ் தமிழகமெங்கும் இந்தப் படத்தை வெளியிடுகிறது.
மறுவெளியீட்டை ஒட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில், இயக்குநர் Tராஜேந்தர் பேசும் போது, "என் மகன் சிலம்பரசன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை, "சிலம்பாட்டம்" படத்தோடு கொண்டாடும் அனைவருக்கும் நன்றி. எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் ஆகிய இருவருக்கும் என் நன்றி. இயக்குநர் சரவணன் காலம் கடந்து நிற்கும் அருமையான ஆக்சன் படத்தை தந்துள்ளார். நான் என் பையன் நடித்ததில் வியந்து பார்த்த காதல் படம், விண்ணைத் தாண்டி வருவாயா!, நானும் பல காதல் படங்களை எடுத்திருக்கிறேன். ஆனால் என்னையே வியக்க வைத்த படம், விண்ணைத் தாண்டி வருவாயா."
"அதே போல ஆக்சன் படம் என்று எடுத்துக்கொண்டால், எத்தனையோ படங்கள் ரீ-ரிலீஸ் ஆகிறது. ஆனால், "மங்காத்தா" மட்டும் தான் வெற்றி பெற்றது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஏன் வேறுபடங்களுக்கு கூட்டம் வரவில்லை? அது போல இந்த "சிலம்பாட்டம்" கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். இந்தப்படம் இந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல மீண்டும் டிஜிட்டல் செய்துள்ளார்கள். ஒவ்வொரு ஃபிரேமும் அவ்வளவு கலர்ஃபுல்லாக இருக்கிறது."
"சரவணன் அடிப்படையில் கேமராமேன். அத்தனை அற்புதமாக எடுத்துள்ளார். இந்தப்படத்தில் நடித்த பிரபு, சந்தானம், சினேகா என எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். என் "உயிருள்ள உஷா" படமும் ரீ-ரிலிசுக்கு தயாராகிவிட்டது. ஆனால், "சிலம்பாட்டம்" வருவதால் என் படத்தை தள்ளி வைத்துவிட்டேன். நண்பர் விஜய்யின் "ஜனநாயகன்" படம் வந்தாலும் தள்ளிப்போவேன் அது நான் தரும் மரியாதை. தமிழ் சினிமா ரீ-ரிலீசில் என் பையனின் "சிலம்பாட்டம்" பெரிய வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன், அனைவருக்கும் நன்றி," என்றார்.
- படக்குழு சார்பில் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டது.
- வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
நடிகர் சிலம்பரசன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், ரசிகர்கள், படக்குழுவினர், பொது மக்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சிலம்பரசன் பிறந்தநாளை ஒட்டி அவர் நடிக்கும் படக்குழு சார்பில் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் சிலம்பரசன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்த X தள பதிவில் அவர், "எனக்குக் கிடைத்த பிறந்தநாள் வாழ்த்துக்களாலும், அன்பான வரவேற்பாலும் நான் நெகிழ்ந்து போனேன். திரையுலகைச் சேர்ந்தவர்கள், ஊடக நண்பர்கள், மற்ற நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என அன்புடன் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்."
"என் ரசிகர்களே, இத்தனை ஆண்டுகளாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் ஆதரவுமே என் உந்துசக்தி. உங்கள் பாசத்தாலும் ஊக்கத்தாலும் நான் உண்மையிலேயே நெகிழ்ந்துள்ளேன். நீங்கள் இல்லாமல் நான் இல்லை," என குறிப்பிட்டுள்ளார்.
- "கொஞ்சம் பொறுத்துக்கங்க" பொழுதுபோக்கான படம் தயாராகிறது.
- சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர் சிலம்பரசன் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதையொட்டி ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் காலை முதலே நடிகர் சிலம்பரசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் நடிக்கும் "அரசன்" படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த வரிசையில், `டிராகன்' படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து நடிகர் சிலம்பரசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவரும், சிலம்பரசனும் இணையும் படத்தின் அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அதன்படி தானும், நடிகர் சிலம்பரசன் இணையும் படம் `அரசன்' படம் முடிந்ததும் தொடங்கும் என இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். மேலும், படத்தின் தலைப்பு `I' என்ற வார்த்தையில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது குறித்த X தள பதிவில், "பிறந்த நாள் வாழ்த்துக்கள் எஸ்.டி.ஆர். இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பானதாக இருக்கப் போகிறது. அரசன் படத்தைத் தொடர்ந்து நமது படத்தை தொடங்க காத்திருக்க முடியவில்லை. அவரது ரசிகர்கள் அனைவருக்கும், "கொஞ்சம் பொறுத்துக்கங்க" ரசிகர்களுக்காக பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம் தயாராகிறது. படத்தின் தலைப்பு "I" என்ற வார்த்தையில் தொடங்குகிறது," என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நடிகர் சிலம்பரசன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இணையும் திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அரசன் ( முன்பு STR49) படத்தில் நடித்து வரும் சிலம்பரசன், இந்தப் படத்தைத் தொடர்ந்து STR 50 படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குவது மீண்டும் உறுதியாகி இருப்பதோடு, படம் கைவிடப்படவில்லை என்பதையும் உணர்த்தியுள்ளது.

"STR 50" தொடர்பாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் X தள பதிவிற்கு பதிலளித்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி "நமது படத்தை தொடங்க காத்திருக்க முடியவில்லை, பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிலம்பரசன்," என குறிப்பிட்டுள்ளார்.
- புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்த படம் பிப்ரவரி 6-ந்தேதி திரைக்கு வருகிறது.
- யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும் கொண்டாடப்பட்டன.
முன்னணி நடிகர்களின் வெற்றி படங்கள் மீண்டும் ரீ-ரிலீசாகும் போக்கு தமிழ் சினிமாவில் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கூட அஜித்குமாரின் 'மங்காத்தா' படம் ரீ-ரிலீசாகி வசூல் குவித்து வருகிறது.
அந்தவகையில் 2008-ம் ஆண்டில் எஸ்.சரவணன் இயக்கத்தில் சிம்பு, சனா கான், சினேகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி 'ஹிட்' அடித்த 'சிலம்பாட்டம்' படம் மீண்டும் ரிலீசுக்கு வருகிறது. புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்த படம் பிப்ரவரி 6-ந்தேதி திரைக்கு வருகிறது.

சிம்பு இரட்டை வேடங்களில் நடித்த இந்த படம் வசூல் குவித்ததுடன், சிம்புவின் திரைப் பயணத்தில் முக்கியமான படமாகவும் அமைந்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும் கொண்டாடப்பட்டன.
இந்த படம் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீசுக்கு வரவிருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.
நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார்.
இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன்மூலம் சிம்பு மற்றும் வெற்றிமாறன் உடன் முதல்முறையாக அனிருத் கூட்டணி சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், சிம்புவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வெளிநாட்டில் ஷாப்பிங் சென்ற சிம்பு அட்வைசும் வழங்கியுள்ளார்.
அதில்," வெளிநாட்டிற்கு போனீங்கனா ஷாப்பிங் செய்யுங்க.. பொருட்களை வாங்குங்க.. ஆனா, விலை மட்டும் கேட்டுடாதீங்க.. தலை சுத்திடும்.. நேரா போய் பணத்த கட்டிட்டு அப்புறம் அந்த பொருள் எவ்வளவு காசு என பாத்து மனச தேத்திக்கோங்க.." என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியீடு.
- கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார்.
தமிழ் சினிமா ரசிகர்களால் சிம்பு என்று அழைக்கப்படும் சிலம்பரசன், தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இது, அவர் தயாரிக்கும் 47வது திரைப்படமாகும்.
இப்படத்தில் STR முற்றிலும் இளமையான தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார் என்ற தகவல் வெளியானது. இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் அறிவிப்பு வீடியோ படமாக்கப்பட்ட நிலையில் அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
அதன்படி, படக்குழு ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டது.
- டி.ராஜேந்தர், டி ஆர் டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
- மீண்டும் திரையில் டி.ராஜேந்தரின் "உயிருள்ளவரை உஷா"!
டி.ராஜேந்தர், டி ஆர் டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். அதன் தொடக்கமாக செப்டம்பர் மாதம் வெளியாகிறது புதிய டிஜிட்டல் இசையோடு, நவீன தொழில்நுட்ப கலையோடு 4k-யில், மீண்டும் திரையில் டி.ராஜேந்தரின் "உயிருள்ளவரை உஷா"!
டி.ராஜேந்தர், நளினி, சரிதா, ராதாரவி, கவுண்டமணி, வெண்ணிற ஆடை மூர்த்தி, அமரர்களான கங்கா, எஸ்.எஸ்.சந்திரன், இடிச்ச புளி செல்வராஜ், காந்திமதி மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்!
மேலும், மைதிலி என்னை காதலி, ஒரு தலை ராகம், என் தங்கை கல்யாணி, டி.ஆர்.சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை', சரவணா, இது நம்ம ஆளு, மோனிஷா என் மோனலிசா, சொன்னால் தான் காதலா, சின்னஞ் சிறுவனாக, கதையின் நாயகனாக டி.ஆர்.சிலம்பரசன் நடித்த 'எங்க வீட்டு வேலன்' போன்ற திரைப்படங்களையும் மீண்டும், டி.ஆர்.டாக்கீஸ் வெளியிடுகிறது!
இந்தத் திரைப்படங்களின் புரமோஷனுக்காக டி.ஆர்.டாக்கீஸ், ஒரு யூடியூப் சேனலாகவும் விரைவில் வெளிவருகிறது!
- மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
- திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
திரைப்படத்தில் சிம்புவின் இண்ட்ரோ பாடலான ஓ மாறா பாடலின் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை பால் டப்பா எழுதி பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.






