என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுதம் வாசுதேவ் மேனன்"

    • திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவை கொண்டாடினார்.
    • புதிய நடிகரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளேன்.

    தமிழ் திரையுலகில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் கவுதம் வாசுதேவ் மேனன். இயக்கம் மட்டுமின்றி பல திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இடையில் திரைப்படங்களை தயாரிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவை கொண்டாடினார்.

    இதனிடையே சமீபத்திய பேட்டியளித்த கவுதம் வாசுதேவ் மேனன், "எனது அடுத்த படத்திற்காக ஒரு காதல் கதையைத் தயார் செய்து வைத்திருக்கிறேன். இப்போது பெரிய ஹீரோக்கள் யாரும் காதல் கதைகளில் நடிக்கத் தயாராக இல்லை. அதனால், நான் இளம் நடிகர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன், மேலும் அதில் ஒரு புதிய நடிகரை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்.

    நானும் சிலம்பரசனும் கூட இதற்கு முன்பு 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இல்லாததால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதனால் நாங்கள் 'வெந்து தணிந்தது காடு' படத்தை செய்தோம்.

    இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் காதல் கதை, இரண்டு பேருக்கு இடையேயான ஒரு தூய்மையான நாடகமாகும். ஜென்-இசட் தலைமுறையினரின் காதல் வித்தியாசமானது என்று பலர் சொல்கிறார்கள், ஆனால் காதலின் மொழி இப்போது மாறிவிட்டது என்று நான் நினைக்கவில்லை," என்றார்.

    • சட்ட சிக்கல்கள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளன.
    • இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

    இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் - நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "துருவநட்சத்திரம்". ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தின் ரிலீஸ் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பிலேயே இந்தப் படம் இருக்கிறது.

    சட்டரீதியிலான சிக்கல்கள் காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போனது. இந்த நிலையில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் "துருவநட்சத்திரம்" பட பிரச்சினை குறித்து புதிய தகவல் கொடுத்துள்ளார். அதன்படி இந்தப் படத்திற்கு இருந்த சட்டரீதியிலான பிரச்சினைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசும் போது, "2018ஆம் ஆண்டு இந்தப் படத்தை யூனிவர்ஸ் போன்று உருவாக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனினும், படத்தின் பிரச்சினைகளை தீர்க்கவே அதிக காலம் கடந்துவிட்டது. எங்களுக்கு பணத்தேவை இருந்ததால், இந்தப் படத்திற்கு லியோ திரைப்படம் மிகவும் உதவிகரமாக இருந்தது."

    "படத்தின் ரிலீசை ஒட்டி நாங்கள் சில சட்டரீதியிலான பிரச்சினைகளை எதிர்கொண்டோம். அவற்றை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறோம். தற்போதைக்கு ஒரேயொரு பிரச்சினை தான் மீதமுள்ளது. வரும் வாரத்தில் அதுவும் முடிக்கப்பட்டு விடும்," என்றார்.

    முன்னதாக திரைத்துறையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் இசைக் கச்சேரியில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த கவுதம் மேனன், படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று கூறியிருந்தார். தற்போது படத்தின் பிரச்சினைகள் முடிந்துள்ளதாக கூறியிருப்பதை அடுத்து விரைவில், "துருவநட்சத்திரம்" படத்தின் புதிய ரிலீஸ் தேதியை எதிர்பார்க்கலாம். 

    • சவால்கள் நிறைந்த துறையில் 25 ஆண்டுகள் என்பது ஒரு தனிப்பட்ட சாதனை அல்ல.
    • எனது ஆழ்ந்த நன்றியும் அன்பும் கலைஞர்களுக்கே உரித்தானது.

    தமிழ் திரையுலகில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி சில தினங்களுக்கு முன் சிறப்பு இசைக்கச்சேரி நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

    "கால் நூற்றாண்டு காலக் காட்சிகளும் உணர்வுகளும்: திரைப்படம் என்பது வெறும் அசைவு படங்களை பதிவு செய்வது மட்டுமல்ல, அது காலத்தையே பதிவு செய்வது என்று அடிக்கடி சொல்லப்படுவதுண்டு. நான் முதன்முதலில் "ஆக்ஷன்" என்று குரல் கொடுத்த நாளிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் இந்த தருணத்தில், கடந்து போன காலத்தால் அல்ல, அந்த காலம் எனக்கு வாரி வழங்கிய நினைவுகளின் பெருக்கத்தால் நான் திக்குமுக்காடி போகிறேன்.

    இந்த அற்புதமான, சவால்கள் நிறைந்த துறையில் இருபத்தைந்து ஆண்டுகள் என்பது ஒரு தனிப்பட்ட சாதனை அல்ல. அது, என்னுடன் பயணித்த எண்ணற்ற தனிநபர்களின் கனவுகள், அர்ப்பணிப்பு மற்றும் திறமையால் நெய்யப்பட்ட ஒரு கலைப்படைப்பு.

    எனது ஆழ்ந்த நன்றியும் அன்பும் கலைஞர்களுக்கே உரித்தானது: என் மனதில் இருந்த கற்பனை கதாபாத்திரங்களுக்கு ஒரு ஆன்மாவையும், ஒரு குரலையும், ஒரு இதய துடிப்பையும் வழங்கிய நடிகர்களே. என் வார்த்தைகளுக்கு நீங்கள் உயிர் கொடுத்தீர்கள்; பல சமயங்களில், கதாபாத்திரங்களில் நான் உணராத ஆழங்களை கண்டறிந்தீர்கள்.

    என் படக்குழுவினருக்கு: இருபத்தைந்து ஆண்டுகளாக என்னுடன் கேமராவுக்கு பின்னால் நின்ற, என் கற்பனையின் அமைதியான சிற்பிகளே, உங்களுக்கான என் நன்றியும் மரியாதையும், சினிமா மீது நாம் கொண்டுள்ள அன்பை போலவே ஆழமானது.

    நான் ஜாம்பவான்களின் தோள்களின் மீது நிற்கிறேன்; யாருடைய படைப்புகள் எனக்குள் அந்த தீப்பொறியை பற்ற வைத்ததோ, அந்த திரைப்பட மேதைகளுக்கும், என் ஆரம்ப கால படிகளுக்கு வழிகாட்டிய என் வழிகாட்டிகளுக்கும் - எனக்கு வழி காட்டியதற்கு நன்றி.

    என் சமகாலத்தவர்களுக்கும் சக இயக்குநர்களுக்கும், உங்கள் படைப்புகள் தினமும் எனக்கு சவாலையும் உத்வேகத்தையும் அளிக்கின்றன. கதை சொல்லும் இந்த பொதுவான பயணத்தில் நாம் பகிர்ந்துகொள்ளும் தோழமை விலைமதிப்பற்றது.

    இறுதியாக, என் அன்பான ரசிகர்களுக்கு. என் கதைகளை உங்கள் வாழ்வில் ஏற்றுக்கொண்டீர்கள், என் கதாபாத்திரங்களை உங்கள் உரையாடல்களில் வாழ அனுமதித்தீர்கள், நான் சித்தரிக்க முயன்ற அன்பு, மோதல்கள் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை தழுவிக்கொண்டீர்கள். உங்கள் அங்கீகாரமே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெகுமதி.

    #YennoduVaaVeeduVaraikkum இசை நிகழ்ச்சியில் ஒரு நம்பமுடியாத மற்றும் மறக்க முடியாத இரவை வழங்கியதற்கு நன்றி.

    நான் ஏன் இதை செய்கிறேன் என்பதை அறிந்துகொள்ள அது ஒரு ஆத்மார்த்தமான நினைவூட்டலாக இருந்தது.

    சினிமாவுடனான என் காதல் பயணம் தொடர்கிறது. அடுத்த காட்சி காத்திருக்கிறது...," என குறிப்பிட்டுள்ளார்.

    பிப்ரவரி 1ம் தேதி (நேற்றோடு) இப்படம் வெளியாகி 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

    இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் மாதவன், ரீமா சென் நடிப்பில், 2001ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி வெளியான திரைப்படம் மின்னலே.

    இளைஞர்கள் மத்தியில் இந்த படம் தனி இடத்தை பிடித்தது. நிச்சயமான பெண்ணுடன் ஏற்படும் காதல் கதையாக இந்த கதை உருவாகி இருக்கும்.

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வந்த பாடல்கள் அனைத்தும் ஹிட். மொத்தத்தில் இந்த படம் இன்று வரையிலும் எவர்கிரீன் படமாக மின்னலே உள்ளது.

    இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதி (நேற்றோடு) இப்படம் வெளியாகி 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

    இதைமுன்னிட்டு, மின்னலே' திரைப்படம் வரும் பிப்ரவரி 13ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. 

    • படத்தின் ரிலீஸ் தாமதமாகி வருகிறது.
    • துருவ நட்சத்திரம் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

    நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "துருவ நட்சத்திரம்." இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை மாற்றப்பட்டு இதுவரை ரிலீஸ் ஆகாமலேயே உள்ளது. நிதி பிரச்சினைகள் காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தாமதமாகி வருகிறது.

    இந்த நிலையில், துருவ நட்சத்திரம் ரிலீஸ் குறித்த புதிய தகவலை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் தனது 25 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் இசை கச்சேரியில் கலந்து கொண்ட கவுதம் மேனன் ரசிகர்களிடம் "துருவ நட்சத்திரம்" படத்தின் புதிய அப்டேட் கொடுத்தார்.

    இது குறித்து பேசிய அவர், ``நிதி சிக்கல்கள் காரணமாக `துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தாமதமானது. அந்த பிரச்னைகளை சமாளிக்க சில ஆண்டுகள் கழிந்துவிட்டன. தற்போது கடைசி கட்ட சவால்களை சமாளித்து வருகிறேன். படத்தின் ரிலீஸ் தேதியை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்க முடியும் என நம்புகிறேன். இப்படம் வெளியாக வேண்டும் என்பதால், வேறு படங்களை இயக்கவில்லை,'' என்றார்.

    துருவ நட்சத்திரம் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மேலும், படத்தின் டீசர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. எனினும், படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தாமதமாவது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

    • நாயகன் செல்வத்தின் மனதை பிரதிபலிக்கும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது.
    • கார்மேனி செல்வம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பாராட்டுதல்களை பெற்றது.

    பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகும் படம் கார்மேனி செல்வம்.

    இந்த படத்தில், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியா சந்திரமௌலியும், கவுதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

    இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி பாராட்டுதல்களை பெற்றது. வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் 'கார்மேனி செல்வம்' குடும்பத் திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று மாலை 5.55 மணிக்கு வெளியானது.

    நாயகன் செல்வத்தின் மனதை பிரதிபலிக்கும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது. கார்மேனி செல்வம் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் அக்டோபர் மாதம் 17ம் தேதி வெளியாகிறது.

    இப்படத்திற்கு யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையை மியூசிக் கிளவுட் ஸ்டூடியோ & டெக்னாலஜி எனும் நிறுவனம் அமைத்துள்ளது. ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பை கையாண்டுள்ளனர்.

    • ஆர்யா தற்போது முத்தையா இயக்கத்தில் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' நடித்து வருகிறார்.
    • தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

    நடிகர் ஆர்யா தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.


    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் 

    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் 

    இந்நிலையில் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இந்த போஸ்டரை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் நடிகர் ஆர்யா கருப்பு சட்டை, கருப்பு வேஷ்டி அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet).
    • இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    லியோ

    லியோ

    இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    பிறந்தநாள் கொண்டாடிய கவுதம் வாசுதேவ் மேனன்

    பிறந்தநாள் கொண்டாடிய கவுதம் வாசுதேவ் மேனன்

    இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லியோ படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை படக்குழு இணையத்தில் பதிவிட்டுள்ளது. 

    • கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.
    • இப்படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    வெந்து தணிந்தது காடு

    இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக மல்லிப்பூ என்று தொடங்கும் பாடல் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரின் முணுமுணுப்பாக இருந்தது. இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தனர்.


    வெந்து தணிந்தது காடு

    இந்நிலையில், இந்த பாடலின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மல்லிப்பூ' பாடல் யூ டியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • கமல் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் வேட்டையாடு விளையாடு.
    • இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006ம் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.


    வேட்டையாடு விளையாடு

    வேட்டையாடு விளையாடு

    இந்நிலையில் வேட்டையாடு விளையாடு படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

    • இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு.
    • இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006-ம் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.


    வேட்டையாடு விளையாடு போஸ்டர்

    வேட்டையாடு விளையாடு படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

    • இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் வேட்டையாடு விளையாடு.
    • இப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006-ம் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.



    ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. வேட்டையாடு விளையாடு படம் ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆனது. சென்னையில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகள் நிறைந்து வந்தது.




    இந்நிலையில், வேட்டையாடு விளையாடு படத்தின் மறு வெளியீட்டு வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த நிகழ்வில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×