லியோ படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கவுதம் வாசுதேவ் மேனன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet).இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
லியோ படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கவுதம் வாசுதேவ் மேனன்
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லியோ
லியோ

லியோ

இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பிறந்தநாள் கொண்டாடிய கவுதம் வாசுதேவ் மேனன்
பிறந்தநாள் கொண்டாடிய கவுதம் வாசுதேவ் மேனன்

பிறந்தநாள் கொண்டாடிய கவுதம் வாசுதேவ் மேனன்

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லியோ படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை படக்குழு இணையத்தில் பதிவிட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com