என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னல்"

    • வேப்பங்கொட்டைகளை சேகரித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்தனர்.
    • மின்னல் தாக்கி மயங்கிய நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நேற்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

    இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேப்பமரத்தடியில் வேப்பங்கொட்டைகளை சேகரித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

    அஸ்பியா பானு (13), சபிகா பானு (10) மின்னல் தாக்கி மயங்கிய நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

    • காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில், மின்னல் தாக்கியதில் 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கோராபுட், கட்டாக், கோர்த்தா, நயாகட், ஜாஜ்பூர், பாலேசோர் மற்றும் கஞ்சம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை, மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை மற்றும் மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • லெட்சுமி இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. லெட்சுமியின் மகன்களை சந்தித்து ஆறுதல் கூறி உதவித்தொகை வழங்கினார்.

    நெல்லை:

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளை ஒன்றியம், பாளை கிழக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட உடையார்குளம் பஞ்சாயத்தில் உள்ள வாகைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி (வயது 55). ஏழை விவசாயியான இவர் சில தினங்களுக்கு முன்பு கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு சென்று அழைத்து வரும்போது இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையறிந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. வாகைகுளம் கிராமத்திற்கு நேரில் சென்று குடும்ப தலைவியை இழந்து தவிக்கும் அப்பெண்ணின் மகன்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு உதவித்தொகையும் வழங்கினார்.

    அவருடன் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி,மூத்த காங்கிரஸ் தலைவர் புத்தனேரி சண்முகம்,மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, பாளையங்கோட்டை வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கனகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் இட்டமொழி நம்பித்துரை, இளைஞர் காங்கிரஸ் நாங்குநேரி தொகுதி தலைவர் ராஜ்குமார், உடையார்குளம் பஞ்சாயத்து காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் உச்சிமாகாளி, கிராம காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் சங்கரகோனார், முத்துபாண்டி, கண்ணன் மற்றும் வாகைகுளம் ஊர் பெரியவர்கள் உடன் இருந்தனர்.

    • 3 மணி நேரம் இடைவிடாமல் பெய்தது
    • வியர்வையில் குளித்தவர்கள் மழையில் நனைந்தனர்

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் கோடை வெயில் கடந்த இரண்டு வாரங்களாக சுட்டெரித்து வருகிறது. தாங்க முடியாத வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். இன்னும் சில நாட்கள் வெயிலின் தாக்கம் இதே போல் தான் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3. 45 மணிக்கு திடீரென்று இடி, மின்னலு டன் மழை கொட்டத் தொடங்கியது. காலை 6.45 மணி வரை 3 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்த மழையால் நகரில் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சவேரியார் கோவில் சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, ஈத்தாமொழி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் போக முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நாகர்கோவிலில் பெய்த இந்த திடீர் மழை பொது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் கோடை வெயிலிலிருந்து ஓரளவு தப்பிக்க முடியும் என்று மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மழை கொட்டிய நிலையில் இன்றைய வெப்ப நிலையும் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதாவது அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரிக்கு கீழ்தான் இருக்கும் என்றும் அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் இருந்து இன்று அதிகாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் வந்தடைந்தது. இந்த  ரெயிலில் இருந்து இறங்கிய நூற்றுக்கணக்கான பயணிகள் மழை கொட்டியதை பார்த்து உற்சாகத்துடன் மழையில் நனைந்தபடியே சென்றனர். இது பற்றி அவர்கள் கூறும் போது சென்னையில் ரெயில் ஏறியதும் ரெயிலுக்குள்ளே இருக்க முடியாத அளவுக்கு வெப்பம் அனலாக தாக்கியது. நாகர்கோவில் வந்து இறங்கியதும் மழையைப் பார்த்து சந்தோஷமாக இருக்கிறது என்ற படியே மழை தண்ணீரில் உற்சாக குளியல் போட்டபடி ஊர்களுக்கு புறப்பட்டு சென்றார்கள்.

    நாகர்கோவிலில் இன்று அதிகபட்சமாக 34.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மயிலாடி, கொட்டாரம், மாம்பழத்துறையாறு, குருந்தன்கோடு பகுதிகளிலும் இன்று காலையில் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 38.87 அடியாக இருந்தது. அணைக்கு 146 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.35 அடியாக உள்ளது. அணைக்கு 95 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் போது மான அளவு தண்ணீர் உள்ள காரணத்தினாலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயி களுக்கு தேவையான விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பல்வேறு இடங்களில் சாகுபடி செய்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை பாசனத்திற்காக வழக்கம்போல் ஜூன் 1-ந்தேதி திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    • தீ வேகமாக பரவியதால் உடனடியாக செவ்வாய்ப் பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
    • அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

    சேலம்:

    சேலம் எருமாபாளையம் ராமானுஜர் கோவில் செல்லும் வழியில் ஜெயகோபால் என்பவருக்கு சொந்தமான காட்டன்மில் உள்ளது. இந்த மில்லில் பஞ்சு மற்றும் நூல் குவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், நேற்று இரவு சேலத்தில் தொடர் மழை பெய்தபோது மின்னல் மற்றும் பயங்கர சத்தத்துடன் இடி இடித்தது. அப்போது காட்டன் மில் மொட்டை மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி. அவுட்டர் மிஷின் மீது மின்னல் தாக்கியதில், அதில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு, மில்லில் உள்பகுதியில் இருந்த பால்சீலிங் தீப்பி டித்தது. இந்த தீ குபு, குபுவென எரிய தொடங்கியது. இதனால் ஆலை முழுவதும் கரும்புகை மூட்டம் நிலவியது.

    இதை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் உடனடியாக செவ்வாய்ப் பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    உதவி மாவட்ட அதிகாரி சிவகுமார், தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்ட காரணத்தினால், தீ ஆலையில் உள்ள பஞ்சு மற்றும் நூல்களில் பரவாமல் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. 

    • இரவு 7 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
    • பூதலூரில் அதிகபட்சமாக 102.60 மி.மீ. மழை பதிவானது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் சுட்டெரித்து வந்தது.

    பகல் முழுவதும் அடிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் நீடித்தது.

    இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. மாலையில் வானத்தில் கரு மேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.

    7 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.

    ஆரம்பத்தில் லேசாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக மாறியது.

    தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டியது.

    தஞ்சை அருகே பூதலூர் ,திருக்காட்டுப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

    மாவட்டத்தில் பூதலூரில் அதிகபட்சமாக 102.60 மி.மீ. மழை பதிவானது.

    இதேபோல் வல்லம், குருங்குளம், ஒரத்தநாடு, கும்பகோணம், திருவிடை மருதூர், பட்டுகோட்டை, அதிராம்பட்டினம் , மதுக்கூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடைவிடாமல் மழை பெய்தது.

    ஒரே நாளில் மாவட்டத்தில் 517.40 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.

    இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-

    பூதலூர் -102.60, திருக்காட்டுப்பள்ளி -69.20, நெய்வாசல் தென்பாதி-39.20, கும்பகோணம் -35.60, திருவிடைமருதூர் -33.60, குருங்குளம் -30.60, வல்லம் -23, தஞ்சாவூர் -19. 

    • 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் சிறப்பு அபிஷேகத்திற்கு பின்னர் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் எழுந்தருளினர்.
    • தஞ்சையில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான முத்து பல்லக்கு திருவிழா நேற்று தொடங்கியது.

    தஞ்சை சின்ன அரிசிக்காரத்தெருவில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் இருந்து விநாயகர், முருகன், மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் இருந்து விநாயகர், முருகப்பெரு மான், குறிச்சி தெருவில் உள்ள முருகன், மேல அலங்கம் சுப்ரமணிய சாமி கோவிலில் உள்ள முருகர், கீழவாசல் வெள்ளை விநாயகர், உஜ்ஜையினி காளி கோவிலில் இருந்து கல்யாண கணபதி, தெற்கு ராஜ வீதி கமலரத்தின விநாயகர், காமராஜர் காய்கறி மார்க்கெட் செல்வ விநாயகர், வடக்கு வாசல் வட பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து முருகர், விநாயகர், மேல வெளி ரெட்டிப்பாளையம் சாலை வெற்றி முருகன் உள்பட 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் சிறப்பு அபிஷேகத்திற்கு பின்னர் அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் எழுந்தருளினர்.பல்லக்குகள் பூக்களாலும், பல வண்ண காகிதங்களாலும், மின் விளக்குகளாலும் கலைநயத்துடன் வடிவ மைக்கப்பட்டு இருந்தன.

    பல்லக்குகள் அனைத்தும் தெற்கு வீதி, கீழவீதி ,மேல வீதி, வடக்கு வீதி ஆகிய 4 ராஜ வீதிகளிலும் மேள தாளங்கள் முழங்க வலம் வந்தன.

    அப்போது தஞ்சையில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.

    இருந்தாலும் மழையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முத்து பல்லுக்கு வீதி உலாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இரவில் தொடங்கிய வீதி உலா விடிய விடிய இன்று காலை வரை நடைபெற்றது.

    வீதி உலா முடிந்த பின்னர் மீண்டும் பல்லக்குகளில் இருந்து

    சுவாமிகள் தங்களது கோவில்களுக்கு சென்ற டைந்தன.

    • மதுரை திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் அருகேயுள்ள கொம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி தேவிகா(வயது38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    மதுரையில் நேற்று மாலை வெப்ப சலனம் காரணமாக இடி, மின்னலுடன் மழை பெய்தது. கொம்பாடி பகுதியில் மழை பெய்தபோது கண்மாயில் துணி துவைத்துக் கொண்டிருந்த தேவிகா அவசர அவசரமாக வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது இடி தாக்கியதில் தேவிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பெருங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது அன்ஷிகா (11) உயிரிழந்தார்.
    • ரேபரேலியில், திஹ், படோகர் மற்றும் மில் பகுதி காவல் நிலையப் பகுதிகளில் மூன்று பேர் இறந்தனர்.

    உத்தரபிரதேசத்தின் புடான், எட்டா மற்றும் ரேபரேலி மாவட்டங்களில் நேற்று மின்னல் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    விவசாயிகள் பப்லு (30) மற்றும் வர்ஜீத் யாதவ் (32) ஆகியோர் உஷைத் பஜாரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பலத்த மழையுடன் அப்பகுதியில் மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    உஷைத் நகரில் நடந்த மற்றொரு மின்னல் சம்பவத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது அன்ஷிகா (11) உயிரிழந்தார். மூன்று உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், ரேபரேலியில், திஹ், படோகர் மற்றும் மில் பகுதி காவல் நிலையப் பகுதிகளில் மூன்று பேர் இறந்தனர். மேலும், மூன்று பேர் மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்தனர்.

    திஹ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெண்டலால் கிராமத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் மோஹித் பால் (14) என்பவர் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மில் பகுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூர்வா கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஜமுனா பிரசாத் (38) என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

    ரேபரேலியின் சராய் டாமோ கிராமத்தில் படோகர் காவல் நிலையப் பகுதியில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ராமகாந்தி (38) மின்னல் தாக்கி இறந்தார். மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் மேலும் மூவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • எரிமலை வெடித்து தீக்குழம்பு வெளிவருவதுபோன்று....
    • இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்

    மெக்சிகோ நாட்டிற்கு தெற்கே உள்ள மத்திய அமெரிக்க நாடு கவுதமாலா. இது எரிமலைகள், மழைக்காடுகள் மற்றும் பண்டைய மாயன் கலாச்சாரத்தின் தாயகமாக கருதப்படுகிறது.

    இந்நாட்டில் உள்ள ஒரு எரிமலைக்கு அருகே தோன்றிய பெரிய மின்னலை காட்டும் அற்புதமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஜூலை 10-ம் தேதி ஆன்டிகுவா நாட்டிலிருந்து படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.

    அகுவா எரிமலையின் மேல் தோன்றும் இந்த மின்னல், பார்ப்பதற்கு எரிமலை வெடித்து தீக்குழம்பு வெளி வருவது போல் தெரிகிறது. இக்காட்சிகள் 3.23 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு 4,000 லைக்குகளைக் குவித்துள்ளது.

    எரிமலை வெடித்து வெளிப்படும்போது சிதறும் பாறை மற்றும் கல் துண்டுகள் டெஃப்ரா எனப்படும். இந்த எரிமலை கடின தீக்குழம்பு மற்றும் டெஃப்ரா ஆகியவற்றின் பல அடுக்குகளால் உருவாகிறது. இதனால் இது எரிமலை வகைகளில் ஸ்ட்ராட்டோ அல்லது கலவை எரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த எரிமலையின் உயரம் 12,340 அடியாகும். வீடியோவில் இந்த மின்னல் தாக்குதல், அதன் மேலே உள்ள முழு வானத்தையே ஒளிரச் செய்வது போல் தோன்றுகிறது.

    • சுஸ்ருன்னியாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
    • சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்று விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    வாஷிங்டன்:

    இந்தியாவை சேர்ந்தவர் சுஸ்ருன்னியா. இவர் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்குள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை தகவல் தொழில் நுட்பம் படித்தார். கல்லூரி படிப்பு முடிந்ததும் அவர் இன்டர்ன்ஷிப் பயிற்சி எடுத்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் ஜான்ஜசிண்டோ நினைவு இடத்தை பார்வையிட சென்றார். அப்போது அவரை திடீரென மின்னல் தாக்கியது. இதனால் அவர் அருகில் உள்ள குளத்தில் விழுந்தார். இதை பார்த்தவர்கள் சுஸ்ருன்னியாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மின்னல் தாக்கியதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மூளை பாதிக்கப்பட்டது. இதில் அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்று விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவி கோமாவில் இருக்கும் தகவல் கிடைத்து இந்தியாவில் இருக்கும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    • ஒடிசாவின் 6 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.
    • அடுத்த நான்கு நாட்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு.

    ஒடிசாவின் இரட்டை நகரங்களான புவனேஸ்வர் மற்றும் கட்டாக் உட்பட ஒடிசாவின் கடலோரப் பகுதியில் மின்னல் தாக்குதலுடன் கனமழை பெய்துள்ளது. மதியம் 90 நிமிட இடைவெளியில் முறையே 126 மிமீ மற்றும் 95.8 மிமீ மழை பதிவாகியுள்ளது.

    இந்நிலையில், ஒடிசாவின் 6 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்ததில் மின்னல் தாக்கியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதில், குர்தா மாவட்டத்தில் 4 பேரும், போலங்கிரில் 2 பேரும், அங்குல், பௌத், ஜகத்சிங்பூர் மற்றும் தேன்கனல் ஆகிய இடங்களில் தலா ஒருவர் உயிரிழந்ததாக சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதைத்தவிர, குர்தாவில் 3 பேர் மின்னல் தாக்கியதில் காயமடைந்தனர்.

    அடுத்த நான்கு நாட்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    ×