மின்னல் தாக்கி இளம்பெண் சாவு

மதுரை திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்னல் தாக்கி இளம்பெண் சாவு
Published on

மதுரை

திருப்பரங்குன்றம் அருகேயுள்ள கொம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி தேவிகா(வயது38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மதுரையில் நேற்று மாலை வெப்ப சலனம் காரணமாக இடி, மின்னலுடன் மழை பெய்தது. கொம்பாடி பகுதியில் மழை பெய்தபோது கண்மாயில் துணி துவைத்துக் கொண்டிருந்த தேவிகா அவசர அவசரமாக வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது இடி தாக்கியதில் தேவிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெருங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com