என் மலர்
நீங்கள் தேடியது "பலத்த மழை"
- வெள்ளத்தில் சிக்கி மாயமான 82 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
- காயம் அடைந்த 5 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள சிசோட்டி கிராமத்தில், கடந்த 14-ந்தேதி திடீர் மேகவெடிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடைகள், வீடுகள், ஓட்டல்கள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலியானார்கள். வெள்ளத்தில் சிக்கி மாயமான 82 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத்காதி கிராமத்தில் மேகவடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேகவெடிப்பால் 5 பேரும், நிலச்சரிவால் 2 பேரும் பலியானார்கள்.
மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். பலர் மாயமாகி உள்ளனர். சம்பவ இடத்திற்கு ராணுவ வீரர்கள், பாதுகாப்பு படையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை போலீசார், விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். காயம் அடைந்த 5 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கதுவா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகார்ட், சாங்மா கிராமங்களிலும் லகான்பூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட கில்வான்-வாட்லியும் நிலச்சரிவு ஏற்பட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்கா, முதல்-மந்திரி உமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
- ஜோசிதி கிஷ்த்வார் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது
- தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு மாநிலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் ஜோசிதி கிஷ்த்வார் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது . இந்த நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
- மண்டி மாவட்டத்தில் மட்டும் 179 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
- டெல்லி-என்.சி.ஆர். பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
சிம்லா:
இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு மாநிலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
லாஷவுல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தின் பள்ளத்தாக்கில் மேக வெடிப்பால் பலத்த மழை கொட்டியது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்பத் கிராமத்தில் நிலைமை மோசமாக உள்ளது. முன் எச்சரிக்கையாக அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிம்லா மாவட்டத்தில் பலத்த மழையால் பஸ் நிலையம் இடிந்து விழுந்தது. இதனால் அருகில் உள்ள பல கடைகள் சேதம் அடைந்தன. கர்பத், கங்குட் மற்றும் உட்கோஸ் நாலா பகுதிகளிலும் மேலும் 2 பாலங்கள் இடிந்து விழுந்தன.
மேக வெடிப்பால் 2 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மண்டி மாவட்டத்தில் மட்டும் 179 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இமாச்சலப்பிரதேசத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதேபோல தலைநகர் டெல்லியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி-என்.சி.ஆர். பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. டெல்லியில் இன்றும் பலத்த மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மாநிலங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கும் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், பிற்பகலில் திடீரென வானம் இருண்டது.
- சென்னையில் அடுத்த 1 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், பிற்பகலில் திடீரென வானம் இருண்டது. பின்னர், மிதமான மழை பெய்யத் தொடங்கியது.
சென்னையில் அடுத்த 1 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் 1 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை கொட்டும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
- காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில், மின்னல் தாக்கியதில் 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோராபுட், கட்டாக், கோர்த்தா, நயாகட், ஜாஜ்பூர், பாலேசோர் மற்றும் கஞ்சம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை, மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை மற்றும் மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுமார் 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.
- 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த வாழை, மா மரங்கள், பப்பாளி, சோளம், நெல் சேதமடைந்தது.
ஆந்திராவில் உள்ள சித்தூர், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் இரவு 7 மணி வரை சூறாவளி காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
சுமார் 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.
இதனால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தன. 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த வாழை, மா மரங்கள், பப்பாளி, சோளம், நெல் சேதமடைந்தது. ஸ்ரீகாகுளத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த சந்திப் என்பவர் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருப்பதி சம்சுக்தி நகரில் டிரான்ஸ்பார்மர் பழுது பார்த்துக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி இறந்தார். இதே போல் மாநிலம் முழுவதும் இடி மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்.
- தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை அதன் பிறகும் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சீர்காழி:
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 29ம் தேதி தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் கனமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் மாலை வரை மேகமூட்டமாக இருந்து வந்தது.
தொடர்ந்து இரவு 8 மணி முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை பெய்த நிலையில் அதன் பிறகும் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது.
இதனால் பணியை முடித்து வீடு திரும்பியவர்கள் ஆங்காங்கே மழையினால் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
இந்த மழையால் சீர்காழி நகரில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.
வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் சாலையை கடந்து சென்றனர்.சீர்காழி பழைய பேருந்து நிலையம், தேர் வடக்கு வீதி உள்ளிட்ட சாலைகளில் மழைநீருடன் கழிவு நீரும் தேங்கி நின்றதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
இந்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- பவானியில் நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
- இங்கு அதிகபட்சமாக 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
ஈரோடு:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கனமழை பொய்யாவிட்டாலும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதி களில் பரவலாக மழை பெய்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக பவானி, வரட்டுபள்ளம், அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், பவானிசாகர், கொடிவேரி, சென்னிமலை, பெருந்துறை போன்ற பகுதிகளில் மழை பெய்தது.
குறிப்பாக பவானியில் நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் இன்னும் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைய வில்லை. இனி வரும் நாட்களில் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
பவானி-23, வரட்டுபள்ளம்-7.40, அம்மாபேட்டை-6.60, குண்டேரிபள்ளம்-5.20, பவானிசாகர்-4, கொடி வேரி, சென்னிமலை-2, பெருந்துறை-1.
- ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
- தாளவாடி மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் திடீர் அருவிகள் ஏற்பட்டுள்ளன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக அம்மாபேட்டை அருகே கொண்டையம் பாளையம் தரைப்பாலம் மூழ்கி அத்தாணி-சத்தியமங்கலம் இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல் கொடிவேரி அணையில் பலத்த மழை பெய்ததால் கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குண்டேரிபள்ளம், பெரும்பள்ளம், வரட்டு பள்ளம் ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
இதேபோல் கள்ளிப்பட்டி-கோபி சாலையில் உள்ள 100 ஏக்கருக்கும் மேல் வயல்வெளியில் மழைநீர் சூழ்ந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை செய்தது. குறிப்பாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை பள்ளி கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
பள்ளி குழந்தைகள் குடை பிடித்தபடி பள்ளிக்கு சென்றனர். மாவட்டத்தில் கோபிசெட்டி பாளையத்தில் அதிகபட்சமாக 49.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதேபோல் அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், கொடிவேரி, வரட்டு பள்ளம், பவானி சாகர், ஈரோடு, சத்திய மங்கலம் போன்ற பகுதிகளி லும் பலத்த மழை பெய்தது. கொடிவேரியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் கொடிவேரி அணையில் தொடர்ந்து 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாளவாடி மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் திடீர் அருவிகள் ஏற்பட்டுள்ளன. இதேபோல் கவுந்தப்பாடி, டி.என்.பாளையம், பவானி, ஆப்பக்கூடல், அம்மாபேட்டை போன்ற பகுதிகளிலும் இன்று காலை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வாழ்க்கை முடங்கி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
கோபி-49.20, அம்மாபேட்டை-41.40, குண்டேரி பள்ளம்-31.40, கொடிவேரி-22, வரட்டுபள்ளம்-14, எலந்தகுட்டைமேடு-14, பவானிசாகர்-11.60, ஈரோடு-9, சத்திய மங்கலம்-6, பெருந்துறை-3.
- சங்கராபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை சங்கராபுரம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்தது.
- திடீரென கருமேகங்கள் திரண்டு சாரல் மழை பெய்ய தொடங்கி, பின்னர் இடி மின்னலுடன் கன மழையாக பெய்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை சங்கராபுரம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்தது. இந்த நிலை யில் சங்கராபுரம் பகுதியில் திடீரென கருமேகங்கள் திரண்டு சாரல் மழை பெய்ய தொடங்கி, பின்னர் இடி மின்னலுடன் கன மழையாக பெய்தது.
இதனால் சங்கராபுரம் பஸ் நிலையம், கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட தாழ்வான பகுதி களில் தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடியது. திடீர் மழையால் பாதசாரிகள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். இதே போல் பகண்டை கூட்டு ரோடு, அரியலூர், வானபுரம், பகுதியிலும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது.
- தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
- வெப்பம் மிகுதியின் காரணமாக கடந்த 2 நாட்களாக நள்ளிரவில் மழை பெய்து வருகிறது.
சேலம்:
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்–களுக்கு அடுத்தப்படியாக சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
சேலத்தில் கடந்த சில நாட்களாக 96 முதல் 98 பாரன்ஹீட் வெயில் நிலவி வருகிறது.
இந்த வெப்பம் மிகுதியின் காரணமாக கடந்த 2 நாட்களாக நள்ளிரவில் மழை பெய்து வருகிறது. மேலும் நேற்று நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சேலம், ஏற்காடு, மேட்டூர், அயோத்தியாப்–பட்டணம், காடையாம்பட்டி, எடப்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை 2 மணி நேரம் விடாமல் ெபய்தது. அதன் பிறகு விட்டு விட்டு மழை தூறிக்கொண்டு இருந்தது. இதனால் வீட்டில் நிலவிய புழுக்கம் நீங்கி குளிர்ச்சி நிலவியது.
இதனால் வீடுகளில் பொதுமக்கள் இரவு நிம்மதியாக தூங்கினர். இந்த திடீர் மழையால் விவசாயி–கள் மகிழ்ச்சி அடைந்துள்ள–னர். விளை நிலங்களில் சாகு–படி செய்துள்ள பயிர்களுக்கு இந்த மழை சற்று உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
- திருவண்ணாமலையில் பலத்த மழை
- போக்குவரத்து பாதிப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வருகிறது.
இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைந்து வந்தனர். கடந்த ஓரிரு தினங்களாக மாவட்டத்தில் அநேக பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இந்த நிலையில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. மதியம் சுமார் 3.30 மணியளவில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் திடீரென்று பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் பைக், காரில் சென்றவர்கள் சாலையோரம் ஒதுங்கி சென்றனர். இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. இந்த மழை நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் நின்றது. அப்போது போளூர் செல்லும் சாலையில் வெள்ளப்பெருக்கெடுத்து சாலையோரம் நின்று இருந்த வாகனங்கள் மற்றும் காய்கறி கடைகள் அனைத்தும் முழுகடித்து சென்றன.
இதனால் பள்ளி மாணவர்களும் சாலையில் ஒரே நேரத்தில் சென்றதால் திருவண்ணாமலை நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த பலத்த மழையினால் சுமார் 2 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. சில இடங்களில் சாலையில் வைக்கப்பட்டு இருந்த பேரிகார்டுகள் சரிந்து விழுந்து கிடந்தது. மேலும் திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலையில் கிளிப்பட்டு அருகே சாலையோரம் இருந்த புளிய மரம் சரிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனை போலீசார் சீர் செய்தனர்.






