என் மலர்

  நீங்கள் தேடியது "Record"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம் மாநகரில் கடந்த 1ந் தேதி முதல் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீஸ் ஆணையர் உத்தரவிட்டார்.
  • இந்நிலையில் ஹெல்மெட் அணியாத வாகனங்களுக்கு 10 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

  சேலம்:

  சேலம் மாநகரில் கடந்த 1ந் தேதி முதல் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீஸ் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார்.

  தொடர் கண்காணிப்பு

  இதையடுத்து சேலம் மாநகரில் 23 இடங்களில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் கடந்த 1ந் தேதி தொடங்கி 10ந் தேதி வரையிலான 10 நாட்கள் ஹெல்மெட் அணியாத 10 ஆயிரம் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதக்கப்பட்டது.

  ரூ.10 லட்சம் அபராதம்

  அதன் படி 10 நாட்களில் ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் தங்களின் பாதுகாப்பை உணர்ந்து தலைகவசம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜலகண்டாபுரம் அருகிலுள்ள தோரமங்கலம் பகுதியில் லாரி பட்டறை அகற்றகோரி தகராறு செய்தார்.
  • வாய்த்தகராறு முற்றிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

  தாரமங்கலம்:

  ஜலகண்டாபுரம் அருகிலுள்ள தோரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 30). இவர் தாரமங்கலம் குறுக்குப்பட்டியில் முருகேசன் என்பவரின் நிலத்தில் லாரி பட்டறை வைத்து தொழில் செய்து வந்தார் .

  நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த குழந்தைவேல் என்பவர் பிரவீன் குமாரிடம் வந்து நீங்கள் பட்டறை வைத்துள்ள இடம் எனக்கு சொந்தமானது என்று கூறி தகராறு செய்தார்.

  வாய்த்தகராறு முற்றிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

  இதுபற்றிய புகாரின் பேரில் பிரவின்கு மார், குழந்தைவேல் ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உலக ஆணழகன் சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது.
  • 65 கிலோ எடைபிரிவில் இளஞ்செழியனுடன் 50 பேர் பங்கேற்றனர்.

  புதுச்சேரி:

  தாய்லாந்து நாட்டில் கிராண்ட் சென்டர் பாயிண்ட் டெர்மினல் நகரில் கடந்த 16-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை உலக ஆணழகன் சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது.

  இதில் 25-க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் இந்தியா சார்பில் புதுவை தேங்காய் திட்டை சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் பயிற்சியாளர் மணிகண்டன் தலைமையில் பங்கேற்றார். 65 கிலோ எடைபிரிவில் இளஞ்செழியனுடன் 50 பேர் பங்கேற்றனர். இதில் இளஞ்செழியன் 4-ம் இடம் பெற்று சாதனை படைத்தார். இதையடுத்து நாட்டுக்கும் புதுவைக்கும் பெருமை சேர்ந்த இளஞ்செழியனை புதுவை மாநில ஒருங்கிணைந்த அனைத்து விளையாட்டு வீரர்கள் நலச் சங்க தலைவர் இளங்கோவன், துணை தலைவர் மதி ஒளி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இரு துணை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் வருகிற 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • பழைய ஆதார் அட்டையில் பெயர் முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய ரூ.50-ம், பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

  வேதாரண்யம்:

  பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் பழனிச்சாமி வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது

  பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள வேதாரண்யம் தாலுகா தகட்டூர் தலைஞாயிறு,அக்கிரகாரம் ஆகிய இரு துணை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் வருகிற 9ஆம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் நடைபெற உள்ளது.முகாமில் இலவசமாக புதிதாக ஆதார் பதிவு செய்யலாம். பழைய ஆதார் அட்டையில் பெயர் முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய ரூ.50-ம் ,பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தகுந்த ஆவணங்களை கொண்டு வந்து ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மென்பொருள் சோதனை போட்டியில் பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
  • இந்த போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆர். கல்விக்குழும மாணவர்கள் 18 பேர் தேர்ச்சி பெற்று தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றனர்.

  சிவகாசி

  சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் உலக அளவில் ஐ.இ.இ. சமூகம் சார்பில் அமெரிக்கா விலுள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் கணிப்பொறியியல் துறை நடத்திய உலக அளவிலான மென்பொருள் சோதனை (சாப்ட்வேர் டெஸ்டிங்) போட்டியில் கலந்து கொண்டு அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். உலகின் பல்வேறு பகுதிகளின் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்க ழகங்களின் மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆர். கல்விக்குழும மாணவர்கள் 18 பேர் தேர்ச்சி பெற்று தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றனர்.

  தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் தாளாளர் சோலைசாமி, இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர்கள் விஷ்ணுராம், பாலசுப்ரமணியன், டீன் மாரிச்சாமி, கணிப்பொ றியியல் துறைத்தலைவர் ராமதிலகம் ஆகியோர் வாழ்த்தினர்.

  இது போன்ற உலக அளவிலான போட்டிகள் மென்பொருள் துறையில் தற்போதைய ஆராய்ச்சிகளையும் அத்துறை சார்ந்த நுணுக்கங்களை அறிந்து கொள்ள உதவுவதோடு மாணவர்கள் உலக அளவிலான சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் வளர்த்துக் கொள்ள ஒரு பாலமாக அமைகிறது என்று பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் தாளாளர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேர்வு எழுதிய 212மாணவ-மாணவிகளில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 24 பேரும் 500 மதிப்பெண்களுக்கு மேல்50 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
  • பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் ஷரண்யா ஸ்ரீ 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்றார்.

  தென்காசி:

  தென்காசி பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2022-ம் ஆண்டு நடைபெற்ற பிளஸ்-௧ பொதுத்தேர்வில் 212 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

  பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் ஷரண்யா ஸ்ரீ 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், ஐஸ்வர்யா 587 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும் அனுஷ்யா மற்றும் சிவரஞ்சனி ஆகிய இருவரும் 582 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர். தேர்வு எழுதிய 212மாணவ-மாணவிகளில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 24 பேரும் 500 மதிப்பெண்களுக்கு மேல்50 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

  கணக்கு பதிவியலில் 3 மாணவர்களும் கணினி அறிவியலில் 2 மாணவர்களும் கணினி பயன்பாடுகள் பாடத்தில் 2 மாணவர்களும் இயற்பியல் பாடத்தில் 2 மாணவர்களும் பொருளியல் பாடத்தில் 1 மாணவரும் கணித பாடத்தில் 2 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

  பள்ளிக்கு பெருமை சேர்த்த பள்ளி மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் ஆர்.ஜெ.வி. பெல், செயலாளர் கஸ்தூரி பெல், பள்ளி முதல்வர் ராபர்ட் பென், தலைமை ஆசிரியர் ஸ்டீபன் மற்றும் அனைத்து ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரசு பொது தேர்வு முடிவுகள் விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

  விழுப்புரம்:

  விழுப்புரம் திரு.வி.க. வீதியில் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. தற்போது வெளியான பிளஸ்-2 தேர்வில் மாணவி சரஸ்வதி 594 மதிப்பெண் பெற்று முதல் இடத்ைத பிடித்து உள்ளார். 2-ம், இடத்தை மாணவி அபிநயா, 3-ம் இடத்தை மாணவன் ரேஷிநாத், 4-ம் இடத்தை மாணவி பிரிய வர்தனா (583/600), 5-ம் இடத்தில் மாணவன் வாஞ்சிநாதன் (582/600) மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்து உள்ளனர். 10-ம் வகுப்பு பொது தேர்வில் அதிகபட்சம் மதிப்பெண்களை பெற்ற மாணவி ஐஸ்வர்யா (495/500) முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தில்மாணவி அம்ரூதா (481/500), மூன்றாம் இடத்தில் மாணவி ஜெயவர்ஷினி (476/500), நான்காம் இடத்தில் மாணவி இவாஞ்சிலின் மோனிக்கா (475/500), ஐந்தாம் இடத்தில் மாணவி தாரணி (473/500), லாவண்யா (473/500) மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

  சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின்சேர்மன் டாக்டர் எஸ். ரவீந்திரன், பொருளாளர் எம். சிதம்பரநாதன், மேளான் டிரஸ்டி ஜி. முத்து சரவணன் ,தாளாளர் எம்.ராஜசேகரன், பள்ளியின்முதல்வர்ஆர். யமுனாராணி, துணை முதல்வர் எம்.சாந்தி, ஆசிரியர்கள்,ஊழியர்கள் அனைவரும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்கள்.மேலும் இந்த கல்வி ஆண்டில்மாணவ/ மாணவியர்கள் மேற்படிப்பிற்கான அனைத்து விதமான நுழைவுதேர்வுகளையும் எதிர்கெள்ளும் வகையில் பள்ளியின் முதல்வர் மற்றும்ஆசிரியர்கள் திறன்படசெயல்படுவதாக தாளாளர்தெரிவித்துள்ளர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிளஸ்-2 பொதுத்தேர்வில் தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப்பள்ளி சாதனை படைத்துள்ளனர்.
  • சிறந்த மதிப்–பெண் பெற்ற மாணவ-மா ண–வி–களை பள்ளி தாளாளர் மணிமா–றன் பரிசு வழங்கி பாராட்டினார்.

  கள்ளக்குறிச்சி:

  பிளஸ்-2 பொதுத்தேர்வில் தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 99.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய 616 மாணவ-மாணவிகளில் 613 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 580 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேரும், 560 மதிப்பெண்களுக்கு மேல் 55 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 88 பே ரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 246 மாணவ-மாணவிகளும் பெற்றனர்.

  அதேபோல் கணித பாடத்தில் 12 பேர், வேதியியலில் 17 பேர், இயற்பியலில் 4 பேர், உயிரியலில் 2 போ், கணினி அறிவியலில் 8 பேர், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் ஒருவர், கணக்குப்பதிவியலில் 2 பே ர் என மொத்தம் 46 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். மாணவி ஜான்சிராணி 600-க்கு 589, மாணவர்கள் ராம்குமார்-588, சாய்கணேஷ் மற்றும் மதன் மோகன் ஆகியோர் தலா 587 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் மணிமாறன் பரிசு வழங்கி பாராட்டினார். அப்பொழுது பள்ளி முதல்வர் கலைச்செல்வி, துணை முதல்வர் முத்துக்குமரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடன் இருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாலசுப்பிரமணியம் என்பவா் 75 கிலோ பிரிவில் தலா 4 தங்கப் பதக்கங்கள் பெற்றாா்.
  • வீரா்கள் இருவருக்கும் பொதுமக்கள் மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக அழைத்துச் சென்றனா்.

  அவினாசி :

  ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டி கோவை சரவணம்பட்டி குமரகுரு கல்லூரி வளாகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.

  இதில், அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் என்பவா் 75 கிலோ பிரிவில் ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ், டெட் லிப்ட் ஆகிய உள் பிரிவுகளில் தலா 4 தங்கப் பதக்கங்கள் பெற்றாா்.

  அவிநாசி நாயக்கன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் 150 கிலோ பிரிவில் வெள்ளியும், ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ் ஆகிய உள்பிரிவுகளில் தங்கம், டெட் லிப்ட் பிரிவில் வெண்கலம் என 4 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தாா்.அவிநாசிக்கு வந்த வீரா்கள் இருவருக்கும் பொதுமக்கள் மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக அழைத்துச் சென்று, பாராட்டுத் தெரிவித்தனா்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாநில ஸ்டேர் அமெச்சூர் பாக்சிங் போட்டியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 14 பதக்கம் வென்றனர்.
  • கரூர் திரும்பியவர்களுக்கு உற்சாக வரவேற்பு

  கரூர்:

  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தமிழ்நாடு ஸ்டேர் அமெச்சூர் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் 47 கிலோ எடை பிரிவில், பாலாஜி வெள்ளி, 36 கிலோ எடை பிரிவில் பூபேஷ் வெண்கலம், 12 வயதுக்கு உட்பட்டோடர் பிரிவில் 28 கிலோ எடை பிரிவில் சுஜித்குமார் வெண்கலம், 17 வயதுக்குட்பட்டோர் 65 கிலோ எடை பிரிவில் ஹேமலதா தங்கம், 14 வயதுக்குட்பட்டோர் 65 கிலோ எடை பிரிவில் ஜெய்ஸ்ரீ தங்கம், 12 வயதுக்குட்பட்டோர் 38 கிலோ எடை பிரிவில் சவுபாக்யா வெள்ளி.

  14 வயதுக்கு உட்பட்டோர் 40 கிலோ எடை பிரிவில் லோகபிரகாஷ் வெண்கலம், 47 கிடை எடைபிரிவில் சிவனேஷ் வெள்ளி, 14 வயதுக்கு உட்டோர் 38 கிலோ எடை பிரிவில் கவுதம் வெண்கலம், 27 வயதுக்கு உட்பட்டோர் 60 கிலோ எடைபிரிவில் ஆகாஷ் தங்கம், 14 வயதுக்கு உட்பட்டோர் மியூசிக் பார்மில் ஜி.ரம்யா, தேவஸ்ரீ, சபிதா ஆகியோர் தங்கப்பதக்கம் என கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் தங்கம், 3 பேர் வெள்ளி, 4 பேர் வெண்கலம் என 14 மாணவ, மாணவிகள் பதக்கங்களை வென்றனர். வென்றனர்.

  போட்டியில் வெற்றி பெற்று கரூர் திரும்பிய மாணவ, மாணவிகளை தலைமை பயிற்சியாளரும், கரூர் மவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் செயலாளருமான ரவிகுமார், முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷணன் ஆகியோர் பாராட்டினர்.  

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தாராபுரம் சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
  • 150 கிலோ எடையுள்ள பளுதூக்கி தன்னுடைய சாதனையை தானே முறியடித்துள்ளார்.

  திருப்பூர்:

  திருப்பூரைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஆதித்யா தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வருகிறார் .

  இந்நிலையில் பளுதூக்குதலில் ஏற்கனவே கோவையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 135 கிலோ பளு தூக்கி நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை நிகழ்த்தியுள்ள நிலையில் அதனை முறியடிக்கும் வகையில் 140 கிலோ பளு தூக்கி அதனை நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்கு அனுப்பி உள்ளார் .அது அங்கீகாரம் பெற்று இன்று கோவையில் நடைபெறும் விழாவில் அங்கீகார சான்றிதழ் பெற உள்ளார்.

  இந்நிலையில் தன்னுடைய 140 கிலோ சாதனையை முறியடிக்கும் வகையில் இன்று 150 கிலோ எடையுள்ள பளுதூக்கி தன்னுடைய சாதனையை தானே முறியடிதுள்ளார். இதனையும் உலக சாதனை அங்கீகாரம் பெற அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாட்னாவில் இருந்து வந்த ஊழியர்கள் புதிய தொழில்நுட்பத்துடன் 20 சதவீத செலவில் வீட்டை பழமை மாறாமல் 5 அடி உயர்த்தி கட்டி சாதனை படைத்து உள்ளனர்.
  திருவொற்றியூர் :

  திருவொற்றியூர் கலைஞர் நகர் 9-வது தெருவில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன்- பிரீத்தி தம்பதி. இவர்கள் சுமார் 35 வருட பழமையான வீட்டில் வசித்து வருகின்றனர். அந்த தெருவில் மாநகராட்சி சார்பில் பலமுறை சாலைகள் போட்டு உள்ளனர். மேலும் இவரது வீட்டின் அருகே புதிய வீடு கட்டுபவர்கள் மேடாக கட்டியதால் இவரது வீடு தாழ்வானது.

  இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் இவரது வீட்டுக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. அடிக்கடி இதுபோல் நடப்பதால் வீட்டுக்குள் வசிக்க முடியாமலும், வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமலும் தவித்து வந்தனர். இதனால் ராமகிருஷ்ணன், தனது வீட்டை பழமை மாறாமல், அதே நேரத்தில் 5 அடி உயரத்துக்கு தூக்கி கட்ட விரும்பினார்.

  இதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள பாட்னாவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர்கள் மூலம் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் வீட்டின் தரைத்தளத்தை சுமார் 5 அடி உயரம் தூக்கி கட்ட முடிவு செய்தார். அதன்படி 45 ஜாக்கிகளை கொண்டு 40 ஊழியர்கள் வீட்டின் கட்டிடத்தை அறுத்து எடுத்து கான்கிரீட் போட்டு பழமை மாறாமலும், வீட்டில் எந்த விரிசலும் ஏற்படாமலும் தரையில் இருந்து சுமார் 5 அடி உயரத்துக்கு உயர்த்தி கட்டிமுடித்தனர்.

  இது குறித்து வீட்டி