search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    23 மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவிகள்
    X

    23 மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவிகள்

    • திருச்சியில் உலக சாதனைக்காக நடத்தப்பட்டது
    • 390 மாணவிகள் சுழற்சி முறையில் சிலம்பம் சுற்றினர்

    திருச்சி,

    திருச்சி அரவிந்த் கல்வி மற்றும் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் முப்பெரும் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. விழாவை கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை தாங்கி சாதனை நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.முதலாவதாக தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 390 மாணவ, மாணவிகள் சுழற்சி முறையில் 23 மணி நேரம் 23 நிமிடம் 23 வினாடி சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தனர். இரண்டாவதாகஅரவிந்த் கல்வி மற்றும் தற்காப்பு கலைக்கூட மாணவர்கள் 9 பேர் தொடர்ந்து 7 மணி நேரம் 7 நிமிடம் 7 வினாடிகள் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர். 3-வதாக ஆசான் உமா குணசேகரன் 23 நிமிடங்களில் 23 விதமான சிலம்ப ஆயுதங்களை பயன்படுத்தி சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தார்.அதைத் தொடர்ந்து சிறப்பாக சிலம்பம் சுற்றிய மாணவ மாணவிகளுக்கு நவல்பட்டு போலீஸ் பயிற்சி பள்ளியின் ஓய்வு பெற்ற கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு திருச்சி கோவிந்தசாமி பரிசுகள் வழங்கினார்.இதில் சிறப்பு விருந்தினர்களாக திருநெல்வேலி மாயன் பில்டர்ஸ் டி.டி.ரமேஷ், ஓய்வு பெற்ற திருச்சி ரோட்டரி சங்க தலைவர் வளர்மதி குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேற்கண்ட 3 சாதனை நிகழ்வுகளையும் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஜெட்லி நேரில் பார்வையிட்டு உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்தார். மேலும் இச்சாதனை ஆசியா மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்துக்கு பதிவு செய்து அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரவிந்த் கல்வி மற்றும் தற்காப்பு கலைக்கூட ஆசான்கள் முத்துராமலிங்கம், கீதா , சுதாகர் மற்றும் அரவிந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×