என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிலம்ப பயிற்சியில் உலக சாதனை
- கரூர் ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது
- பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுடன் சான்றிதழ்
கரூர்,
கரூர் கிச்சாஸ் சிலம்ப பயிற்சி பள்ளி சார்பில் வெங்கமேடு அன்னை வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2 சிலம்பம் ஆடுவது போல் வரையப்பட்ட ஓவியத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றினர். இதில் தொடர்ந்து 20 நிமிடம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். இந்நிகழ்ச்சியை கரூர் மாவட்ட விளையாட்டு வளர்ச்சிக் கழக தலைவர் புலியூர் வீர திருப்பதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார். இதில் கரூர் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளியின் முதல்வர் பகலவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story