search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் தீக்குளிக்க முயன்ற 6 பெண்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
    X

    சேலத்தில் தீக்குளிக்க முயன்ற 6 பெண்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

    • நேற்று முன்தினம் வழிபறி வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    • சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் மண் எண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி மூணாம் கரடு அடுத்த பொம்மனசெட்டிக்காடு அருகே போலீஸ்காரன் காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கோழி பாஸ்கர். இவரை நேற்று முன்தினம் வழிபறி வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில், கோழி பாஸ்கர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாக கூறி அவரது தாயார் மகாலட்சுமி (வயது 64), மனைவி உஷா (42), மகள் கவுசல்யா (22) மற்றும் உறவினர்கள் லதா (40), கீதா (40), தாரணேஸ்வரி (21) ஆகியோர், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் மண் எண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    இதனைக் கண்ட போலீ சார் அவர்களை தடுத்து நிறுத்தி டவுன் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சேலம் டவுன் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில், சேலம் டவுன் போலீசார் பாஸ்கரின் மனைவி உள்பட 6 பெண்கள் மீதும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×