என் மலர்
நீங்கள் தேடியது "ஹொம்பலே பிலிம்ஸ்"
- 'காந்தாரா' திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது.
- இப்படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கன்னடத்தில் ரிஷப்ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. அந்த வெற்றியை தொடர்ந்து 'காந்தாரா' திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது.
தற்போது 'காந்தாரா-2' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தனர். படக்குழு இதற்காக 3 ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ருக்மிணி வசந்த் படத்தில் கனகவதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் குலஷேகரன்' ஆக குல்ஷன் தேவ்வையா நடித்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. குல்ஷன் ஒரு ராஜா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ஜெயராம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இசையை அஜேஷ் லோக்நாத் மேற்கொள்கிறார். திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகிறது.
- அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மகாவதார் நரசிம்மா வெளியானது
- திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மகாவதார் நரசிம்மா கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.
திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. திரைப்படம் இதுவரை 210 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. பலரும் இப்படத்தை கடவுள் தரிசனமாக நினைத்து கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இந்தியாவில் தயாரித்த ஒரு அனிமேஷன் திரைப்படத்திற்கு இந்தளவு வசூல் பெற்ற படம் இதுவே என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
- அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மஹா அவதார் நரசிம்ஹா கடந்த வாரம் வெளியானது.
- திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மஹா அவதார் நரசிம்ஹா கடந்த வாரம் வெளியானது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகாலாதனின் கதையாகும்.
திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. திரைப்படம் முதல் நாள் வசூலாக 1.75 கோடி, 2 ஆம் நாள் 4.6 கோடி, 3-வது நாள் 9.5 கோடி ரூபாய் மற்றும் 4-5 ஆம் நாளில் 13.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மொத்தம் திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் அதிகம் வசூலிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
படத்தின் நல்ல வரவேற்பை முன்னிட்டு திரைப்படம் இலங்கை, ஆஸ்திரேலயா, மலேசியா மற்றும் யூரோப் ஆகிய மாநகரங்களில் இன்று வெளியாகியுள்ளது.
இப்படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிக்க சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த சினிமாடிக் யூவிவெர்ஸ் விஷ்ணுவின் 10 அவதாரங்களை படமாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். 2025 முதல் 2037 ஆண்டுகள் மத்தியில் இப்படங்கள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- கே.ஜி.எஃப் பாகம் 1 & 2, சலார், காந்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்தது ஹொம்பலே பிலிம்ஸ்
- வார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ஹ்ரித்திக் ரோஷன். இவர் அடுத்ததாக பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கே.ஜி.எஃப் பாகம் 1 & 2, சலார், காந்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்தது ஹொம்பலே பிலிம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிரித்திக் ரோஷன் மற்றும் ஹொம்பலே இணையும் திரைப்படம் ஒரு மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக இருக்கிறது. ஹிரித்திக் மற்றும் ஜூனியர் என்.டி ஆர் நடிப்பில் வார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.






