என் மலர்
நீங்கள் தேடியது "சாம் சிஎஸ்"
- பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார். சாம் சி.எஸ்.
- அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் புஷ்பா 2. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புஷ்பா 2 திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.
இன்னும் சில தினங்களில் இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில், புஷ்பா 2 படத்தில் பணியாற்றியது பற்றி இசையமைப்பாளர் சாம் சி.எஸ். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் படக்குழுவை சேர்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இது குறித்த பதிவில், "புஷ்பா 2 படம் எனக்கு மிகப்பெரிய பயணம். பி.ஜி.எம். பணிகளை மேற்கொள்ள செய்து அற்புதமான அனுபவத்தை வழங்கியதற்கு நன்றி மைத்ரி மூவி மேக்கர்ஸ். தயாரிப்பாளர்கள் ரவிசங்கர், நவீன் யெர்னெனி மற்றும் செர்ரி ஆகியோரது தொடர்ச்சியான ஆதரவு மற்றும் நம்பிக்கை இன்றி இது சாத்தியமாகி இருக்காது."
It's been an overwhelming journey for me on #Pushpa2 ?Thank you for considering me and giving me this wonderful experience of working on BGM @MythriOfficial This couldn't have been possible without the tremendous support and belief of my producer #ravishankar #Naveenyerneni &… pic.twitter.com/dTdqZ6OTOa
— ??? ? ? (@SamCSmusic) December 3, 2024
"அல்லு அர்ஜூன் நீங்கள் அன்பாக இருந்தீர்கள். உங்களுக்கு பி.ஜி.எம். ஸ்கோர் செய்தது எனக்கு கூடுதல் ஆர்வத்தை கொடுத்தது. உண்மையில் ஃபயராக இருந்தது. இத்தகைய பிரமாண்ட திரைப்படத்தில் உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் இயக்குநர் சுகுமார் சார். அதுவும் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகளில் பணியாற்றியது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது."
படத்தொகுப்பாளர் நவீன் நூலி சகோதரர், இந்த பணி முழுக்க தொடர்ந்து ஆதரவாக இருந்ததற்கு நன்றி. எனது குழுவினர் அனைவருக்கும் நன்றி. டிசம்பர் 5 ஆம் தேதி புஷ்பா 2 காட்டுத்தீ உலகம் முழுக்க பரவ இருக்கிறது. அதனை உங்கள் அருகாமையில் உள்ள தியேட்டர்களில் பாருங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டிமான்டி காலனி 2 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
- இந்த படம் எங்களுக்கே பயத்தைத் தருகிறது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது டிமான்டி காலனி 2. இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், டிமான்டி காலனி 2 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
விரைவில் வெளியாக இருக்கும் டிமான்டி காலனி 2 படம் குறித்து டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., "இயக்குனர் அஜய்-யிடம் இருந்து ஆரம்பிக்கிறேன். ஒரு இரையைத் தவறவிட்ட மிருகத்திற்குத் தான் அடுத்த இரையில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டுமென்று தெரியும். ஒரு கலைஞனின் படைப்பு தோற்கலாம் கலைஞன் தோற்பதில்லை."
"இந்தப்படத்தில் அஜய் மிரட்டியிருக்கிறார். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். இந்தப்படத்தில் வேலை பார்ப்பதற்காக, நான் வேறு பல படங்களை செய்யவில்லை, கொஞ்சம் வருத்தம் தான் ஆனால் இறுதியாகப் படம் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜய் கண்டிப்பாக இப்படத்தில் சிக்ஸர் அடிப்பார்."
"தயாரிப்பாளர் பாபி சார் படத்தைக் காதலித்து ரசித்து தயாரிக்கிறார். டெக்னிகல் டீம் இப்படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சி.ஜி. எல்லாம் அருமையாக வந்துள்ளது. இப்படம் எங்களுக்கே பயத்தைத் தருகிறது, ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்," என்று தெரிவித்தார்.
இப்படத்தில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
- அருண்ராஜா காமராஜின் முதல் வெப்தொடர் 'லேபில்'.
- இந்த வெப்தொடர் நாளை ஒளிப்பரப்பாகவுள்ளது.
பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அருண்ராஜா காமராஜின் முதல் வெப்தொடரான 'லேபில்' தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்க ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். பி.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர். இந்த வெப்தொடர் நாளை (நவம்பர் 10) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகவுள்ளது.
இதையடுத்து இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசியதாவது, ஹாட் ஸ்டாருக்கு நான் செய்யும் இரண்டாவது சீரிஸ் இது. சீரிஸ் என்றாலே டிவி நாடகத்துக்கு அடுத்த கட்டம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இது சினிமாவை தாண்டிய அடுத்த கட்டம். வரும் காலத்தில் சினிமாவை விட வெப் சீரிஸ் தான் பெரிதாக இருக்கும். நான் செய்து வரும் சீரிஸ்களே அதற்கு சாட்சி. அதில் ஒன்று தான் லேபில்.
நமக்கு என்று ஒரு அடையாளம் தேவை என்பதை எல்லோருமே நினைப்போம், அது மாதிரி அடையாளப் பிரச்சனையைச் சொல்லும் சீரிஸ் தான் இது. இதில் மூவி மாதிரி தான் வேலை பார்த்தோம். பாடல் எல்லாம், ஒரு கமர்ஷியல் படம் போலவே இருக்கிறது. எங்கள் டீமின் உழைப்பு உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன். அருண் ராஜாவுடன் உழைத்தது மிக மகிழ்ச்சி. ஜெய் உடன் படம் செய்திருக்கிறேன், ஆனால் இந்த சீரிஸில் அவர் தன்னை அந்த கதாபாத்திரமாகவே மாற்றி நடித்திருக்கிறார். எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர். மிகச்சிறப்பான சீரிஸாக இருக்கும் என்று பேசினார்.