search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pushpa 2"

    • இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'.
    • பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

    இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

    பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. 'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது, இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகமாகும்.

    இந்தியாவில் வெளியான படங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படமாக புஷ்பா 2 உருவெடுத்தது. இந்த நிலையில், படம் வெளியான 32 நாட்களில் ரூ. 1831 கோடியை வசூல் செய்துள்ளது.

    தற்பொழுது படத்தின் கூடுதல் 20 நிமிட காட்சியை சேர்த்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தின் வெர்ஷன் வரும் 11 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். ஏற்கனவே படத்தின் நேர அளவி 3 மணிநேரம் 20 நிமிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 20 நிமிடம் கூட்டினால் 3 மணி நேரம் 40 நிமிடங்களாக தற்பொழுது மாறியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேகம்பேட்டில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் ஸ்ரீதேஜை அல்லு அர்ஜுன் சந்திக்க சென்றுள்ளார்.
    • தெலுங்கானா மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (FDC) தலைவர் தில் ராஜுவும் உடனிருந்தார்.

     தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் கடந்த மாதம் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது.

    அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பலியானார். அவரது மகன் ஸ்ரீதேஜ் படுகாயம் அடைந்து செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சிறுவனைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் இன்று [செவ்வாய்க்கிழமை] பேகம்பேட்டில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் ஸ்ரீதேஜை அல்லு அர்ஜுன் சந்திக்க சென்றுள்ளார்.

    மருத்துவமனையில் அல்லு அர்ஜுன் இருக்கும் வீடியோக்கள் மற்றும் படங்கள் வெளியாகி வருகின்றன, வெளிவந்தன. அவருடன் அவரது குழுவினர் உடன் இருந்தனர்.

    அல்லு அர்ஜுன் மருத்துவமனைக்கு வருகை தந்தபோது, தெலுங்கானா மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (FDC) தலைவர் தில் ராஜுவும் உடனிருந்தார். சிகிச்சை பெற்று வரும் சிறுவனை சந்தித்து அல்லு அர்ஜுன் நலம் விசாரித்தார்.

    அங்கிருந்த டாக்டர்களிடம் சிறுவனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். சிறுவனின் தந்தை பாஸ்கரனுக்கு ஆறுதல் கூறினார். 20 நிமிடங்கள் ஆஸ்பத்திரியில் இருந்த அல்லு அர்ஜுன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    அல்லு அர்ஜுன் வருகையை முன்னிட்டு மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முன்னதாக ஜனவரி 5 ஆம் தேதி மருத்துவமனைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார், ஆனால் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'.
    • பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

    இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

    பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. 'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது, இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகமாகும்.

    இந்தியாவில் வெளியான படங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படமாக புஷ்பா 2 உருவெடுத்தது. இந்த நிலையில், படம் வெளியான 32 நாட்களில் ரூ. 1831 கோடியை வசூல் செய்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • மீறி வந்தால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் கடந்த மாதம் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது.

    அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பலியானார். அவரது மகன் ஸ்ரீதேஜ் படுகாயம் அடைந்து செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சிறுவனைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் செல்ல உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ராம்கோபால்பேட்டை போலீசார் அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை சந்திக்க வரக்கூடாது.

    அப்படி போலீசாரின் எச்சரிக்கையை மீறி வந்தால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு என அதில் கூறியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2024 ஆம் ஆண்டு பல திரைப்படங்கள் வெளியானது.
    • அரண்மனை 4 திரைப்படம் வெளிவந்து வெற்றியின் ஆட்டத்தை தொடங்கி வைத்தது.

    2024 ஆம் ஆண்டு பல  திரைப்படங்கள் வெளியானது. அதில் பல திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தது சில திரைப்படங்கள் வெற்றியடைந்தது. ஆண்டின் தொடக்கத்தில் பல திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் அரண்மனை 4 திரைப்படம் வெளிவந்து வெற்றியின் ஆட்டத்தை தொடங்கி வைத்தது. அதேப்போல் 2024 ஆம் ஆண்டு பல படங்களில் பார்ட் 2, 3 என வெளிவந்து பாக்ஸ் ஆபிசை நிறப்பியது. அந்த திரைப்படங்களை பற்றி இச்செய்தியில் காணலாம்

    அரண்மனை 4

    சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் சுந்தர் சி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது அரண்மனை 4 திரைப்படம். இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாகி 100 கோடி ரூபாய் வசூல் வேட்டையாடியது. இத்திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.

    புஷ்பா 2 தி ரூல்

    அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தன்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் வெளியானது புஷ்பா 2 திரைப்படம். இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். திரைப்படம் வெளியாகி பெரிய வரவேற்பு பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை இந்தி மொழியில் அதிகம் வசூலித்த திரைப்பட பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. திரைப்படம் இதுவரை 1800 கோடி ரூபாய் உலகளவில் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும்.

    பூல் புல்லையா 3

    அனீஸ் பஸ்மி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், வித்யா பாலன், மாதுரி திக்ஸித் மற்றும் டிரிப்டி திம்ரி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பூல் புல்லையா 3 திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. திரைப்படம் இதுவரை உலகளவில் 423 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்

    ஸ்ரீ 2

    நிரன் பாட் எழுத்தில் அமர் கௌஷிக் இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரதா கபூர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ஸ்ரீ 2 திரைப்படம். இப்படம் ஒரு நகைச்சுவை கலந்த ஹாரர் திரைப்படமாகும், இப்படம் மாடாக் சூப்பர் நேட்சுரல் யூனிவர்ஸ்-இன் 4 படமாகும். இப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.இப்படம் இதுவரை உலகளவில் 800 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.

    டிமான்ட்டி காலனி 2

    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது டிமான்ட்டி காலனி 2 திரைப்படம். இப்படம் ஒரு ஹாரர் திரைப்படமாக அமைந்தது. இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படம் 85 கோடி ரூபாய் வசூலில் பெற்று மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.

    விடுதலை 2

    வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி மற்றும் மஞ்சு வாரியர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது விடுதலை 2 திரைப்படம். இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் விரைவில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புஷ்பா 2 படத்திற்கு சாம் சி.எஸ். பின்னணி இசையமைத்துள்ளார்.
    • புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானது.

    இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

    பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. 'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகம் என்று தகவல் வெளியானது.

     


    இந்தியாவில் வெளியான படங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படமாக புஷ்பா 2 உருவெடுத்தது. இந்த நிலையில், படம் வெளியான 25 நாட்களில் ரூ. 1760 கோடியை வசூல் செய்ததாக படக்குழு அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படம் இதுவரை ரூ. 1799 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படம் வெளியான 28 நாட்களில் இந்த வசூல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புஷ்பா 2 படத்திற்கு சாம் சி.எஸ். பின்னணி இசையமைத்துள்ளார்.
    • புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானது.

    இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

     


    பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. 'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகம் என்று தகவல் வெளியானது.

    இந்தியாவில் வெளியான படங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படமாக புஷ்பா 2 உருவெடுத்தது. இந்த நிலையில், படம் வெளியான 25 நாட்களில் ரூ. 1760 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக படக்குழு சார்பில் போஸ்டர் வெளியிடப்பட்டது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சட்டம் அனைவருக்கும் சமமானது. இதுபோன்ற சம்பவங்களில் போலீசார் பொதுமக்களின் பாதுகாப்பை மனதில் வைத்து செயல்படுகிறார்கள்.
    • ரேவந்த் ரெட்டி தலைசிறந்த வீரர். அவர் YSRC போல் செய்யவில்லை.

    "புஷ்பா 2" படத்தின் சிறப்பு காட்சியை அல்லு அர்ஜுன் தியேட்டரில் சென்று பார்க்கும்போது கூட்டல் நெரிசல் ஏற்பட்டு 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அபாய கட்டத்தை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்தனர். ஒருநாள் இரவு முழுவதும் சிறையில் இருந்த நிலையில் இடைக்கால ஜாமின் பெற்று வெளியில் வந்தார்.

    வெளியில் வந்த அவர் பல பிரபலங்ககள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை யாரும் சென்று பார்க்கவில்லை. இது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை யாரும் சென்று பார்க்கவில்லை. ஆனால் தெலுங்கானா திரையுலகம் அல்லு அர்ஜுன் பக்கம் நிற்கிறது என தெலுங்கான மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில்தான் அல்லு அர்ஜூன் விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில துணை முதல்வராக பவன் கல்யாணிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பவன் கல்யாண் பதில் கூறியதாவது:-

    சட்டம் அனைவருக்கும் சமமானது. இதுபோன்ற சம்பவங்களில் போலீசார் பொதுமக்களின் பாதுகாப்பை மனதில் வைத்து செயல்படுகிறார்கள். எனினும், தியேட்டர் ஊழியர்கள் அங்கிருந்த சூழ்நிலை குறித்து முன்னதாகவே அல்லு அர்ஜுனிடம் தெரிவித்திருக்க வேண்டும். அவர் இருக்கையில் அமர்ந்ததும், நெரிசலை கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை முன்னதாகவே அல்லு அர்ஜுன் சந்தித்திருக்க வேண்டும். அப்படி சந்தித்திருந்தால் டென்சன் எளிதாகியிருக்கும்.

    ரேவந்த் ரெட்டி தலைசிறந்த வீரர். அவர் YSRC போல் செய்யவில்லை. அவர் சிறப்பு காட்சிகளை அனுமதித்ததுடன், டிக்கெட் விலையையும் ஏற்றினார். இருப்பினும் இந்த விஷயத்தில், அல்லு அர்ஜுன் விசயத்தில் திரைக்கு முன்னோ அல்லது பின்னோ என்ன நடந்தது என்பது எனக்கு முழுமையாகத் தெரியாது.

    ஒரு முதல்வராக என்னுடைய பொறுப்பு சட்டத்தை நிலை நாட்டுவதுதான். எனக்கு எந்த தனிப்பட்ட விருப்பங்களும் இல்லை.

    எனது சகோதரர் சிரஞ்சீவி படம் பார்க்க செல்லும்போது இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்கு மாஸ்க் அணிந்து செல்வார்.

    இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.

    • சினிமா ஹீரோக்களை ரசிகர்கள் கடவுளாகக் கருதுகிறார்கள்
    • பிரபலங்கள் தங்களது ரசிகர்களைப் பற்றி மட்டுமின்றி, பொதுமக்களின் நலனைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

    ஐதராபாத்தில் புஷ்பா-2 திரைப்படம் வெளியான போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார்.

    இந்த விவகாரம் குறித்து தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சட்ட சபையில் பேசினார். அப்போது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அந்த திரைப்படங்களுக்கான சலுகைகள் ரத்து செய்யப்படும். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவித்தார்.

    இந்நிலையில் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜ் தலைமையில் 36 பேர் கொண்ட குழுவினர் பஞ்சாரா ஹில்ஸ் காமண்ட் கண்ட்ரோல் மையத்தில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்தனர். இதில் நடிகர் அல்லுஅர்ஜூன் கைது விவகாரம் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது.

    தெலுங்கு திரைத்துறையினரிடம் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது. எந்தப் படத்திற்கும் சிறப்புக் காட்சி அனுமதி இல்லை. சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது. ரசிகர்களை கட்டுப்படுத்துவது பிரபலங்களின் பொறுப்பு. தெலுங்கு சினிமாவின் வளர்ச்சிக்கு அரசு துணை நிற்கும்" என்று தெரிவித்தார்.

    இதனிடையே சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் மருத்துவ செலவுக்கு அல்லு அர்ஜுன் சார்பில் ரூ.1 கோடியும் புஷ்பா படக்குழு சார்பில் ரூ.50 லட்சமும் படத்தின் இயக்குநர் சார்பில் ரூ.50 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.

    இந்நிலையில், அல்லு அர்ஜுனை மூத்த தெலுங்கு தயாரிப்பாளரும் இயக்குநருமான தம்மரெட்டி பரத்வாஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "ஒரு நபரின் (அல்லு அர்ஜுன்) ஈகோ மற்றும் தவறு காரணமாக ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் முன் தலைகுனிந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    சினிமா ஹீரோக்களை ரசிகர்கள் கடவுளாகக் கருதுகிறார்கள். ஹீரோக்கள் தாங்கள் செல்லும் இடமெல்லாம் கான்வாய்களில் பயணிப்பதும் ரோட்ஷோ நடத்துவதும் அதிகரித்து வருகிறது. ஒரு படம் பார்த்துவிட்டு அதிக ஆரவாரம் இல்லாமல் திரும்பினால், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது.

    முன்பு, ஹீரோக்கள் இப்படி நடந்து கொள்ளவில்லை. சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகார்ஜுனா போன்ற பழம்பெரும் நட்சத்திரங்கள் தங்கள் ரசிகர்களுடன் அடிக்கடி படங்களைப் பார்த்திருக்கிறார்கள்.

    அவர்கள் ஒரு மல்டிபிளக்ஸ் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துவிட்டு திரும்புவார்கள். அந்த இடத்தில் இருக்கும் ரசிகர்களுடன் சிறிது நேரம் பேசுவார்கள். பிறகு அவர்கள் வேறு தியேட்டருக்கு செல்வதாக இருந்தால் அதை அறிவிக்காமல் செய்வார்கள்.

    ஆனால் இப்போது, ஒரு ஹீரோ எங்கே இருப்பார் என்பதை சமூக ஊடகங்கள் தெரியப்படுகின்றன. அதனால் ஹீரோக்கள் வருவதற்கு முன்பே அவர்களைப் பார்க்க பெரும் கூட்டம் அங்கு வந்துவிடுகிறது.

    பிரபலங்கள் தங்களது ரசிகர்களைப் பற்றி மட்டுமின்றி, பொதுமக்களின் நலனைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். அவர்களின் நடிப்பு பாக்ஸ் ஆபிஸ் வசூல் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

    ஹீரோக்களும் எல்லோரையும் போல சாதாரண மனிதர்கள் தான் என்பதை நினைவில் வைத்திருந்தால், அவர்களின் செயல்பாடுகளால் இவ்வளவு குழப்பம் ஏற்பட்டிருக்காது" என்று தெரிவித்தார்.

    • புஷ்பா-2 சினிமா பார்க்க சென்ற போது நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.
    • அவரது மகன் ஸ்ரீதேஜ் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா-2 சினிமா பார்க்க சென்ற போது நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் என்பவர் படுகாயம் அடைந்தார்.

    படுகாயம் அடைந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் மருத்துவ செலவுக்கு ரூ.1 கோடி அளிப்பதாக நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியுள்ளார்.

    மேலும் அக்குடும்பத்தினருக்கு படக்குழு ரூ.50 லட்சமும் படத்தின் டைரக்டர் ரூ.50 லட்சமும் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

    • 'புஷ்பா 2' சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்தார்.
    • அவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது.

    அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'புஷ்பா தி ரைஸ்' திரைப்படம் இந்தியா முழுவதும் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பெரும் வெற்றியடைந்தது. புஷ்பா படத்துக்காக சிறந்த நடிகர் தேசிய விருது அல்லு அர்ஜுனுக்கு 2023 இல் வழங்கப்பட்டது.

    சிறந்த படம், சிறந்த இயக்குனர் தேசிய விருதும் புஷ்பா படம் பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் 'புஷ்பா 2 தி ரூல்' என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி வெளியானது.

    இதற்கிடையே 'புஷ்பா 2' சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்தார். அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே விடப்பட்டார்.

     

    மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வரும்  அவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது. அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்ததுடன், அல்லு அர்ஜூன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    முதல் மந்திரியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜூன், என்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் எந்தத் துறையையும், அரசியல்வாதியையும் குறைசொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார். அல்லு அர்ஜுன் வீட்டின் மீது ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்களை வீசிய சம்பவமும் நிகழ்ந்தது.

    எனவே அல்லு அர்ஜுன் - தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அல்லு அர்ஜுன் படங்களை மாநிலங்களில் ஓட விடமாட்டோம் என காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்,

    இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை வெளிப்படுத்தி, அவர்களை ஊக்கப்படுத்திய ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் தேசிய விருது பெறவில்லை. ஆனால், ஒரு போலீஸ்கரரை நிர்வாணமாக்கிய கடத்தல்காரருக்குத் தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது என்று தெலுங்கானா அமைச்சர் சீத்தாக்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.

     

    ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படமான ஜெய் பீம், அதிகார வர்க்கத்தால் பழங்குடியினர் படும் பாடுகளை குறித்தும், அவர்களுக்கு சட்டத்தின் மூலம் நீதி பெற்றுத்தர முடியும் என்பது குறித்தும் பேசிய படமாகும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 15 கேள்விகளுக்கு அல்லு அர்ஜுன் விரிவான பதிலளித்தார்.
    • தேவைப்பட்டால் மீண்டும் அல்லு அர்ஜுனை விசாரிப்போம்.

    திருப்பதி:

    ஐதராபாத் சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 படம் பார்க்கச் சென்று ரேவதி என்ற ரசிகை நெரிசலில் சிக்கி பலியானார்.அவருடைய மகன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த வழக்கில் தியேட்டர் உரிமையாளர் நடிகர் அல்லு அர்ஜுன் உட்பட 17 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நேற்று ஆஜராகும்படி சிக்கடப்பள்ளி போலீசார் அல்லு அர்ஜுனுக்கு சம்மன் அனுப்பினர்.

    அதன்படி அவர் காலை 11 மணிக்கு விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் 3.40 மணி நேரத்தில் 20 கேள்விகள் கேட்கப்பட்டன.

    இதில் 15 கேள்விகளுக்கு அல்லு அர்ஜுன் விரிவான பதிலளித்தார். மேலும் 5 கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதன் காரணமாக தேவைப்பட்டால் மீண்டும் அல்லு அர்ஜுனை விசாரிப்போம். அவர் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைக்கப்படலாம். அதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.


    விசாரணை முடிந்து வெளியே வந்த நடிகர் அல்லு அர்ஜுனும் இந்த வழக்கு சம்பந்தமாக எப்போது அழைத்தாலும் வர தயாராக இருக்கிறேன். போலீசாருக்கு முழுஒத்துழைப்பை அளிப்பேன் என தெரிவித்தார்.

    சம்பவத்தின் போது பவுன்சர்கள் குழுவை வழி நடத்திய அந்தோணி என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    இது ஒரு புறம் இருக்க புஷ்பா-2 பட விவகாரம் தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கானா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரபு ரெட்டி கூறுகையில்:-

    அல்லு அர்ஜுன் ஆந்திராவைச் சேர்ந்தவர். இங்கு பிழைப்புக்காக வாழ வந்தவர். அவர் முதல் மந்திரியை பற்றி பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.

    தொடர்ந்து முதல் மந்திரி குறித்து கருத்து தெரிவித்தால் அவருடைய படங்கள் தெலுங்கானாவில் ஓட அனுமதிக்க படாது என எச்சரிக்கை விடுத்தார்.

    காங்கிரஸ் எம்.எல்.சி சிந்தபாண்டு நவீன் என்பவர் ரச்சகுண்டா போலீசில் புஷ்பா 2 சினிமா குறித்து பரபரப்பு புகார் அளித்தார்.

    அதில் புஷ்பா-2 படத்தில் சில காட்சிகள் போலீஸ் அதிகாரிகளை அவமரியாதை செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×