என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mythri movie makers"

    • பிரசாந்த் நீல் - பிரபாஸ் கூட்டணியில் சலார் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
    • ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.

    கே.ஜி.எப் படங்கள் மூலம் இந்திய திரைத்துறையை கர்நாடகாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பிரசாந்த் நீல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக இயங்கி வருகிறார். பிரசாந்த் நீல் - பிரபாஸ் கூட்டணியில் சலார் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

    இதற்கிடையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதநாயகன் ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.

    பான் இந்தியா படமாக உருவாகும் இதை ரூ. 350 கோடி பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

    'NTR-31' படம் கடந்த ஜனவரியில் பூஜையுடன் துவங்கியது. ஏப்ரல் 22 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பில் ஜுனியர் என்டிஆர் கலந்துக் கொண்டார். இப்படத்திற்காக NTR 15 கிலோ எடை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

     

    இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் அடுத்தாண்டு ஜூன் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளை {மே 20} முன்னிட்டு படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

    • இயக்குனர் சுகுமார் தற்போது 'புஷ்பா -2' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

    தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த பல படங்கள் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இதன் கணக்குகளை சரியாக காட்டவில்லை என்று வருமான வரித்துறை சோதனை நடந்தி வருகிறது.

    மேலும், 'புஷ்பா' படத்தின் இயக்குனர் சுகுமார் வீட்டிலும் வரிமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று ஜூனியர் என்.டி.ஆர் அவரது 41 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • ரமாண்டமான கே.ஜி.எஃப் திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் உடன் அடுத்து படம் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார்.

    ஜூனியர் என்.டி.ஆர் தெலுங்கு சினிமாவில் முன்னணி பிரபல நடிகர்களுள் ஒருவராவார். இன்று ஜூனியர் என்.டி.ஆர் அவரது 41 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரமாண்டமான கே.ஜி.எஃப் திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் உடன் அடுத்து படம் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார். இது என்.டி.ஆர் நடிக்கும் 31 - வது திரைப்படமாகும். அதனால் இப்படத்திற்கு தற்காலிகமாக #NTR31 என பெயரிடப்பட்டது.

    என்.டி. ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் அவர்களது எக்ஸ் தளத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் #NTRNEEL  எனவும் `ஹேப்பி பர்த்டே மேன் ஆஃப் மாஸஸ் என்.டி.ஆர்' என அப்பதிவில் பதிவிட்டுள்ளனர்.

    படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறியுள்ளனர். என்.டி.ஆர் நடித்திருக்கும் தேவரா படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அஜித் குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார்.

    நடிகர் அஜித் குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி திரைப்படத்தை மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது.

    இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக்கில் இதுவரை அஜித்தை பார்த்திராத லுக்கில் இருந்தார். தற்பொழுது படத்தின் செக்கண்ட் லுக் `காட் பிளஸ் யூ மாமே' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இதில் கழுத்தில் கர்ச்சீஃப் கட்டிக்கொண்டும் 63 என்ற எண்ணுடைய சிறை சீருடை மற்றும் கண்ணில் கூலர்ஸ் அணிந்து ஸ்வேக்-காக உள்ளார்.

    இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அஜித் அணிந்திருக்கும் கண்ணாடியில் பில்லா அஜித்தின் புகைப்படம் இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் எம்மாதிரியான கதையை இயக்குகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சத்திற்கு சென்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, இந்தி மொழி, பொழுதுபோக்கு படமான "பிண்டு கி பப்பி"
    • புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடுகிறது

    ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள, இந்தி மொழி, பொழுதுபோக்கு படமான "பிண்டு கி பப்பி" இப்போது தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் "கிஸ் கிஸ் கிஸிக்" என்ற பெயரில் மார்ச் 21 ஆம் தேதி இந்தி பதிப்புடன் இணைந்து வெளியாகிறது.

    புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடுகிறது, மேலும் இப்படத்தை மிகப்பெரிய அளவில், அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் மார்ச் 8 ஆம் தேதி வெளியானது.

    காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமான "பிண்டு கி பப்பி" கவர்ச்சிமிகு இளைஞனான பிண்டு வாழ்வில் ஏற்படும் காதல் மற்றும் எதிர்பாராத திருப்பங்களைச் சொல்கிறது. அவன் ஒரு உற்சாகமான இளம் பெண்ணைச் சந்திக்கையில், அவன் வாழ்வில் பெரும் திருப்பம் ஏற்படுகிறது. ஒரு முழுமையான என்டர்டெயினராக அனைத்து அம்சங்களுடன் கூடிய காமெடிப் படமாக, இப்படம் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும்.

    தயாரிப்பாளர் விதி ஆச்சார்யா கூறியதாவது.., "பிண்டு கி பப்பி" படத்தை உருவாக்கியதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இது ஒரு அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினரை ஒன்றிணைத்து உருவான திரைப்படம், மேலும் நாங்கள் உருவாக்கிய மாயாஜாலத்தை திரையில் பார்வையாளர்கள் அனுபவிப்பதைக் காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்." என்றார்.

    இத்திரைப்படத்தில் சுஷாந்த், ஜான்யா ஜோஷி மற்றும் விதி, விஜய் ராஸ், முரளி ஷர்மா, சுனில் பால், அலி அஸ்கர், அஜய் ஜாதவ், பூஜா பானர்ஜி, அதிதி சன்வால், ரியா எஸ். சோனி, ஊர்வசி சௌஹான், பியூமோரி மேதா தாஸ், முக்ஷ்வர் மேத்தா தாஸ் மற்றும் கணேஷ் ஆச்சார்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

    விதி ஆச்சார்யா (V2S Production) தயாரிப்பில், ஷிவ் ஹரே எழுதி இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், மார்ச் 21, 2025 அன்று பிரமாண்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×