என் மலர்
நீங்கள் தேடியது "prashanth neel"
- காசிம் பாய் கதாபாத்திரத்தில் ஹரீஸ் ராய் தோன்றினார்.
- 1995 இல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன சிவராஜ் குமாரின் 'ஓம்' படத்தில் டான் ராய் என்ற கதாபாத்திரம் மூலம் கவனம் பெற்றார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018 இல் வெளியான படம் கேஜிஎஃப். இந்திய அளவில் மிகப்பெறிய வெற்றியை இப்படத்தின் 2ஆம் பாகம் 2022 இல் வெளியானது. இந்த 2 படத்திலும் காசிம் பாய் கதாபாத்திரத்தில் தோன்றி கவனம் பெற்றவர் ஹரீஸ் ராய்.
கேஜிஎஃப் மூலம் பரிட்சயமானவராக இருந்தாலும் கன்னட சினிமாவில் பல படங்களில் தோன்றியிருக்கிறார்.
குறிப்பாக 1995 இல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன சிவராஜ் குமாரின் 'ஓம்' படத்தில் டான் ராய் என்ற கதாபாத்திரம் மூலம் கவனம் பெற்றார். கடந்த மூன்று ஆண்டுகளாக புற்றுநோயுடன் ஹரீஸ் ராய் போராடி வந்தார்.
இந்நிலையில் தைராய்டு புற்றுநோய் வயிறு வரை பரவியதால் அவர் பெங்களூருவில் உள்ள கித்வாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (நவம்பர் 6) அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 55.
முன்னதாக ஒரு நேர்காணலில் தனது நோய் குறித்து பேசியிருந்த ஹரிஷ் ராய், கேஜிஎஃப் படத்தில் தாடியுடன் தோன்றியதற்கான காரணத்தை விளக்கினார்.
"புற்றுநோய் என் தொண்டையில் வீக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வீக்கத்தை மறைக்க நான் தாடியை வளர்த்தேன். "யாரும் விதியிலிருந்து தப்பிக்க முடியாது" என்று அவர் தெரிவித்திருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சிகிச்சை செலவுகள் குறித்து அவர் கூறுகையில், 'ஒரு ஊசியின் விலை 3.55 லட்சம் ரூபாய், மருத்துவர்கள் 63 நாட்களில் 3 ஊசிகள் போட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர், அதன் விலை சுமார் 10.5 லட்சம் ரூபாய்' என்று கூறி நிதி உதவி கோரியிருந்தார்.
இந்நிலையில் அவரின் மறைவு கன்னட திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
- சசிகுமார் யூடியூப் திரைப்பட விமர்சகர் பிரசாந்த்-ன் சேனலுக்கு இன்டர்வியூவ் கொடுத்தார்.
சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த படத்தின் ஹீரோவாக நடித்த சசிகுமார் யூடியூப் திரைப்பட விமர்சகர் பிரசாந்த்-ன் சேனலுக்கு இன்டர்வியூவ் கொடுத்தார்.
டூரிஸ்ட் பேமிலி படத்தின் ரிலீஸ் குறித்து இருவருக்கிடையே உரையாடல் இருந்தது. பின்னர், இன்டர்வியூவ் முடிந்த பிறகு, சசிகுமார் உடன் பிரசாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
புகைப்படம் எடுத்த சில நிமிடங்களிலேயே, பிரசாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில்" அண்ணன் சசிகுமாருடன் ஓர் அழகான உரையாடல்" என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த பதிவை பார்த்த சசிகுமார், " யோவ்.. இப்ப தானயா இந்த போட்டா எடுத்திங்க அதுக்குள்ளையுமா..." என்று நக்கலாக பதிவிட்டு, பிரசாந்தின் பதிவையும் உடன் ஷேர் செய்திருந்தார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பிரசாந்த் நீல் - பிரபாஸ் கூட்டணியில் சலார் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
- ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.
கே.ஜி.எப் படங்கள் மூலம் இந்திய திரைத்துறையை கர்நாடகாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பிரசாந்த் நீல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக இயங்கி வருகிறார். பிரசாந்த் நீல் - பிரபாஸ் கூட்டணியில் சலார் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
இதற்கிடையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதநாயகன் ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.
பான் இந்தியா படமாக உருவாகும் இதை ரூ. 350 கோடி பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
'NTR-31' படம் கடந்த ஜனவரியில் பூஜையுடன் துவங்கியது. ஏப்ரல் 22 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பில் ஜுனியர் என்டிஆர் கலந்துக் கொண்டார். இப்படத்திற்காக NTR 15 கிலோ எடை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் அடுத்தாண்டு ஜூன் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளை {மே 20} முன்னிட்டு படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
- ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார்.
- ரூ. 350 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகிறது.
கே.ஜி.எப் படங்கள் மூலம் இந்திய திரைத்துறையை கர்நாடகாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பிரசாந்த் நீல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக இயங்கி வருகிறார். பிரசாந்த் நீல் - பிரபாஸ் கூட்டணியில் சலார் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
இதற்கிடையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதநாயகன் ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.
பான் இந்தியா படமாக உருவாகும் இதை ரூ. 350 கோடி பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
'NTR-31' படம் கடந்த ஜனவரியில் பூஜையுடன் துவங்கியது. இந்நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பில் ஜுனியர் என்டிஆர் கலந்துகொள்ள உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படமானது 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.அதே நாளில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரூ. 350 கோடி பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
- அதே நாளில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படமும் வெளியாக உள்ளது.
கே.ஜி.எப் படங்கள் மூலம் இந்திய திரைத்துறையை கர்நாடகாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பிரசாந்த் நீல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக இயங்கி வருகிறார். பிரசாந்த் நீல் - பிரபாஸ் கூட்டணியில் சலார் இரண்டாம் பாகம் சுடசுட தயாராகி வருகிறது.
இதற்கிடையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதநாயகன் ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக கடந்த மே 20 ஆம் தேதி என்.டி.ஆர் பிறந்தநாள் அன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.

பான் இந்தியா படமாக உருவாகும் இதை ரூ. 350 கோடி பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
'NTR-31' படம் கடந்த ஜனவரியில் பூஜையுடன் துவங்கியது. இந்நிலையில் இந்த படமானது 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.அதே நாளில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் படம் 'சலார்'.
- இப்படத்தில் கேஜிஃப் பட புகழ் யஷ் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சலார்
இந்நிலையில் சலார் படத்தில் கேஜிஎஃப் பட புகழ் யஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் யஷின் கதாப்பாத்திரம் 7 நிமிடம் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவலால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
- பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'.
- இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார்.

சலார்
இந்நிலையில் சலார் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- 2014 ஆம் ஆண்டு வெளியான கன்னட படமான உக்ரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார் பிரசாந்த் நீல்.
- சலார் பாகம் ஒன்றை இயக்கி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகினார்
2014 ஆம் ஆண்டு வெளியான கன்னட படமான உக்ரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார் பிரசாந்த் நீல். அதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்தை இயக்கினார்.
இப்படத்தின் மூலம் உலகத்தையே கன்னட சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். கே.ஜி.எஃப் பாகம் 1 மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கே.ஜி.எஃப் பாகம் இரண்டை இயக்கினார்.
கே.ஜி..எஃப் 2 ஒரு பான் இந்திய படமாக அமைந்தது. கே.ஜி.எஃப் திரைப்படம் கன்னட சினிமாவின் அதீக வசூலித்த படங்கள் பட்டியலில் 4-ஆம் இடத்தை பெற்றுள்ளது. 1500 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக சலார் பாகம் ஒன்றை இயக்கி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகினார். சலார் வெற்றியைத் தொடர்ந்து சலார் பாகம் இரண்டை நடிகர் பிரபாஸ் வைத்து இயக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஜூலை மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஜூனியர் என்.டி.ஆரின் 31 படத்தை இயக்கவுள்ளார் அற்கடுத்து கே.ஜி.எஃப் இன் மூன்றாம் பாகத்தை இயக்கவுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மிகப்பெரிய கதாபாத்திரத்தில் அஜித் நடிப்பதாக கூறப்படுகிறது.
- இப்படம் பிரசாந்த் நீலின் யூனிவர்சிற்குள் வரும்.
'கே.ஜி.எஃப்.', 'சலார்' திரைப்படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்ததாக அஜித்துடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரசாந்த் நீல் அஜித்துடன் இரு திரைப்படங்களில் இணைய உள்ளதாகவும் அது, அஜித்தின் 64 மற்றும் 65 படங்களாகவோ அல்லது 65 மற்றும் 66 ஆவது படங்களாகவோ இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இப்படம் பிரசாந்த் நீலின் யூனிவர்சிற்குள் வரும். கே.ஜி.எஃப் 3-ல் யஷூடன் அஜித் இணைவதாகவும், அப்படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரத்தில் அஜித் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மாதம், அஜித்தும், இயக்குனர் பிரசாந்த் நீலும் 'விடாமுயற்சி' படப்பிடிப்பின் போது சந்தித்து பேசியது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படம் 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
- படப்பிடிப்பின் முதல் நாளில் கலவரக்காட்சி ஒன்றை எடுத்து உள்ளனர்.
கே.ஜி.எப் படங்கள் மூலம் இந்திய திரைத்துறையை கர்நாடகாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பிரசாந்த் நீல் அடுத்தடுத்த படங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இதற்கிடையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதநாயகன் ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக கடந்த மே 20 ஆம் தேதி என்.டி.ஆர் பிறந்தநாள் அன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.
ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இதைதொடர்ந்து, 'NTR-31' படம் கடந்த மாதம் பூஜையுடன் துவங்கியது. இந்த படமானது 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்களை விரைவில் படக்குழு முடிவு செய்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாக இன்று துவங்கியுள்ளது. முதல் நாளில் கலவரக்காட்சி ஒன்றை எடுத்து உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் படம் 'சலார்'.
- இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது.

சலார்
இந்நிலையில் 'சலார்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளார். இவரின் பிறந்த நாளான இன்று வாழ்த்து தெரிவித்து படக்குழு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது.
Thank you #HombaleFilms #PrashanthNeel #Prabhas and the entire team of #Salaar! 😊 #VardharajaMannaar will see you in theatres on the 28th of September 2023!#Salaar #TheEraOfSalaarBegins#Prabhas @prashanth_neel @VKiragandur @hombalefilms pic.twitter.com/fZ8V3BAjfl
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) October 16, 2022







