என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னட நடிகர்"

    • காசிம் பாய் கதாபாத்திரத்தில் ஹரீஸ் ராய் தோன்றினார்.
    • 1995 இல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன சிவராஜ் குமாரின் 'ஓம்' படத்தில் டான் ராய் என்ற கதாபாத்திரம் மூலம் கவனம் பெற்றார்.

    பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018 இல் வெளியான படம் கேஜிஎஃப். இந்திய அளவில் மிகப்பெறிய வெற்றியை இப்படத்தின் 2ஆம் பாகம் 2022 இல் வெளியானது. இந்த 2 படத்திலும் காசிம் பாய் கதாபாத்திரத்தில் தோன்றி கவனம் பெற்றவர் ஹரீஸ் ராய்.

    கேஜிஎஃப் மூலம் பரிட்சயமானவராக இருந்தாலும் கன்னட சினிமாவில் பல படங்களில் தோன்றியிருக்கிறார்.

    குறிப்பாக 1995 இல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன சிவராஜ் குமாரின் 'ஓம்' படத்தில் டான் ராய் என்ற கதாபாத்திரம் மூலம் கவனம் பெற்றார். கடந்த மூன்று ஆண்டுகளாக புற்றுநோயுடன் ஹரீஸ் ராய் போராடி வந்தார்.

    இந்நிலையில் தைராய்டு புற்றுநோய் வயிறு வரை பரவியதால் அவர் பெங்களூருவில் உள்ள கித்வாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (நவம்பர் 6) அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 55.

     முன்னதாக ஒரு நேர்காணலில் தனது நோய் குறித்து பேசியிருந்த ஹரிஷ் ராய், கேஜிஎஃப் படத்தில் தாடியுடன் தோன்றியதற்கான காரணத்தை விளக்கினார்.

    "புற்றுநோய் என் தொண்டையில் வீக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வீக்கத்தை மறைக்க நான் தாடியை வளர்த்தேன். "யாரும் விதியிலிருந்து தப்பிக்க முடியாது" என்று அவர் தெரிவித்திருந்தார். 

    சில ஆண்டுகளுக்கு முன்பு  தனது சிகிச்சை செலவுகள் குறித்து அவர் கூறுகையில், 'ஒரு ஊசியின் விலை 3.55 லட்சம் ரூபாய், மருத்துவர்கள் 63 நாட்களில் 3 ஊசிகள் போட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர், அதன் விலை சுமார் 10.5 லட்சம் ரூபாய்' என்று கூறி நிதி உதவி கோரியிருந்தார்.

    இந்நிலையில் அவரின் மறைவு கன்னட திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

    • அந்த டாக்ஸியிலேயே ரேணுகா சுவாமியின் உடல் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
    • தலையாமறைவான ரவி, டாக்ஸி ஊழியர்கள் சங்கத்தின் அறிவுரையை ஏற்று தற்போது சரணடைந்துள்ளதாக தெரிகிறது.

    பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் உள்ள முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கியுள்ளது. தர்ஷன் தனது காதலி பவித்ரா கௌடாவுடன் மேலும் 11 பேரை இணைத்துக்கொண்டு இந்த கொலையை அரேங்கேற்றியுள்ளதாக கூறபடுகிறது. கொலை செய்யப்பட்ட ரேணுகா சுவாமியின் உடல் பெங்களூரு காமாட்சிபாளையா பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

     

    அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்த போது முந்தைய நாள் இரவில் இரண்டு கார்கள் அங்கிருந்து சென்றது பதிவாகியிருந்தது. பின்னர் அதில் இரண்டாவது கார் நடிகர் தர்ஷனுடையது என்று கண்டறியற்பட்டது. முதலாவதாக சென்றது ஒரு டாக்ஸி ஆகும். அந்த டாக்ஸியிலேயே ரேணுகா சுவாமியின் உடல் அந்த இடத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

    இந்நிலையில் அந்த டாக்ஸியை ஓட்டி வந்த டிரைவர் ரவி தற்போது போலீசில் சரணடைந்துள்ளார். தர்சன் கைது செய்யப்படும் தலைமறைவான ரவி, டாக்ஸி ஊழியர்கள் சங்கத்தின் அறிவுரையை ஏற்று தற்போது சரணடைந்துள்ளதாக தெரிகிறது.

    டாக்ஸி டிரைவர் ரவியின் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கியமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடிகர் தர்ஷன் கொலைப் பழியை ஏற்கும் படி வேறு ஒருவருக்கு அதிக பணம் அளிக்க முயன்றுள்ளார் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

    • கன்னட திரை உலகிலும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகைகள் புகார்.
    • கன்னட திரை உலகிலும் பாலியல் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மலையாள திரை உலகில் பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பற்றி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மலையாள திரை உலகை தொடர்ந்து தமிழ் திரை உலகிலும் பாலியல் தொந்தரவு நடந்ததாக சில நடிகைகள் கூறினர்.

    தமிழ், மலையாள சினிமாவை தொடர்ந்து கன்னட திரை உலகிலும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகைகள் சஞ்சனா, நீது ஆகியோர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளனர்.

    கன்னட சினிமா உலகில் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. இதுபற்றி கர்நாடக சினிமா வர்த்தக சபை கூட்டத்தில் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொல்லை பற்றிய புகார்கள் குறித்து பேசவிடாமல் தடுத்துவிட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    இந்நிலையில் கர்நாடக முதல்மந்திரி சித்தராமையாவுக்கு கன்னட இயக்குனர் கவிதாலங்கேஷ் தலைமையிலான குழுவினர் சினிமா உலகில் பாலியல் தொல்லை பற்றி விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என கடிதம் அனுப்பினார். கன்னட திரை உலகிலும் பாலியல் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×