என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanjay Dutt"

    • அதிரடி ஆக்ஷன் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி உள்ளது.
    • தெய்வத் திருமகள் சாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் அடுத்ததாக துரந்தர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை யுஆர்ஐ தி சர்ஜிகல் ஸ்டிரைக் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் இயக்குகிறார். இப்படம் அதிரடி ஆக்ஷன் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி உள்ளது.

    இப்படத்தில் இவருடன் சஞ்சய் தத், அக்ஷயே கண்ணா, அர்ஜுன் ரம்பல், மாதவன் மற்றும் தெய்வத் திருமகள் சாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

    படத்திற்கு சச்தேவ் இசையமைத்துள்ளார். மேலும் ஜோதி தேஷ்பாண்டே, ஆதித்யா மற்றும் லோகேஷ் தர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

    • மிகுந்த வயலன்ஸ் காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக "பாகி 4" {Baaghi 4 } உருவாகியுள்ளது.

    பாலிவுட்டின் பிரபல ஆக்ஷன் ஹீரோ டைகர் ஷெராப் மற்றும் சஞ்சய் தத் இணைந்து நடிக்கும் மிகுந்த வயலன்ஸ் காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக "பாகி 4" {Baaghi 4 } உருவாகியுள்ளது.

    இந்த படத்தை சாஜித் நதியாட்வாலா எழுதி தயாரித்திருக்கிறார். படத்தை ஹர்ஷா இயக்கியுள்ளார். படத்தில் ஹர்னாஸ் சந்து, சோனம் பாஜ்வா, ஷ்ரேயாஸ் தல்பதே, சௌரப் சச்தேவா, உபேந்திர லிமாயேஉள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.டிரெய்லர் முழுவதும் ரத்தக் களரியாக அமைந்துள்ளது.

    டிரெய்லரில் டைகர் வில்லன்களை அரிவாளால் நறுக்குவது, தலையை அறுப்பது, ஒருவரின் உடலை இரண்டாக வெட்டுவது போன்ற கொடூர ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    சஞ்சய் தத்தும் அதேபோல் வன்முறையுடன் காட்சியளிக்கிறார்; ஒரு காட்சியில் துண்டிக்கப்பட்ட விரல்களுடன் விளையாடுகிறார்.

    தொழில்நுட்பக் குழு

    திரைக்கதை & உரையாடல்கள்: ரஜத் அரோரா

    ஒளிப்பதிவு: ஸ்வாமி ஜே கவுடா

    எடிட்டிங்: கிரண் கவுடா, நிதின் FCP

    இசை: பாத்ஷா, தனிஷ்க் பாக்சீ, பயல் தேவ் உள்ளிட்ட பலர்

    "பாகி 4" வரும் செப்டம்பர் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதே தேதியில் **விவேக் அக்னிஹோத்ரியின் "தி பெங்கால் ஃபைல்ஸ்"** படமும் வெளியாக உள்ளதால், பாக்ஸ் ஆபிஸில் பெரிய போட்டி காத்திருக்கிறது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • பிரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள 'கே.டி. தி டெவில்' திரைப்படம்
    • சஞ்சய் தத் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    பிரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள 'கே.டி. தி டெவில்' திரைப்படம் விரைவில் வெளியாகிறது. சென்னையில் நடந்த பட விழாவில் பிரபலங்கள் பங்கேற்று இருந்தனர்.

    அப்போது சஞ்சய் தத் பேசும்போது, ''ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோரை எனக்கு மிகவும் பிடிக்கும். லோகேஷ் கனகராஜ் மீது கடும் கோபத்தில் இருக்கிறேன். என் கதாபாத்திரத்தை 'லியோ' படத்தில் அவர் சரியாக பயன்படுத்தவில்லை. என் திறமையை வெளிப்படுத்தும் விதமான காட்சிகள் இல்லை'', என்றார் சஞ்சய் தத் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதனை லோகேஷ் கனகராஜிடம் கேட்ட போது அவர் " அந்த விழா முடித்தவுடன் சஞ்சய் தத் சார் எனக்கு கால் செய்தார். அவர் நான் நகைச்சுவையாகத்தான் கூறினேன். மீடியா அதை மட்டும் எடுத்து வைரலாக்கி வருகின்றனர்" என்றார்.

    மேலும் " அவர் கூறியது சரிதான், அவரை சரியாக பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம். வரும் படங்களில் அந்த தவறை செய்யமாட்டேன்" என கூறியுள்ளார்.

    • ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
    • சஞ்சய் தத் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    பிரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள 'கே.டி. தி டெவில்' திரைப்படம் விரைவில் வெளியாகிறது. சென்னையில் நடந்த பட விழாவில் பிரபலங்கள் பங்கேற்று இருந்தனர்.

    அப்போது சஞ்சய் தத் பேசும்போது, ''ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோரை எனக்கு மிகவும் பிடிக்கும். லோகேஷ் கனகராஜ் மீது கடும் கோபத்தில் இருக்கிறேன். என் கதாபாத்திரத்தை 'லியோ' படத்தில் அவர் முடித்துவிட்டார். என் திறமையை வெளிப்படுத்தும் விதமான காட்சிகள் இல்லை. எனவே இனி அவர் படத்தில் (எல்.சி.யூ.வில்) நடிப்பேனா? என்று எனக்கு தெரியவில்லை'', என்றார்.

    சஞ்சய் தத் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 



    • இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் அடுத்ததாக துரந்தர் படத்தில் நடித்துள்ளார்.
    • ரன்வீர் சிங் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடீயோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் அடுத்ததாக துரந்தர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை யுஆர்ஐ தி சர்ஜிகல் ஸ்டிரைக் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் இயக்குகிறார். ரன்வீர் சிங் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடீயோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் அதிரடி ஆக்ஷன் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது.

    இப்படத்தில் இவருடன் சஞ்சய் தத், அக்ஷயே கண்ணா, அர்ஜுன் ரம்பல், மாதவன் மற்றும் சாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    படத்தின் இசையை சச்தேவ் இசையமைத்துள்ளார். மேலும் ஜோதி தேஷ்பாண்டே, ஆதித்யா மற்றும் லோகேஷ் தர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    • நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் பாலிவுட் பிரபலம் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    'வாரிசு' படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

     

    தளபதி 67

    தளபதி 67

    தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.


    தளபதி 67 - சஞ்சய் தத்

    தளபதி 67 - சஞ்சய் தத்

    இந்நிலையில், தளபதி 67 படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சஞ்சய் தத் படம் குறித்து கூறிய வார்த்தைகளை குறிப்பிட்டு படக்குழு போஸ்டரை பகிர்ந்துள்ளார். மேலும் தளபதி 67 படத்தின் ஒரு வரி கதை கேட்ட உடனே நான் முடிவு செய்துவிட்டேன் இப்படத்தில் நான் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று; துடிப்புடன் இந்த பயணத்தை தொடங்குகிறேன் என்று சஞ்சய் தத் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். இதனை குறிப்பிட்டு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது.

    இதற்குமுன்பு சஞ்சய் தத் கேஜி.எஃப் 2-இல் ஆதீரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    • மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி பிரபலடமைந்தவர் லோகேஷ் கனகராஜ்.
    • இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கி வருகிறார்.

    2017ம் ஆண்டு சந்தீப் கிஷான், ஸ்ரீ நடிப்பில் வெளியான மாநகரம் படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் முன்னணி இயக்குனராக மாறினார். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட முன்னணி திரைபிரலங்களை நடிக்கவைத்து புதிய அத்தியாயம் படைத்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சஞ்சய் தத் உள்ளிட்ட பல இந்திய திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

     

    சஞ்சய் தத் - லோகேஷ் கனகராஜ்

    சஞ்சய் தத் - லோகேஷ் கனகராஜ்

    இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சஞ்சய் தத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னுடைய உடன் பிறப்பு, மகன், குடும்பம் லோகேஷ் கனகராஜ். கடவுள் உங்களுக்கு வெற்றி, அமைதி, சந்தோஷம் மற்றும் உடல் ஆரோகியத்தை கொடுப்பார். நான் எப்பொழுதும் உன் வாழ்க்கையில் இருப்பேன். லவ் யூ என்று பதிவிட்டுள்ளார்.

    • இயக்குனர் பிரேம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேடி - தி டெவில்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்துள்ள திரைப்படம் 'கேடி - தி டெவில்'. காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்ஷன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    கேடி -தி டெவில்

    1970-களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதில், ஹீரோ துருவா சர்ஜா மற்றும் சஞ்சய் தத் இருவருக்கும் இடையிலான சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டம்மி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதில், எதிர்பாராத விதமாக, டம்மி குண்டு சற்று வீரியத்துடன் வெடித்ததில் சஞ்சய் தத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கேடி -தி டெவில் படக்குழு

    மேலும், சிதறிய கண்ணாடி துண்டுகள் அவரின் முகம், முழங்கை ஆகிய இடங்களில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சஞ்சய் தத், விஜய்யின் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாலிவுட்டின் பிரபல நடிகராக இருப்பவர் சஞ்சய் தத்.
    • இவர் தற்போது 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    பாலிவுட்டின் பிரபல நடிகராக வலம் வருபவர் சஞ்சய் தத். நட்சத்திர தம்பதிகளான சுனில் தத் மற்றும் நர்கீஸ் தத் என்பவரின் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். பின்னர், 1981-ஆம் ஆண்டு வெளியான 'ராக்கி' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்.



    100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சஞ்சய் தத் பாலிவுட்டில் பல ஹீரோக்களுக்கு டப் கொடுப்பவராக உள்ளார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான 'கே.ஜி.எப்' இரண்டாம் பாகத்தில் இவர் ஏற்று நடித்திருந்த வில்லன் கதாபாத்திரமான ஆதிரா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சஞ்சய் தத்தின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.



    அந்த வீடியோவில், சஞ்சய் தத் வெறித்தனமாக மரக்கட்டை ஒன்றை வெட்டுகிறார். இதை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அவர் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், மரத்தை வெட்டுவது சிறந்த உடற்பயிற்சி. உடலின் மேற்பகுதிக்கான உடற்பயிற்சி. இதை முயற்சி செய்து பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'.
    • இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.



    இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத், லியோ படம் குறித்தும் அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்தும் சமீபத்திய பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், லியோ படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் மிக அற்புதமானது. லோகேஷ் கனகராஜ் என்னுடைய மகன் மாதிரி. தளபதி விஜய்யுடனும் படக்குழுவினருடனும் நல்ல உறவை பகிர்ந்துக் கொண்டேன் என்று பகிர்ந்துள்ளார்.

    • விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படம் உருவாகி வருகிறது.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.



    இந்நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 முதல் 6 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் சென்னை மற்றும் தலக்கோணத்தில் சிறு சிறு படப்பிடிப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவடைந்த பின்னர் விஜய் ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் தளபதி68 படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் தொடங்குவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    • விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் வெளியானது.
    • இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சர்ச்சைகளும் எழுந்துள்ளது.

    விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.




     'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதே சமயத்தில் இந்த பாடல் போதைப் பொருளை ஊக்கவிக்கும் வகையில் இருப்பதாகவும், விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.



    இந்நிலையில் லியோ படத்தில் இடம்பெற்றுள்ள "நா ரெடி" பாடல் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் போதைப் பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் இருப்பதால் தடை செய்ய வேண்டும் என சென்னை கொருக்குப்பேட்டை ஜேஜே நகரை சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் ஆண்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார்.



    தமிழக அரசும் காவல்துறையும் போதை பொருள் சம்மந்தமாக விழிப்புணர்வு நடத்தி வரும் நிலையில் ரவுடிசத்தை ஊக்கவிக்கும் வகையில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளதால் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    ×