லோகேஷ் கனகராஜ் எனக்கு மகன் மாதிரி.. லியோ குறித்து சஞ்சய் தத்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'.இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் எனக்கு மகன் மாதிரி.. லியோ குறித்து சஞ்சய் தத்
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத், லியோ படம் குறித்தும் அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்தும் சமீபத்திய பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், லியோ படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் மிக அற்புதமானது. லோகேஷ் கனகராஜ் என்னுடைய மகன் மாதிரி. தளபதி விஜய்யுடனும் படக்குழுவினருடனும் நல்ல உறவை பகிர்ந்துக் கொண்டேன் என்று பகிர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com