என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dhruva sarja"

    • கடைசியாக அஜித்தின் விடாமுயற்சி படத்தில் வில்லனாக தோன்றியிருந்தார்.
    • தமிழில் ஜெயஹிந்த், ஏழுமலை உள்ளிட்ட வெற்றிப்படங்களை அர்ஜுன் இயக்கினார்.

    நடிகர் அர்ஜுன் இயக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் அர்ஜுன் சமீப காலமாக பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அஜித்தின் விடாமுயற்சி படத்தில் வில்லனாக தோன்றியிருந்தார்.

    இந்நிலையில் நடிகரும் தன் உறவினருமான துருவா சார்ஜாவை நாயகனாக வைத்து புதிய படத்தை அர்ஜுன் இயக்குகிறார். இப்படத்திற்கு, 'சீதா பயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    இதில், கிரி என்கிற கதாபாத்திரத்தில் அர்ஜுனும் நடிக்கிறார். தமிழில் ஜெயஹிந்த், ஏழுமலை உள்ளிட்ட வெற்றிப்படங்களை அர்ஜுன் இயக்கி நடித்திருந்த நிலையில் அவர் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

     

    • இயக்குனர் பிரேம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேடி - தி டெவில்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்துள்ள திரைப்படம் 'கேடி - தி டெவில்'. காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்ஷன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    கேடி -தி டெவில்

    1970-களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதில், ஹீரோ துருவா சர்ஜா மற்றும் சஞ்சய் தத் இருவருக்கும் இடையிலான சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டம்மி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதில், எதிர்பாராத விதமாக, டம்மி குண்டு சற்று வீரியத்துடன் வெடித்ததில் சஞ்சய் தத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கேடி -தி டெவில் படக்குழு

    மேலும், சிதறிய கண்ணாடி துண்டுகள் அவரின் முகம், முழங்கை ஆகிய இடங்களில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சஞ்சய் தத், விஜய்யின் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • 1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.

    KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த ஆக்சன் திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

    1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே, ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இதன் ஆடியோ உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமான ஆனந்த் ஆடியோ வாங்கியுள்ளனர்.

    இப்படத்தின் ரிலீஸுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பு, ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கன்னட நடிகரான துருவா சர்ஜா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

     ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், சஞ்சய் தத், நோரா ஃபதேஹி மற்றும் V ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் பங்கேற்பில் இப்படம் பான்-இந்தியா பிரம்மாண்டமாக, ஒரு புதுமையான திரை அனுபவமாக இருக்கும்.

     

    "கேடி - தி டெவில்" 1970களில் இருந்த பெங்களூர் நகரின் தெருக்களுக்குப் பார்வையாளர்களை மீண்டும் கூட்டிச் செல்லும், இப்படம் வரலாற்று நிகழ்வுகளில் வேரூன்றிய ஒரு பரபரப்பான சம்பவத்தை மீண்டும் கண்முன் கொண்டுவரவுள்ளது.

    KVN Productions வழங்கும் "கேடி - தி டெவில்" படத்தை பிரேம் இயக்கியுள்ளார். பான்-இந்தியா பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மார்ட்டின் படத்தின் டீசர் 97 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் வரவேற்பை பெற்றது.
    • மார்ட்டின் திரைப்படம் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    கன்னட சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவர் ஆக்சன் கிங் அர்ஜுனின் சகோதரி மகன் துருவா சர்ஜா. இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மார்ட்டின் படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை அர்ஜூன் எழுதியுள்ளார்.

    கடந்தாண்டு வெளியான மார்ட்டின் படத்தின் டீசர் 97 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

    மார்ட்டின் திரைப்படம் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா படத்துடன் போட்டியா என்று கேள்வி கேட்க பட்டது. இதற்கு பதில் அளித்த துருவா சார்ஜா, மார்ட்டின் திரைப்படம் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கங்குவா திரைப்படத்தை 10 ஆம் தேதி பாருங்கள். என் படத்தை 11 ஆம் தேதி பாருங்கள் என்றார்.

    இந்த நிகழ்வில் துருவ சார்ஜாவிடம் பாலிவுட்டில் எந்த நடிகர் பிடிக்கும் என்று கேள்வி கேட்க பட்டது. இதற்கு பதில் அளித்த துருவ சார்ஜா, பாலிவுட்டில் எனக்கு பிடித்த நடிகர் சஞ்சய் தத் என்று கூறினார்.

    மேலும் மார்ட்டின் படத்தை தொடர்ந்து அடுத்ததாக கேடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். இதில் சஞ்சய் தத் என்னுடன் நடித்துள்ளார். சிறந்த நடிகருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி என்றார்.

    அதுபோல், தெலுங்கில் எந்த நடிகர் பிடிக்கும் என்ற கேள்விக்கு ஜூனியர் என்.டி.ஆர். எனக்கு பிடிக்கும் என்று பதில் அளித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படம் 13 மொழிகளில் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகிறது.
    • ஆக்சன் காட்சிகள் உலக தரத்தில் அமைந்துள்ளது.

    அர்ஜுன் கதை திரைக்கதை எழுதியுள்ள படம் மார்டின். படத்தின் கதாநாயகனாக பிரபல கன்னட நடிகர் துருவா சர்ஜா நடித்துள்ளார். இவர் அர்ஜூனின் சகோதரி மகன். நாயகியாக அன்வேஷி ஜெயின் நடித்துள்ளார். ஏ.பி.அர்ஜுன் படத்தை இயக்கியுள்ளார். ரவி பஸ்ரு இசையமைத்துள்ளார்.

    முற்றிலும் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் அந்தந்த மொழிகளில் திரைக்கு வர இருக்கிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி, ஜப்பான், சீனா அரபு, கொரியா என 13 மொழிகளில் வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

     


    இந்திய தேசப்பற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் துருவா சர்ஜாவின் ஆக்சன் காட்சிகள் உலக தரத்தில் அமைந்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது.

    இதில் துருவா சர்ஜா பேசும்போது, எனது அங்கிள் அர்ஜுன் இயக்கத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். அவர் சம்மதம் சொன்னால் உடனே நடிக்க தயார். எனக்கு சினிமாவிலும் வாழ்க்கையிலும் அவர்தான் காட்பாதர் என்று கூறினார்.

    அதிரடி சண்டை காட்சிகளுடன் வெளியாகி உள்ள மார்ட்டின் டிரெய்லர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×