என் மலர்
நீங்கள் தேடியது "அர்ஜுன்"
அறிமுக இயக்குனர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'தீயவர் குலை நடுங்க'. இந்த படத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இன்வெஸ்டிகேசன் ஆக்சன் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார். பரத் ஆசிவகன் இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் முதல் பாடல் சில வாரங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் படத்தின் டீசரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர் இதனை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'தீயவர் குலை நடுங்க'. இந்த படத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இன்வெஸ்டிகேசன் ஆக்சன் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார். பரத் ஆசிவகன் இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் முதல் பாடல் சில வாரங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் படத்தின் டீசரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர் இதனை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
- 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் புதிய படம் 'ஏஜிஎஸ் 28'.
- 'கே.ஜி.எஃப்' புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தமிழில் அறிமுகமாகிறார்.
'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் புதிய படம் 'ஏஜிஎஸ் 28'.
குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் உருவாகவுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்குகிறார். இவர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் ஆவார்.
அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை கையாளுகிறார். வீரமணி கணேசன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, பீனிக்ஸ் பிரபு சண்டைக் காட்சிகளை இயக்க, தினேஷ் மனோகரன் ஆடைகளை வடிவமைக்கிறார்.

'கே.ஜி.எஃப்' புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தமிழில் அறிமுகமாகிறார்.
இந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்களை வரவேற்கும் வகையில் படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் படத்தில் ஜான் கொக்கென், விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடிக்கின்றனர்.
- நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
- கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் பாடலான சிக்கிடு பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சிக்கிடு பாடலை சாண்டி மாஸ்டர் இயக்கியுள்ளார். அதில் இடம் பெற்ற நடன ஸ்டெப்புகள் இணையத்தில் வைரலானது.
நேற்று நடன இயக்குநரான சாண்டி மாஸ்டர் பிறந்தநாள் கொண்டாடினார். அப்பொழுது ரஜினிகாந்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரஜினி அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறி நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார்.
மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது மருமகன் உமாபதி ராமையாவுடன் சாண்டி கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அதன் வீடியோவை சாண்டி பதிவிட்டு நன்றி தெரிவித்து இருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஒரு வேளை கூலி திரைப்படம் லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்சில் ஒரு அங்கமாக இருக்குமோ என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனெனில் விஜய் நடித்த லியோ படத்தில் அர்ஜுன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கான விடை விரைவில் தெரியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- கடைசியாக அஜித்தின் விடாமுயற்சி படத்தில் வில்லனாக தோன்றியிருந்தார்.
- தமிழில் ஜெயஹிந்த், ஏழுமலை உள்ளிட்ட வெற்றிப்படங்களை அர்ஜுன் இயக்கினார்.
நடிகர் அர்ஜுன் இயக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் அர்ஜுன் சமீப காலமாக பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அஜித்தின் விடாமுயற்சி படத்தில் வில்லனாக தோன்றியிருந்தார்.
இந்நிலையில் நடிகரும் தன் உறவினருமான துருவா சார்ஜாவை நாயகனாக வைத்து புதிய படத்தை அர்ஜுன் இயக்குகிறார். இப்படத்திற்கு, 'சீதா பயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதில், கிரி என்கிற கதாபாத்திரத்தில் அர்ஜுனும் நடிக்கிறார். தமிழில் ஜெயஹிந்த், ஏழுமலை உள்ளிட்ட வெற்றிப்படங்களை அர்ஜுன் இயக்கி நடித்திருந்த நிலையில் அவர் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- ஐஷ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் நடித்து வெளியான சுழல் 2 வெப் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படத்தை அறிமுக இயக்குநரான தினேஷ் லக்ஷ்மனன் இயக்கியுள்ளார்.
ஐஷ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் நடித்து வெளியான சுழல் 2 வெப் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக `தீயவர் குலை நடுங்க' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான தினேஷ் லக்ஷ்மனன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் முதல் பாடலான அந்திபேர அழகலியே பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷுடன் அர்ஜுன், ராம்குமார் சிவாஜி, ஜிகே ரெட்டி, பிரவீன் ராஜா, பிராங்ஸ்டர் ராகுல் மற்றும் தங்கதுரை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை ஜி அருள் குமார் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யாவை நாயகியாகவும், தெலுங்கு இளம் நடிகர் விஷ்வக் சேனை நாயகனாகவும் வைத்து தெலுங்கு படத்தை இயக்க இருந்தார்.
- அப்படத்தில் நடித்த விஷ்வக் சேன், அர்ஜுன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யாவை நாயகியாகவும், தெலுங்கு இளம் நடிகர் விஷ்வக் சேனை நாயகனாகவும் வைத்து தெலுங்கு படத்தை இயக்க இருந்தார். இதனிடையே விஷ்வக் சேனுக்கு தொழில் பக்தி இல்லை என்று குற்றம் சாட்டி அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டார். அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார்.

அர்ஜுன்
இதற்கு பதில் அளித்து விஷ்வக் சேன் கூறும்போது, ''என்மீது அர்ஜுன் சொன்ன குற்றச்சாட்டுகளை கேட்டதும் இமயமலை சென்று விடலாம் என்று தோன்றியது. அந்த படத்துக்கு நிறைய உழைப்பை கொடுக்க நினைத்தேன். ஆனால் எனக்கும், அர்ஜுனுக்கும் இணக்கமான சூழ்நிலை இல்லை. எனக்கு கொடுத்த சம்பளத்தை திருப்பி கேட்டார்கள்.

விஷ்வக் சேன் - அர்ஜுன்
கதை பற்றி நன்றாக விவாதித்து அதன்பிறகு படப்பிடிப்பை நடத்தலாம் என்றேன். எனது ஆலோசனைகளை அவர் கேட்கவில்லை. அதனால்தான் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. அர்ஜுனுக்கு மரியாதை கொடுத்தேன். நானாக படத்தில் இருந்து விலகவில்லை. அவர் நல்ல படம் எடுக்க வேண்டும். அர்ஜுன் என் மீது குற்றம் சுமத்தியதால் எனது குடும்பத்தினரும், நண்பர்களும் வருத்தப்படுகிறார்கள்'' என்றார்.
- வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் மங்காத்தா.
- தற்போது அஜித்குமாரை நடிகர் அர்ஜுன் திடீரென்று சந்தித்து பேசிய புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார், அர்ஜுன், திரிஷா ஆகியோர் நடித்து 2011-ல் வெளியான மங்காத்தா படம் பெரிய வெற்றி பெற்றது. இது அஜித்தின் 50-வது படமாக உருவாகி வெளியானது. தமிழில் 2-ம் பாகம் படங்கள் அதிகம் வந்து வரவேற்பை பெற்று வருவதால் மங்காத்தா 2-ம் பாகமும் உருவாக வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.

அஜித் - அர்ஜுன்
வெங்கட் பிரபுவிடமும் இந்த கோரிக்கையை அவர்கள் எழுப்பியபோது, ''மங்காத்தா 2-ம் பாகத்துக்கான கதையை தயார் செய்து விட்டேன். அஜித்குமார் எப்போது அழைத்தாலும் மங்காத்தா 2 படத்தை இயக்க தயாராக இருக்கிறேன்'' என்று பதில் அளித்திருந்தார். அஜித்குமார் தற்போது துணிவு படத்தை முடித்து விட்டு விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.

அஜித் - அர்ஜுன்
இந்நிலையில் அஜித்குமாரை நடிகர் அர்ஜுன் திடீரென்று சந்தித்து பேசியுளார். இருவரும் சந்தித்த புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பை தொடர்ந்து அஜித், அர்ஜுன் இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது உறுதியாகி உள்ளது. அது விக்னேஷ் சிவன் இயக்கும் படத்திலா? அல்லது மங்காத்தா 2-ம் பாகத்திலா என்பது விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது.
- விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'லியோ'.
- இப்படத்தின் படப்பிடிப்பில் அர்ஜுன் இன்று இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லியோ - விஜய்
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பில் அர்ஜுன் இன்று இணையவுள்ளதாக கூறப்படுகிறது. பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் அர்ஜுனின் பகுதியை இன்று படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்காக அர்ஜுக்கு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- ‘பட்டத்து யானை’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஐஸ்வர்யா அர்ஜுன்.
- இவர் தந்தை அர்ஜுன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் அர்ஜுன் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அர்ஜுன் -நிவேதிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். இவர் 2013- ஆம் ஆண்டு 'பட்டத்து யானை' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்த கதாபாத்திரம் பாராட்டுக்களை பெற்றது. தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான 'சொல்லிவிடவா' என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்போது அர்ஜுன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

உமாபதி- ஐஸ்வர்யா அர்ஜுன்
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் உமாபதி 2017-ஆம் ஆண்டு வெளியான 'அதாங்கப்பட்டது மகாஜனங்களே' என்ற படத்தின் மூலம் அறிமுகமான. பின்னர், 'மணியார் குடும்பம்', 'திருமணம்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
உமாபதி 2021-ஆம் ஆண்டு அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகிறது.
- இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார்.
நடிகர் அர்ஜுன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் தயாரிக்கும் 15-வது படத்தை அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது.

கன்னட சினிமாவில் பிரபல நடிகரான உபேந்திராவின் அண்ணனின் மகனான நிரஞ்சன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். மேலும், சத்யராஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்க இவர்களுடன் அர்ஜுனும் இணைந்து நடிக்கிறார்.
கே. ஜி. எப் படத்தின் இசையமைப்பாளர் ஹித்தேஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு பாலமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஹைதராபாத்தில் துவங்கியது. இதில், சத்யராஜ் ,நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் காட்சிகள் பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரமான ஹரோல்ட்தாஸின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.






