search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aishwarya Rajesh"

    • சமீபத்தில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து டியர் படத்தில் நடித்தார்.
    • ’உத்தரகண்டா’ என்ற கன்னட படத்தில் துர்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

     தமிழ் திரையுலகில் கடந்த 2019 முதல் சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், கடந்த 2012ம் ஆண்டு வெளியான "அட்டக்கத்தி" என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். 2010ம் ஆண்டு வெளியான "நீதானா அவன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் களமிறங்கினார்.

    தொடர்ச்சியாக தமிழில் "ரம்மி", "பண்ணையாரும் பத்மினியும்", "திருடன் போலீஸ்", "காக்கா முட்டை", "மனிதன்", மற்றும் "தர்மதுரை" போன்ற படங்களில் இயல்பான தனது நடிப்பை வெளிப்படுத்தி புகழ்பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

    சமீபத்தில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து டியர் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து அடுத்தடத்த படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 'உத்தரகண்டா' என்ற கன்னட படத்தில் துர்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவர் நடிக்கும் முதல் கன்னட படம் இதுவே.

     

    இந்நிலையில் அவர் கருப்பு நிற ஜல்லடை ஆடையில் கிளாமர் போட்டோஷூட் செய்து அதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " வியரிங் பிளாக் இஸ் எ வே ஆஃப் லைஃப்" என்ற தலைப்பில் பதிவிட்டுல்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முதற்கட்ட படப்பிடிப்பு பிஜப்பூர் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது.
    • இந்த படத்தை ரோஹித் பதகி இயக்கி வருகிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ் குமார் மற்றும் 'நடராக்ஷசா' டாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும் 'உத்தரகாண்டா' எனும் திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

    இந்தத் திரைப்படத்தில் அவர் டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாக 'துர்கி' எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'உத்தரகாண்டா' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பிஜப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது.

     


    இப்படத்தை கே.ஆர்.ஜி. ஸ்டுடியோஸ் சார்பில் கார்த்திக் கவுடா மற்றும் யோகி ஜி. ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இயக்குநர் ரோஹித் பதகி இயக்கத்தில் உருவாகி வரும் 'உத்தரகாண்டா' படத்தில் மலையாள நடிகர் விஜய் பாபு, ரங்காயண ரகு, சைத்ரா ஜே. ஆச்சார், உமா ஸ்ரீ, யோகராஜ் பட், கோபாலகிருஷ்ண தேஷ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்
    • 'ஆக்‌ஷன்' காட்சிகள் நிறைந்த படமாக உருவாக உள்ளது

    பிரபல நடிகை ஐஸ்வர்யாராஜேஷ் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள "வளையம்" படத்தின் பூஜை நடந்தது. இதில் பிரபல நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் 2012 -ல் வெளியான "அட்டகத்தி" படத்தின் ஐஸ்வர்யாராஜேஷ் நடித்து மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார்.அதன்பின் "காக்காமுட்டை" படம் அவருக்கு மேலும் புகழை கொடுத்தது.ஐஸ்வர்யாராஜேஷ், தற்போது முதன்மையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

    இந்தநிலையில் "வளையம்" என்ற புதியபடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.இந்தபடத்திற்கான பூஜை தொடங்கியது.ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக இது உருவாக உள்ளது.ஜி.டில்லிபாபுவின் ஆக்சஸ் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இயக்குனர் மனோபாரதி இதனை இயக்குகிறார்.இதில் 'தேவ்' என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.இதில் சேத்தன், தமிழ், பிரதீப்ருத்ரா, ஹரிஷ்பேராடி, சுரேஷ்மேனன் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர்.

    ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படம் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்க திட்டமிட்டு உள்ளனர். சென்னையில் நடந்த இந்தப்பட பூஜையில் நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டு பட குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

     

    • டியர் திரைப்படம் ஒரு குடும்பக் கதை.
    • திருமண துயரங்கள் பற்றிய சோகமான பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து பாடியுள்ளார்.

    இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் டியர் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

    இப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்போது படத்தின் ஒரு பாடலை இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளனர். 'கேடி லேடி தள்ளிப்போடி நீதான் என் தலைவலி...' என்ற பாடல் வரியுடன் கூடிய பாடலாக இது அமைந்து உள்ளது. இந்த சோகபாடல் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    டியர் திரைப்படம் ஒரு குடும்பக் கதை. இது ஒரு திருமணமான ஜோடியின் கதை மற்றும் திருமணத்தில் இருந்து தொடங்குகிறது மற்றும் நீண்ட கால திருமணத்திற்கு என்ன தேவை என்பதை இந்தபடத்தில் அறிவுரையாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தலைவாசல் விஜய், ரோகினி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில், டியரின் படத்தின் முதல் பாடலான தலைவலி பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருமண துயரங்கள் பற்றிய சோகமான பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து பாடியுள்ளார். விண்ணுலக கவி பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

    • "திட்டம்- 2" மற்றும் "அடியே" ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்.
    • நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    "திட்டம்- 2" மற்றும் "அடியே" ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

    இந்த படத்தை செவன் வாரியர் பிலிம்ஸ் மற்றும் வெயிலோன் எண்டர்டெயின்மென்டுடன் ஜேஜேபி டாக்கீஸ் இணைந்து தயாரிக்கிறது.

    இந்நிலையில், இந்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை இன்று வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்திருந்தது. 

    அதன்படி, இந்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    படத்தின் பெயர் ஹாட் ஸ்பாட் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஐஷ்வர்யா ராஜேஷ் தனது எக்ஸ் தளத்தில்," படம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என தெரிகிறது. ஹாட் ஸ்பாட் படத்தின் பர்ஸ்ட் லுக் பகிர்வதில் மகிழ்ச்சி.

    பட குழுவிற்கு வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

    • ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இந்த படத்தை அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.

    அறிமுக இயக்குனர்  ரா.சவரி முத்து இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகுகிறது. டார்லிங்க், இரும்புத்திரை, அண்ணாத்தே, ஹீரோ, மற்றும் மார்க் ஆண்டனி படங்களில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய  ரா.சவரி முத்து இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.


    இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை கலகலப்பான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தை துவாரகா புரொடக்ஷன்ஸ் (Dwarka Productions) நிறுவனம் சார்பில் பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிக்கின்றனர்.


    இப்படத்தின் பூஜை,  திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

    • இயக்குனர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தீயவர் குலைகள் நடுங்க'.
    • பரத் ஆசிவகன் இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்கிறார்.

    அறிமுக இயக்குனர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தீயவர் குலைகள் நடுங்க'. இந்த படத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இன்வெஸ்டிகேசன் ஆக்சன் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார். பரத் ஆசிவகன் இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்கிறார்.


    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் தொடங்கியுள்ளது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • ஜிவி பிரகாஷ்-ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்துள்ள படம் ‘டியர்’.
    • இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷ் குமாருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம் 'டியர்'. இப்படத்தை 'செத்தும் ஆயிரம் பொன்' படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மேலும் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    ஃபேமிலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் டியர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. கொட்டும் மழையில் படக்குழு தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்துவது போன்று இடம்பெற்றிருக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



    • பிரம்மா மற்றும் எம்.அனுசரண் இயக்கத்தில் உருவான வெப் தொடர் 'சுழல்'.
    • இந்த வெப் தொடர் பல்வேறு தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது.

    விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரான முதல் வெப் தொடர் ' சுழல்- தி வோர்டெக்ஸ்'. இயக்குனர்கள் பிரம்மா மற்றும் எம்.அனுசரண் இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடரில் ஆர்.பார்த்திபன், கதிர், சந்தானபாரதி, பிரேம், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


    மியூக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வெப் தொடருக்கு, சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். அமேசான் பிரைமில் கடந்த ஆண்டு ஜூன் 17-ந் தேதி வெளியான இந்த வெப் தொடர் பல்வேறு தரப்பில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த வெப் தொடரின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    அதாவது, புஷ்கர் - காயத்ரி 'சுழல்' இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதி வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.
    • ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது.


    'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் இவர் இல்லாமல் கதையில் மாற்றம் செய்து மீண்டும் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியதுவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
    • முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்காதது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் மனம் திறந்து பேசியுள்ளார்.

    அட்டகத்தி, பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, காக்கா முட்டை, தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, ஃபர்ஹானா உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலேயே நடித்து வருகிறார்.



    இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், முன்னணி கதாநாயகர்களுடன் படங்களில் நடிக்காதது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "காக்கா முட்டை படத்தில் நடித்த பிறகு நடிகர்கள் பலர் என்னை பாராட்டினர். ஆனால் யாரும் அவர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு தரவில்லை. காக்கா முட்டை படத்துக்கு பிறகு ஒன்றரை வருடம் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் சும்மாதான் இருந்தேன்.



    என்னுடைய நடிப்பை பாராட்டிய தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான் போன்ற சில முக்கிய நடிகர்களைத் தவிர, என்னுடைய நடிப்பை பாராட்டிய மற்ற நடிகர்கள் எனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை வழங்கவில்லை. கதாநாயகியை மையமாக வைத்து உருவான 15-க்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்தும் கூட இதுவரை பெரிய நடிகர்கள் ஏன் எனக்கு வாய்ப்பு தரவில்லை என்று புரியவில்லை. எனவேதான் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க முடிவு செய்தேன். எனக்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்.

    • இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான படம் 'ஃபர்ஹானா'.
    • இப்படம் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றது.

    'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான 'ஃபர்ஹானா' திரைப்படம் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றது.


    இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஃபர்ஹானா' திரைப்படம் வருகிற ஜூலை 7-ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை ஓடிடி தளம் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.



    ×