இன்று மாலை வெளியாகும் 'தீயவர் குலை நடுங்க' படத்தின் டிரெய்லர்

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இன்று மாலை வெளியாகும் 'தீயவர் குலை நடுங்க' படத்தின் டிரெய்லர்
Published on

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் அர்ஜூன். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்ற நிலையில் சமீபகாலமாக அவர் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே, அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்துள்ள படம் 'தீயவர் குலை நடுங்க'. அதிரடி ஆக்ஷன் கிங் திரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜி.எஸ்.ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 21-ந்தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனிடையே, இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், 'தீயவர் குலை நடுங்க' படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com