என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஞாபகம் வருதே... ஆட்டோகிராப் படத்தின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புதிய டிரெய்லர் வெளியீடு!
    X

    ஞாபகம் வருதே... 'ஆட்டோகிராப்' படத்தின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புதிய டிரெய்லர் வெளியீடு!

    • சேரனின் இயக்கி நடித்த 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி ரீ ரிலீஸ் ஆகிறது .

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'கில்லி', 'சச்சின்' சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த வரிசையில், அஜித்தின் 'அட்டகாசம்' படமும் கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

    அந்த வகையில், சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சேரன் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், ரீ ரிலீஸை முன்னிட்டு சேரனின் ஆட்டோகிராஃப் படத்தின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புதிய டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. டிரெய்லரை நடிகர் ஆர்யா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

    Next Story
    ×