என் மலர்
சினிமா செய்திகள்

ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் "தீயவர் குலை நடுங்க" படம் வெளியாகும் தேதி அறிவிப்பு
தீயவர் குலை நடுங்க படம் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.
அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் படம் தீயவர் குலை நடுங்க.
அதிரடி ஆக்ஷன் திரில்லவராக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜி.எஸ்.ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தீயவர் குலை நடுங்க படம் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, தீயவர் குலை நடுங்க படம் வரும் நவம்பர் 21ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story






