என் மலர்
நீங்கள் தேடியது "தணிக்கைக் குழு"
அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் படம் தீயவர் குலை நடுங்க.
அதிரடி ஆக்ஷன் திரில்லவராக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜி.எஸ்.ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தீயவர் குலை நடுங்க படம் வெளியாகும் தேதி குறித்து படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி, தீயவர் குலை நடுங்க படம் வரும் நவம்பர் 21ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், தீயவர் குலை நடுங்க படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
'முதல் நீ முடிவும் நீ' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இப்படமும், இப்படத்தில் வரும் முதல் நீ முடிவும் நீ பாடலும் இவரை பிரபலமாக்கியது. இப்படத்தை தொடர்ந்து சிங்க், தருணம் ஆகிய படங்களில் கிஷன் தாஸ் நடித்துள்ளார்.
இதேபோல், பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் பெரிய திரையில் அறிமுகமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான 'டிராகன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இது தவிர விஜே சித்து இயக்கி நடிக்க உள்ள 'டயங்கரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார்.
கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து 'ஆரோமலே' படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சாரங் தியாகு இயக்க சித்து குமார் இசையமைத்துள்ளார்.
இப்படம் அடுத்த மாதம் நவம்பர் 7-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வௌியாகி வரவேற்பு பெற்றது.
சினிமாவில் வரும் காதலை போன்று நிஜ வாழ்க்கையில் காதலை எதிர்பார்க்கும் கதாநாயகனை சுற்றி கதை அமையும் வகையில் டிரைலரில் காட்டப்பட்டுள்ளது. டிரைலருக்கு சிலம்பரசன் குரல் கொடுத்துள்ளார். மேலும், படத்திற்கும் குரல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தணிக்கை வாரியம் 'ஆரோமலே' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழை வழங்கியுள்ளது.
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், படக்குழுவினர் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பவன் கல்யாண் ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுஜித் இயக்கியுள்ளார். சுஜி இதற்கு முன் சாகோ மற்றும் ரன் ராஜா ரன் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஒரு முக்கியமான மிஷனுக்காக மும்பை வருகிறார்.
அதன் பிறகு சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் இசையை தமன் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர்.
திரைப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியுள்ளது.
அதன்படி, OG திரைப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும்.
தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.
படத்திற்கான புரோமோசன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெயிலர் பிரமாண்டமாக நடைபெற்றது.
படத்தின் டிரெயிலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், உலகளவில் வெளியாகும் இட்லி கடை படத்திற்கு யு சான்றிதழை தணிக்கை குழு வழங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் குமரன் தங்கராஜன். இவர் வெள்ளி திரையில் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.
இப்படத்திற்கு குமாரசம்பவம் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார். வீனஸ் இன்ஃபொடெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் சாகர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஒரு ஃபீல் குட் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
படத்தை இசையை அச்சு ராஜமணி மேற்கொள்ள, ஒளிப்பதிவு ஜெகதீஷ் செய்துள்ளார்.
இந்நிலையில், குமாரசம்பவம் படத்திற்கு கட் ஏதும் இல்லாமல் தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதுகுறித்து, படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார்.
- மாரீசன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.
கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார்.
இம்மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் முதல் பாடலான ஃபாஃபா பாடல், டிரெய்லருக்கும் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 'மாரீசன்' திரைப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- ககன மார்கன் என்றால், சித்தர்களின் அகராதியில் 'காற்றின் வழி பயணிப்பவன்' என்று பொருள்.
- மார்கன் திரைப்படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.
மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, லியோ ஜான் பால் இயக்கும் `மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் .
அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ஏ1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட் செய்தவர் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால்.
மார்கன் படத்தில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார். ககன மார்கன் என்றால், சித்தர்களின் அகராதியில் 'காற்றின் வழி பயணிப்பவன்' என்று பொருள்.
விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் வில்லனாக நடித்து இருக்கும் அஜய் தீஷன் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இப்படம் ஒரு ஃபேண்டசி கலந்த கிரைம் திரைப்படமாக உருவாகியுள்ளது.
படத்தின் டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. திரைப்படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், மார்கன் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் வௌியிட்டு அறிவித்துள்ளது.
- மனுசி திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அறம் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் கோபி நயினார். இவர் இயக்கிய அறம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இயக்குநர் கோபி நயினாரின் அடுத்த படம் "மனுசி" என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை வெற்றி மாறன் தயாரித்துள்ளார். இயக்குநரின் முதல் படத்தை போன்றே இந்த படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை கொண்டிருக்கிறது. இதில் ஆன்ட்ரியா ஜெர்மியா நடித்துள்ளார்.
இளையராஜா இசையமைத்துள்ள மனுசி படத்தின் டிரெயிலரை நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் கடந்த ஆண்டு வெளியிட்டார்.
இப்படத்தில் நடிகர் நாசர், தமிழ் மற்றும் ஹக்கிம் ஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறம் படத்தை போன்றே இப்படமும் சமூக பிரச்சினைகளை பேசும் கதைக்களம் கொண்டிருக்கும் என்பது டிரெயிலரில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, மனுசி திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மாநில அரசை மோசமாக சித்தரித்து உள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தணிக்கை சான்று மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக தயாரிப்பாளர் வெற்றிமாறன் மனு தாக்கல் செய்தார்.
அதில், நிபுணர் குழு அமைத்து 'மனுசி' படத்தை மீண்டும் தணிக்கை செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரியும், பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மேலும்,"பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சியை எடிட் செய்ய தயார. படத்தை மறுஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மனுசி திரைப்படத்தை பார்வையிட்டு இன்று மறு ஆய்வு செய்யப்படும். திரைப்படத்தின் ஆட்சேபகரமான காட்சிகள் வசனங்கள் குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் உறுதி அளித்துள்ளது.
- மாநில அரசை மோசமாக சித்தரிப்பு உள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் என மறுப்பு.
- மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் அறம் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் கோபி நயினார். இவர் இயக்கிய அறம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இயக்குநர் கோபி நயினாரின் அடுத்த படம் "மனுசி" என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை வெற்றி மாறன் தயாரித்துள்ளார். இயக்குநரின் முதல் படத்தை போன்றே இந்த படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை கொண்டிருக்கிறது. இதில் ஆன்ட்ரியா ஜெர்மியா நடித்துள்ளார்.
இளையராஜா இசையமைத்துள்ள மனுசி படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் கடந்த ஆண்டு வெளியிட்டார்.
இப்படத்தில் நடிகர் நாசர், தமிழ் மற்றும் ஹக்கிம் ஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறம் படத்தை போன்றே இப்படமும் சமூக பிரச்சினைகளை பேசும் கதைக்களம் கொண்டிருக்கும் என்பது டிரைலரில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மனுசி திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மாநில அரசை மோசமாக சித்தரிப்பு உள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தணிக்கை சான்று மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக தயாரிப்பாளர் வெற்றிமாறன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், நிபுணர் குழு அமைத்து 'மனுசி' படத்தை மீண்டும் தணிக்கை செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரியும், பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மேலும்,"பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சியை Edit செய்ய தயார்; படத்தை மறுஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- டிரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life).
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டிரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், 'தக் லைஃப்' படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 45 நிமிடம் 42 வினாடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மாமன் திரைப்படம் வரும் மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
- லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்துள்ளனர்.
கருடன் படத்திற்குப் பிறகு நடிகர் சூரி, 'விலங்கு' இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன் படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்துள்ளனர்.
ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது.
அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக 'மாமன்' உருவாகி இருக்கிறது.
இப்படம் மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் மாமன் படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழை வழங்கியுள்ளது. இதுதொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டு அறிவித்துள்ளது.
- கூட்டத்தில் அமர்ந்திருந்த அ.தி.மு.க. பிரதிநிதிகள் இந்த புகார் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தெரிவிக்கபட்டதாக அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர்.
- மாவட்டம் முழுவதும் ஊரக வேலையளிப்பு திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் அரசு நிதி வீணாக்கப்பட்டிருப்பது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
நாமக்கல்:
மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு 100 நாட்கள் வேலை அளிக்கப்படுகிறது.
இதற்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.271 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள், நிதி இழப்பு, பணிகள் நடைபெறாமல் ஊதியம் பெறுதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதையடுத்து இந்த திட்டத்தில் 2020-21, 2021-22-ம் ஆண்டுக்கான தணிக்கையானது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளிலும் மாவட்ட வள அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறை தணிக்கையாளர் மூலம் கடந்த 5-ந் தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெற்றது.
இதில் பெரும்பாலான ஊராட்சிகளில் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிதள பொறுப்பாளர்கள் மூலம் முறைகேடு, நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இதனை சம்பந்தப்பட்ட ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.
நாமக்கல் ஒன்றியத்தில் 25 கிராமங்களில் நடந்த இந்த கூட்டத்தில் நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி ஊராட்சியில் மட்டும் ரூ.7.43 லட்சம் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறியப்பட்டு அதிகாரிகள் மூலம் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக 100 நாள் வேலைக்கு பதிலாக 113 நாட்கள் வரையில் வேலை வழங்கியது, வேலைக்கு செல்லாமல் பலருக்கு ஊதியம் வழங்கியது, கழிவு நீர் கால்வாய் பணிகள் தொடக்க விழா நடைபெற்ற நிலையில் அதற்கான பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாதது போன்றவற்றை ஆவணங்கள் வாயிலாக மக்களுடைய காண்பித்தனர்.
இந்த நிலையில் கூட்டத்தில் அமர்ந்திருந்த அ.தி.மு.க. பிரதிநிதிகள் இந்த புகார் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தெரிவிக்கபட்டதாக அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர். அதை வேளையில் தி.மு.க.வினர் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கூச்சலிட்டனர். இதனால் இருதரப்புக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் நிலை உருவாகியது. அங்கிருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு இரு தரப்பையும் கூட்டத்தை விட்டு வெளியேற்றினர்.
தொடர்ந்து நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளாளன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது . இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கூறியதாவது:-
வரும் நாட்களில் தேசிய ஊரக வேலையளிப்பு திட்டத்தில் அனைத்து அட்டை தாரர்களுக்கும் வேலை நாட்கள் பகிர்ந்து அளிக்கப்படும். நாமக்கல் ஒன்றியத்திற்குட்பட்ட வேட்டம்பாடி ஊராட்சியில் ரூ.7.43 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல் மேலும் உள்ள 24 ஊராட்சிகளிலும் சேர்ந்து மொத்தமாக ரூ.13 கோடி வரை நிதியிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த தொகையை அந்தந்த ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பணிதள பொறுப்பாளர் மூலம் வசூலித்து அதற்கான வங்கி கணக்குகளில் செலுத்தி வருகிறோம். மாவட்ட முழுவதும் ஊரக வேலையளிப்பு திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் அரசு நிதி வீணாக்கப்பட்டுள்ளது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலும் இதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






