"ஆரோமலே" படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு

கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து நடத்துள்ள இப்படம் வருகிற 7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
"ஆரோமலே" படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு
Published on

'முதல் நீ முடிவும் நீ' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இப்படமும், இப்படத்தில் வரும் முதல் நீ முடிவும் நீ பாடலும் இவரை பிரபலமாக்கியது. இப்படத்தை தொடர்ந்து சிங்க், தருணம் ஆகிய படங்களில் கிஷன் தாஸ் நடித்துள்ளார்.

இதேபோல், பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் பெரிய திரையில் அறிமுகமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான 'டிராகன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இது தவிர விஜே சித்து இயக்கி நடிக்க உள்ள 'டயங்கரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார்.

கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து 'ஆரோமலே' படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சாரங் தியாகு இயக்க சித்து குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் அடுத்த மாதம் நவம்பர் 7-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வௌியாகி வரவேற்பு பெற்றது.

சினிமாவில் வரும் காதலை போன்று நிஜ வாழ்க்கையில் காதலை எதிர்பார்க்கும் கதாநாயகனை சுற்றி கதை அமையும் வகையில் டிரைலரில் காட்டப்பட்டுள்ளது. டிரைலருக்கு சிலம்பரசன் குரல் கொடுத்துள்ளார். மேலும், படத்திற்கும் குரல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தணிக்கை வாரியம் 'ஆரோமலே' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழை வழங்கியுள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், படக்குழுவினர் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com