என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vadivel"

    • சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார்.
    • மாரீசன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.

    இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.

    கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார்.

    இம்மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் முதல் பாடலான ஃபாஃபா பாடல், டிரெய்லருக்கும் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், 'மாரீசன்' திரைப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'மாமன்னன்'.
    • இப்படத்தின் முதல் பாடலை வடிவேல் பாடியுள்ளார்.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    மாமன்னன்

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    மாமன்னன் போஸ்டர்

    இப்படத்தின் முதல் பாடலான 'ராசா கண்ணு' பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது இப்பாடல் வெளியாகியுள்ளது. வடிவேல் பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

    இந்த பாடல் "பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில் அலையடிக்கிறது கடல்" என்ற வரிகளுடன் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.




    • சுந்தர்.சி மீண்டும் பேய் கதையொன்றை படமாக்க முடிவு செய்துள்ளார்.
    • மீண்டும் இருவரும் புதிய படத்தில் இணைய இருப்பதாக தகவல்.

    சுந்தர்.சி நடித்து இயக்கிய அரண்மனை 4 பேய் படம் சமீபத்தில் வெளியாகி வசூல் குவித்தது.

    இதையடுத்து மீண்டும் பேய் கதையொன்றை படமாக்க முடிவு செய்துள்ளார். இதில் சுந்தர்.சி நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடிப்பார்கள் என்று தெரிகிறது.

    இந்த படத்தில் தன்னுடன் இணைந்து நடிக்க வடிவேலுவிடம் சுந்தர்.சி பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே சுந்தர்.சி. வடிவேலு கூட்டணியில் வந்த தலைநகரம், வின்னர் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றன. குறிப்பாக இந்த படங்களில் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளுக்கு பாராட்டு கிடைத்தது.

    தற்போது மீண்டும் இருவரும் புதிய படத்தில் இணைய இருப்பதாக வெளியான தகவல் படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சுந்தர்.சி ஏற்கனவே கலகலப்பு படத்தின் இரண்டு பாகங்களை எடுத்துள்ளார். இந்த படத்தின் மூன்றாம் பாகத்தையும் உருவாக்க திட்டமிட்டு உள்ளார்.

    கலகலப்பு 3 படத்தில் விமல், சிவா ஆகியோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×