search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Vimal"

  • நியூசிலாந்து போய் சாதித்துக் காட்டிய இந்தியன்.
  • யாரிடமும் நான் வாய்ப்பு கேட்டதில்லை.

  ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் "போகுமிடம் வெகு தூரம் இல்லை." அறிமுக இயக்குநர் மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

  சமீபத்தில் இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் கருணாஸ், "இயக்குநர் ஆணித்தரமாக அழுத்தமாகப் பேசக் காரணம் அவரது திறமை தான். அத்தனை சிறப்பாகப் படம் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் சிவா மிக நல்ல மனம் கொண்டவர். நியூசிலாந்து போய் சாதித்துக் காட்டிய இந்தியன். 24 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் யாரிடமும் நான் போய் வாய்ப்பு கேட்டதில்லை."

  "சினிமா உலகம் யாரையும் மதிக்காது, நமக்கான வாய்ப்புக்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். திரைத்துறை என்பது மிகப்பெரிய பயணம். மைக்கேல் இந்தக்கதை இப்படி தான் வரவேண்டுமெனப் பிடிவாதமாக எடுத்துக் காட்டியுள்ளார்."

  "என்னையும் விமலையும் வித்தியாசமாகக் காட்டியுள்ளார். அவருடன் எனக்கு இது தான் முதல் படம். நான் ஒரு ஹீரோவுடன் நடித்த எல்லாப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தக்கதையைக் கேட்டு இந்தப்படம் நடித்தால் நாம் இறந்த பிறகு பேர் சொல்லிக்கொள்ளும் படமாக இருக்குமென என் குடும்பத்தினரிடம் சொன்னேன்."

  "ஆனால் ஒரு கட்டத்தில் இந்த வாய்ப்பு என் கையை விட்டுப் போனது, ஆனால் நாம் நடிக்கனும் எழுதியிருந்தால் அது நடக்கும் அப்படிதான் இப்போது நடந்துள்ளது. மகிழ்ச்சி. இந்தப்படத்திற்காக உண்மையாக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் நன்றி," என்று தெரிவித்தார்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘போகும் இடம் வெகுதூரமில்லை’
  • படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

  மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'போகும் இடம் வெகுதூரமில்லை' படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

  ரகுநந்தன் இசையமைத்துள்ளார். படம் பற்றி மைக்கேல் கே.ராஜா கூறியதாவது:-

  மந்திரி குமாரி படத்தில் இடம் பெற்ற வாராய் நீ வாராய் என்ற பாடலில் இடம்பெற்ற போகும் இடம் வெகு தூரமில்லை என்ற பாடல் வரிகளை தலைப்பாக எடுத்தோம். படத்துக்கு இந்த தலைப்பு பொருத்தமாக அமைந்தது.

  விமல் ஆம்புலன்ஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெருக்கூத்து கலைஞராக கருணாஸ் நடித்துள்ளார். அரசியல் புள்ளி ஒருவர் இறந்துவிட அவரது உடலை ஏற்றிக்கொண்டு அவர் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் களக்காடை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் விமல்.

  ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் நிலையில் விமல் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மன அழுதத்தில் அரசியல் பிரமுகர் உடலை ஏற்றி சென்று கொண்டிருக்கும் விமல் ஆம்புலன்சை வழிமறித்து கருணாஸ் ஏறுகிறார். மன அழுத்தத்தில் சென்று கொண்டிருக்கும் விமலின் அருகில் அமர்ந்து கொண்ட கருணாஸ் வள வளவென பேசிக் கொண்டே வருகிறார். இது ஒருபுறமிருக்க மரணமடைந்த அரசியல் புள்ளிக்கு இரண்டு மனைவிகள். இருவருக்கும் ஆளுக்கொரு ஆண் பிள்ளைகள். இவர்களால் யார் தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்வது என்பது பற்றி குடும்பத்தில் தகராறு ஏற்படுகிறது.

  இதையொட்டி நடந்தது என்ன? என்பது தான் படத்தின் கதை. படத்தின் டிரெய்லர் வெளியாகி வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார்.
  • இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார்.

  சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார்.

  தற்பொழுது மா.பொ.சி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். மாங்கொல்லை கிராமத்தில் மேல்தட்டு சாதி பிள்ளைகள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நிலமை நிலவி வருகிறது. கீழ்தட்டு மக்களில் படிக்க எதிர்ப்பு கிளம்புகிறது.. இதை எதிர்த்து பொன்னரசன் மற்றும் சிவஞானம் எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர் இதுவே இப்படத்தின் கதைக்களமாகும்.

   

  இப்படத்தை சிராஜ் எஸ் தயாரித்துள்ளார். சித்து குமார் இசையமைக்கிறார். இயக்குனர் வெற்றி மாறன் நிறுவனமான கிராஸ்ரூட் பிலிம் கம்பனி இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றூம் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • மெட்டி ஒலி சீரியலின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் போஸ் வெங்கட்
  • தற்பொழுது மா.பொ.சி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

  மெட்டி ஒலி சீரியலின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் போஸ் வெங்கட். பின் பாரதி ராஜா இயக்கத்தில் வெளிவந்த 'ஈர நிலம்' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமானார். ஷங்கர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த சிவாஜி படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தில் பெரும் அங்கிகாரம் கிடைத்தது போஸ் வெங்கட்டிற்கு.

  பின் தீபாவளி, தாம் தூம், வேதா, தலை நகரம், சரோஜா, கோ, சிங்கம் போன்ற பல பிரபலமான படங்களில் நடித்துள்ளார். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார்.

  தற்பொழுது மா.பொ.சி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். மாங்கொல்லை கிராமத்தில் மேல்தட்டு சாதி பிள்ளைகள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நிலமை நிலவி வருகிறது. கீழ்தட்டு மக்களில் படிக்க எதிர்ப்பு கிளம்புகிறது.. இதை எதிர்த்து பொன்னரசன் மற்றும் சிவஞானம் எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர் இதுவே இப்படத்தின் கதைக்களமாகும்.

  இப்படத்தை சிராஜ் எஸ் தயாரித்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் வெற்றி மாறன் நிறுவனமான கிராஸ்ரூட் பிலிம் கம்பனி இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. இதனை போஸ் வெங்கட் அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • இயக்குனர் எழில் பல படங்களை இயக்கியுள்ளார்.
  • இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

  துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தேசிங்கு ராஜா'. இதில் விமல் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார். மேலும், ரவி மரியா, சிங்கம் புலி, சூரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். காமெடி படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


  இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 'தேசிங்கு ராஜா' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர் விமலே இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளார். இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான 'ரங்கஸ்தலம்' படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.


  மேலும் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். 'பூவெல்லாம் உன் வாசம்' படத்திற்கு பிறகு இயக்குனர் எழிலுடன் இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

  கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்களின் கதையை மையமாக வைத்து காமெடி கலந்து உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளதாகவும் இந்த படத்தை மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • இயக்குனர் குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவான திரைப்படம் குலசாமி.
  • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு வர விமல் தயாரிப்பாளரிடம் பணம் கேட்டதாக தகவல் பரவியது.

  நடிகர் விமல், தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவான திரைப்படம் குலசாமி. இப்படத்திற்கு விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ளார். மிக் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் அமீர், விமல் வராததை கண்டித்து பேசினார். தொடர்ந்து விழாவிற்கு வர விமல் தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு கொடுக்காததால் புறக்கணித்து விட்டதாக தகவல் பரவியது.


   விமல்

  இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு விமல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, குலசாமி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு வர நான் பணம் கேட்டேன் என்று சொல்வது தவறான தகவல். இயக்குனர் அமீரை தொடர்பு கொண்டு இதனை விளக்கி விட்டேன். அன்றைய தினம் 'தெய்வமச்சான்' பட நிகழ்ச்சி இருந்தது. அதற்கான தேதியை அந்த படக்குழுவினர் ஒரு மாதத்துக்கு முன்பே என்னிடம் சொல்லி விட்டனர். ஆனால், 'குலசாமி' பட விழா நிகழ்ச்சி பற்றி நான்கு நாட்களுக்கு முன்புதான் என்னிடம் சொன்னார்கள். இரண்டையும் ஒரே தேதியில் வைத்துவிட்டனர். அதனால்தான் வர முடியவில்லை என்று கூறினார்.

  • விமல் நடிப்பில் இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “குலசாமி”.
  • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

  நடிகர் விமல், தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குலசாமி. இப்படத்திற்கு விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ளார். மிக் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திரையுலகினர், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

  இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசியதாவது, இந்த படத்தின் இயக்குனர் சரவணனை உங்களுக்கு நடிகராக தெரியும் ஆனால் அவர் நடிக்க வருவதற்கு முன்னர் இரண்டு படங்களை இயக்கும்போதே அவருடன் நான் பணி புரிந்துள்ளேன் அதை பற்றி சில விஷயங்களை மட்டும் கூறிக் கொள்கிறேன். சுரேஷ் காமாட்சியும் இயக்குனரும் பழைய ஆட்கள். இருபது வருடங்களுக்கு முன்னர் தண்டாயுதபாணி என்ற படத்தை இயக்கி கொண்டிருந்தார். அது அவரது முதல் படம் எனக்கு உதவி இயக்குனராக முதல் படம் , சூட்டிங் துவங்குவதற்கு முதல் நாள் படத்தின் கதாநாயகர் அதிக சம்பளம் கேட்கிறார் என்று மாற்றுகின்றனர்.  அதன்பின் கதாநாயகர் யார் என்று கேட்டால் தயாரிப்பாளரின் தம்பி மகன் என்று சொல்லுகின்றனர். நான் இதற்கு ஒத்துப் போகவில்லை பத்து வருடம் ஆனாலும் பரவாயில்லை நாம் வேறு படம் பண்ணிக்கொள்ளலாம் என்று கூறினேன், அதற்கு சரவணன் இந்த படமே எனக்கு பதினைந்து வருடம் கழித்து தான் கிடைத்திருக்கிறது என்று கூறினார். அதன்பிறகு நான் அந்த கதாநாயகருடன் பேசினேன் அவர் 3 லட்சதிலிருந்து 1 1/2 லட்சமாக குறைத்துக் கொண்டார். அந்த கதாநாயகர் வேறு யாருமில்லை நம் ஆர்யா தான். ஒரு வழியாக பேசி கஷ்ட பட்டு படத்தை முடித்து விட்டோம்.

  படம் வெளியான பின்னர் தினத்தந்தியில் ஒரு விமர்சனம் வருகிறது. "சக்தி சரவணன் கமர்சியல் இயக்குனர்களில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வருவார்" என்று அதை பல முறை சொல்லி கிண்டலடித்திருக்கிறேன். அதன் பிறகு ஒரு அரசியல் கட்சி நடத்தும் ஒருவரை வைத்து படம் இயக்கினார். அதில் கட்சிக்கு தலைவரை பார்க்க வருபவர்களை எல்லாம் நடிக்க வைத்து படத்தை எடுத்தார். இது போல பல சம்பவங்கள் அவர் வாழ்வில் நடந்துள்ளது. இந்த குலசாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்ததும் அவருக்கு போன் செய்து வாழ்த்துகள் கூறினேன் உங்களுக்கேற்ற கதையை பிடிதுள்ளீர்கள் கண்டிப்பாக வெற்றிதான் வாழ்த்துகள் என்றேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், இன்னும் பல படங்கள் இயக்க வேண்டும், நன்றி என்றார்.

  குலசாமி திரைப்படம் வருகிற ஏப்ரல் 21 ஆம்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் கோபி சென்னை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
  • இந்த வழக்கில் முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று விமல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  நடிகர் விமல் நடித்த திரைப்படம் மன்னர் வகையறா. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், கோபி என்பவரிடமிருந்து ரூ.4.50 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை. பின்னர், தொகையை காசோலையாக வழங்கியுள்ளார். இந்த காசோலை வங்கியில் செலுத்திய போது அவர் கணக்கில் இருந்து பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து செக் மோசடி வழக்கை நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் கோபி சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளையும் விசாரிக்கும் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

  இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கனவே கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் சாட்சிகளை விசாரிக்க விமல் தரப்பில் முன்வரவில்லை. இதையடுத்து முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்வதை முடித்து வைத்து வழக்கு விசாரணையை நீதிபதி தொடங்கினார். இதன் பின்னர், முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று விமல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  இதற்கு கோபி தரப்பு வக்கீல் ஆர்.வெங்கடேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமல் தரப்பில் வாதிடப் பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற விமல் மனுவை ஏற்றுக் கொள்வதாகவும், அதே நேரம் வழக்கு இழுத்தடிக்க வேண்டும் என்று நோக்கத்தில் செயல்பட்ட நடிகர் விமலுக்கு ரூ. 300 வழக்கு செலவு (அபராதம்) விதிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

  • விமல் நடிப்பில் இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "குலசாமி".
  • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

  நடிகர் விமல், தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குலசாமி. இப்படத்திற்கு விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ளார். மிக் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திரையுலகினர், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
  இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் அமீர் பேசியதாவது, இயக்குனர் சரவண சக்தி என்னுடைய நண்பர். நான் நடிக்கும் ஒரு படத்தில் உடன் நடிக்கும் சகோதரர். ஒரு இயக்குனர் நடிகராகும் போது சில சங்கடங்கள் இருக்கும் அதை தீர்த்து வைத்தது சரவண சக்தியும், அண்ணாச்சியும் தான். என்னை மிக மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டார்கள். சரவண சக்தி மிகச்சிறந்த திறமையாளர்.
  இன்று பொன்னியின் செல்வன் படத்தையே புரமோசன் மூலம் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சுற்றி சுற்றி புரமோசன் செய்கிறார்கள் இன்று சினிமாவின் நிலை இதுதான். அப்படி இருக்கும் போது, இந்தப்படத்தின் நாயகன் நாயகி இங்கு இருந்திருக்க வேண்டும். அவர்கள் வராதது எனக்கு வருத்தமே. அந்தக்குறையை ஜாங்கிட் சார் வந்திருந்து நிவர்த்தி செய்துள்ளார். இந்தப்படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள். இவ்வாறு அமீர் பேசினார்.

  குலசாமி திரைப்படம் வருகிற ஏப்ரல் 21 ஆம்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  • நடிகர் விமலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இந்த வதந்திகளுக்கு விளக்கமளித்து விமல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் விமல், தன் எதார்த்தமான நடிப்பால் தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்க வைத்துக் கொண்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விலங்கு வெப்தொடர் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


  விமல்

  இவர் தற்போது அறிமுக இயக்குனர் மைக்கில் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து நடிகர் விமலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


  விளக்கமளித்த விமல்

  இந்நிலையில், இந்த தகவல் குறித்து நடிகர் விமல் கூறியதாவது, "எனக்கு மாரடைப்பு எதுவும் இல்லை. நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். தற்போது மைக்கேல் இயக்கத்தில் புதிய படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் நான் மதுவுக்கு அடிமையாகி வீட்டிலேயே ரகசிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. இது யார் செய்கிறார்கள் என்று எனக்கு தெரியும். அதனால் இந்த சின்ன பிள்ளை வேலையெல்லாம் விட்டு விட்டு பிழைக்கிற வழிய பாருங்க. வாழவிடுங்க நீங்களும் வாழுங்க" என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.