என் மலர்
சினிமா செய்திகள்

விமல்
இந்த வேலையெல்லாம் யார் செய்கிறார்கள் என்று எனக்கு தெரியும்.. கடுப்பான நடிகர் விமல்..
- நடிகர் விமலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- இந்த வதந்திகளுக்கு விளக்கமளித்து விமல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் விமல், தன் எதார்த்தமான நடிப்பால் தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்க வைத்துக் கொண்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விலங்கு வெப்தொடர் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
விமல்
இவர் தற்போது அறிமுக இயக்குனர் மைக்கில் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து நடிகர் விமலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விளக்கமளித்த விமல்
இந்நிலையில், இந்த தகவல் குறித்து நடிகர் விமல் கூறியதாவது, "எனக்கு மாரடைப்பு எதுவும் இல்லை. நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். தற்போது மைக்கேல் இயக்கத்தில் புதிய படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் நான் மதுவுக்கு அடிமையாகி வீட்டிலேயே ரகசிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. இது யார் செய்கிறார்கள் என்று எனக்கு தெரியும். அதனால் இந்த சின்ன பிள்ளை வேலையெல்லாம் விட்டு விட்டு பிழைக்கிற வழிய பாருங்க. வாழவிடுங்க நீங்களும் வாழுங்க" என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






