என் மலர்
நீங்கள் தேடியது "விமல்"
- படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
- படம் மார்ச் 6ஆம் தேதி வெளியாக உள்ளது.
வி.கே.கேந்திரன் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகி உள்ளப் படம் வடம். உள்ளூர் கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக காளை அடக்குதல் போட்டியை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விமல் உடன் நட்டி சுப்ரமணியம், சனக்ஷா ஸ்ரீ, பாலா சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் மார்ச் 6ஆம் தேதி வெளியாக உள்ளநிலையில் இதன் டிரெய்லர் வெளியாகி உள்ளது. பலரும் விமலின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.
- 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படவில்லை
- இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வரும் 19 ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்காததால் அறிவித்த தேதியில் படம் வெளியாகாமல் போனது. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வரும் 19 ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
இதனிடையே, 'ஜன நாயகன்' பட விவகாரத்தில் மத்திய அரசு விஜய்க்கு அரசியல் அழுத்தம் தருவதாக தி.மு.க.வும், தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜன நாயகன் சென்சார் விவகாரம் குறித்து நடிகர் விமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விமல், "இதெல்லாம் என்கிட்ட கேட்டா.. எனக்கு என்ன தெரியும். நான் பதில் சொல்ற மாதிரியான கேள்வியா கேளுங்க" என்று தெரிவித்தார்.
- நட்டி சுப்ரமணியம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சசிகுமார் வெளியிட்டுள்ளார்.
கேத்திரன் இயக்கத்தில், ராஜசேகரன் தயாரிப்பில் நடிகர் விமல் மற்றும் புதுமுக நடிகை சங்கீதா நடிப்பில் உருவாகி உள்ள படம் வடம். இப்படத்தில் நட்டி சுப்ரமணியம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படம் வடமாடு குறித்த கதையை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, கோவை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சசிகுமார் வெளியிட்டுள்ளார். மண், மக்கள், மரியாதை, வீரம் நான்கும் பேசும் படம் வடம் என சசிகுமார் குறிப்பிட்டுள்ளார். டீசர், படம் வெளியீடு குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






