search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடுகளம் நரேன்"

    • நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன்.
    • படத்தின் 50 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டு உள்ளன.

    திரைப்பட துறையில் யாரும் எதிர்பாராமல் வெற்றி பெற்ற படங்கள் ஏராளம் உண்டு. அத்தகைய படங்கள் பெரும்பாலும் நம்பிக்கை என்ற ஒற்றை அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து சிறப்பான கதை மற்றும் தொழில்நுட்ப குழுவின் நேர்த்தியான படைப்பு தான் அதை வெற்றி படமாக மாற்றும். இந்த வரிசையில் "மாயன்" திரைப்படம் நிச்சயம் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன். இந்த படம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் வெளியாகவுள்ளது. ஃபேண்டஸி, திரில்லர் மற்றும் வரலாறு என மூன்றுவித ஜானரில் நகரும் வகையில், இந்த படத்தின் கதை எழுதப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.

    இந்திய திரையுலகில் உருவாக்கப்பட்டதிலேயே அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக "மாயன்" இருக்கிறது. இந்த படத்தின் 50 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டு உள்ளன. இதற்காக டிஜிட்டல் புரொடக்ஷன் செய்யப்பட்டது.

    ஜெ.ராஜேஷ் கன்னா எழுதி, இயக்கி இருக்கும் "மாயன்" படத்தை ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளார். இந்த படத்தில் வினோத் மோகன் மற்றும் பிந்து மாதவி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆங்கில பதிப்பில் பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

    இவர்கள் தவிர பியா பாஜ்பாய், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், சாய் தீனா, கஞ்சா கருப்பு, கே.கே. மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எம்.எஸ். ஜோன்ஸ் ரூபெர்ட் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கே. அருண் பிரசாத், படத்தொகுப்பு பணிகளை எம்.ஆர். ராஜேஷ் மேற்கொண்டுள்ளனர். கலை இயக்க பணிகளை ஏ. வனராஜ் மேற்கொண்டுள்ளார்.

    இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் தம்பி ராமையா.
    • ராஜாகிளி படமானது 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் தம்பி ராமையா. ஏற்கனவே சமுத்திரகனி தம்பி ராமையா, ஆகியோர் இணைந்து சாட்டை, அப்பா, வினோதய சித்தம் போன்ற படங்களில் நடித்திருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ராஜாகிளி என்ற புதிய படத்தில் இணிந்து நடித்துள்ளனர்.

    'மாநாடு', 'கங்காரு', 'மிகமிக அவசரம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் கதையின் நாயகனாக சமுத்திரக்கனியும், கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கிய வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், பழ.கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவின்.ஜி, இயக்குனர் மூர்த்தி, 'கும்கி' அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், 'கும்கி' தரணி, தீபா, பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இயக்கியுள்ளார்.

    இப்படத்திற்கு கதை , வசனம், திரைக்கதை, பாடல்வரிகள் மற்றும் இசையமைப்பாளராக தம்பி ராமையா பணியாற்றியுள்ளார். மேலும் படத்திற்கு கேதர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். நேற்று (ஜூன் 19) தம்பி ராமையாவின் பிறந்தநாளை முன்னிட்டு பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ராஜாகிளி படமானது 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தில் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
    • இந்த படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

    மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'போகுமிடம் வெகுதூரமில்லை'. இந்த படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் நித்துள்ளனர்.

    இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. விமல் அமரர் ஊர்தி ஓட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    விரைவில் வெளியாக இருக்கும் "போகுமிடம் வெகுதூரமில்லை" படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. டிரைலரில் விமல் மற்றும் கருணாஸ் அமரர் ஊர்தியில் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த படம் அழுத்தமான கதையம்சம் கொண்டிருக்கும் என்று டிரைலரில் தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் பாரதி ராஜா தற்போது அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • அன்னையர் தினத்தை முன்னிட்டு 'நிறம் மாறும் உலகில்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் பாரதி ராஜா தற்போது அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது, போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. படத்தின் கில்ம்ப்ஸ் வீடியோ சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்ட நிலையில் தற்பொழுது

    அன்னையர் தினத்தை முன்னிட்டு 'நிறம் மாறும் உலகில்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘போகும் இடம் வெகுதூரமில்லை’
    • படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

    மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'போகும் இடம் வெகுதூரமில்லை' படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

    ரகுநந்தன் இசையமைத்துள்ளார். படம் பற்றி மைக்கேல் கே.ராஜா கூறியதாவது:-

    மந்திரி குமாரி படத்தில் இடம் பெற்ற வாராய் நீ வாராய் என்ற பாடலில் இடம்பெற்ற போகும் இடம் வெகு தூரமில்லை என்ற பாடல் வரிகளை தலைப்பாக எடுத்தோம். படத்துக்கு இந்த தலைப்பு பொருத்தமாக அமைந்தது.

    விமல் ஆம்புலன்ஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெருக்கூத்து கலைஞராக கருணாஸ் நடித்துள்ளார். அரசியல் புள்ளி ஒருவர் இறந்துவிட அவரது உடலை ஏற்றிக்கொண்டு அவர் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் களக்காடை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் விமல்.

    ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் நிலையில் விமல் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மன அழுதத்தில் அரசியல் பிரமுகர் உடலை ஏற்றி சென்று கொண்டிருக்கும் விமல் ஆம்புலன்சை வழிமறித்து கருணாஸ் ஏறுகிறார். மன அழுத்தத்தில் சென்று கொண்டிருக்கும் விமலின் அருகில் அமர்ந்து கொண்ட கருணாஸ் வள வளவென பேசிக் கொண்டே வருகிறார். இது ஒருபுறமிருக்க மரணமடைந்த அரசியல் புள்ளிக்கு இரண்டு மனைவிகள். இருவருக்கும் ஆளுக்கொரு ஆண் பிள்ளைகள். இவர்களால் யார் தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்வது என்பது பற்றி குடும்பத்தில் தகராறு ஏற்படுகிறது.

    இதையொட்டி நடந்தது என்ன? என்பது தான் படத்தின் கதை. படத்தின் டிரெய்லர் வெளியாகி வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×