அன்னையர் தின ஸ்பெஷல்- புதிய போஸ்டர் வெளியிட்ட 'நிறம் மாறும் உலகில்' படக்குழு

இயக்குனர் பாரதி ராஜா தற்போது அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.அன்னையர் தினத்தை முன்னிட்டு 'நிறம் மாறும் உலகில்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அன்னையர் தின ஸ்பெஷல்- புதிய போஸ்டர் வெளியிட்ட 'நிறம் மாறும் உலகில்' படக்குழு
Published on

இயக்குனர் பாரதி ராஜா தற்போது அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது, போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. படத்தின் கில்ம்ப்ஸ் வீடியோ சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்ட நிலையில் தற்பொழுது

அன்னையர் தினத்தை முன்னிட்டு 'நிறம் மாறும் உலகில்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com