என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடிவுக்கரசி"

    • சிங்கம் புலி, திலீபன், ஜீவி அபர்ணா, கஜராஜ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    • ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

    நகுல், பாக்யராஜ், நீது சந்திரா மற்றும் ஆஷ்னா ஜவேரி ஆகியோர் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான 'பிரம்மா.காம்' படத்தை இயக்கிய விஜயகுமாரன் தற்போது இயக்கி உள்ள படம் 'க்ராணி' (Granny).

    இப்படத்தில் பழம்பெரும் நடிகை வடிவுக்கரசி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிங்கம் புலி, திலீபன், ஜீவி அபர்ணா, கஜராஜ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    ஏ. மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சீ.டா. பாண்டியன் இசையமைத்துள்ளார். ஹாரர் திரில்லராக உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை விஜயா மேரி யுனிவர்சல் மீடியா'ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயா மேரி தயாரித்து உள்ளார். இப்படம் தொடர்பாக ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

     

    இந்த நிலையில், 'க்ராணி' படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இப்படம் வருகிற 30-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

    • கடந்த டிசம்பரில் கோவையில் அவருக்கு இதய அறுவைச் சிகிச்சைச நடந்தது.
    • உடம்பு சரியில்லாமல் ராஜேஷ் காலமாகி விட்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    நடிகா் ராஜேஷ் மறைவு பற்றி நடிகை வடிவுக்கரசி கூறியதாவது:-

    என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எத்தனையோ நடிகர்களுடன் நடித்து வருகிறோம். ராஜேஷ் அவ்வளவு நல்ல மனிதர். தப்பு பண்ணுவதற்கே பயப்படுவார்.

    என்னுடைய பிறந்த நாளை நான் மறந்துவிட்டால் கூட அவரோட வாழ்த்துதான் முதலில் வரும். கடைசி நிமிடம் வரை நடித்துக் கொண்டிருப்பீர்கள் என என்னைப் பார்த்து சொல்வார்.

    கடந்த வாரம் என்னிடம் அவர் பட்டுக்கோட்டை போய் வந்தேன். மகனுக்கு பெண் பார்த்தாச்சு. ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் திருமணம் வைத்துக் கொள்ளலாம். அதைப் பற்றி விளக்கமாக உங்களிடம் சொல்கிறேன். என கூறினார்.

    ரொம்ப சந்தோஷம் என நான் கூறியதும் மகன் திருமணத்திற்கு உங்களுக்கு நல்ல பட்டு புடவை வாங்கி தருகிறேன் என கூறினார். கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி சித்த மருத்துவமனை திறப்பு விழாவிற்காக நானும் அவரும் திருச்சி போயிருந்தோம்.

    அப்போது அவரிடம் நான் கன்னிப் பருவத்திலே படம் திருச்சியில் நாம் இருவரும் தான் நடித்தோம். அதற்கு அவர் ஆமாம்... ஆமாம்.. நீங்கள் தான் என் முதல் கதாநாயகி என சொன்னார்.

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 அன்று கன்னிப் பருவத்திலே படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆச்சு என்று வருடம் தவறாமல் பேசுவார். சாப்பாடு, ஆரோக்கியத்திலும் ரொம்ப சரியாக இருப்பார். அவர் உடம்பு சரியில்லாமல் காலமாகி விட்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

    இப்பவும் யாரையோ பற்றி பேசுகிறோம் என்று தான் உள்ளது. ராஜேஷ் சாரை பற்றி பேசுகிறோம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்பதானே பேசினோம் என்று தோன்றுகிறது.

    கடந்த டிசம்பரில் கோவையில் அவருக்கு இதய அறுவைச் சிகிச்சைச நடந்தது. தற்போது அவர் மறைந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

    இவ்வாறு கண்கலங்கிய படி அவர் கூறினார்.

    • இயக்குனர் பாரதி ராஜா தற்போது அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • அன்னையர் தினத்தை முன்னிட்டு 'நிறம் மாறும் உலகில்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் பாரதி ராஜா தற்போது அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது, போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. படத்தின் கில்ம்ப்ஸ் வீடியோ சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்ட நிலையில் தற்பொழுது

    அன்னையர் தினத்தை முன்னிட்டு 'நிறம் மாறும் உலகில்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×