என் மலர்
நீங்கள் தேடியது "சாண்டி"
- தேசிய விருது வென்ற பார்க்கிங் படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது
- மாஸ்டர் சாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் 'பாம்'. இதில் நடிகர் நாசர், காளி வெங்கட், அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்றாலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் அர்ஜுன் தாஸின் புதியபட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய விருது வென்ற பார்க்கிங் படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வேணுகோபால் இயக்குகிறார். நடிகை தேஜு அஷ்வினி நடிக்கவிருக்கிறார்.
மேலும் நடன இயக்குநரும், நடிகருமான சாண்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு சூப்பர் ஹீரோ என பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெல்லங்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்த ஹாரர்-த்ரில்லர் "கிஷ்கிந்தாபுரி" படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
டிக்கெட் விற்பனையிலும் உயர்வு பதிவாகியுள்ளது. புக் மை ஷோ தகவல்படி, சனிக்கிழமையே சுமார் 75,000 டிக்கெட்டுகள் விற்பனையானது. இது வெள்ளிக்கிழமை விட 25,000 அதிகமாகும்.
இப்படத்தை கவுஷிக் பேகல்பட்டி ( Chavu Kaburu Challaga புகழ்) இயக்கியுள்ளார். இது ஒரு ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.
சாண்டி மாஸ்டர், தனிக்கெல்லா பாரணி, ஸ்ரீகாந்த் அய்யங்கார், ஹைப்பர் ஆதி, மக்ரந்த் தேஷ்பாண்டே, சுதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சாண்டி மாஸ்டர் இதி ஒரு வித்தியாசமான வில்லன் கதாப்பாத்திரம் மற்றும் தோற்றத்தில் நடித்துள்ளார். அவர் நடித்த ஒரு காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் வெளியாகி வசூல் வேட்டை நடத்திவரும் லோகா படத்திலும் வில்லன் கதாப்பாத்திரத்தில் சாண்டி நடித்தது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடன இயக்குநராக இருந்து தற்போது வில்லன் கதாப்பாத்திரத்தில் மிரட்டி வருகிறார். இன்னும் பல மொழிகளில் பல திரைப்படங்களில் கமிட் ஆகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
தொழில்நுட்பம்:
இசை: சைதன் பாரத்வாஜ்
தயாரிப்பு: சாகு கருபட்டி – ஷைன் ஸ்க்ரீன்ஸ்
ஒளிப்பதிவு – சின்மயி சலஸ்கர்
எடிட்டிங் – நிரஞ்சன் தேவரமணே
கலை இயக்கம் – டி. சிவ காமேஷ்
தயாரிப்பு வடிவமைப்பு – மனிஷா தத்
- நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
- கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பூஜா ஹெக்டே, சௌவின் ஷாஹிர் உடன் ஆட்டம் போட்டிருப்பார். இப்பாடலை விஷ்ணு ஏதவன் எழுத சுப்லாஷினி, அனிருத் பாடியுள்ளனர். இவருடன் அசல் கோலார் RAP செய்துள்ளார்.
பாடலில் ஆடிய நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடலிற்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இதற்கு வாய்ப்பு கொடுத்த அனைவரையும் குறிப்பிட்டு அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் சாண்டி மாஸ்டரும் சௌபின் சாஹிரும் இணைந்து மோனிகா பாடலை பார்க்கின்றனர். சாண்டி மாஸ்டருக்கு சௌபின் அரவணைத்து முத்தம் கொடுக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
- ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாண்டி மாஸ்டர் பகிர்ந்துள்ளார்.
- கூலி படத்தில் இடம்பெற்றுள்ள சிக்கிடு பாடலுக்கு சாண்டி மாஸ்டர் தான் நடனம் அமைத்துள்ளார்.
ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாண்டி மாஸ்டர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த ஆண்டு எனது பிறந்தநாள் தலைவரின் ஆசியுடன் மிகவும் சிறப்பாக அமைந்தது" என்று தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தில் இடம்பெற்றுள்ள சிக்கிடு பாடலுக்கு சாண்டி மாஸ்டர் தான் நடனம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார்.
- ஆயுதஎழுத்து திரைப்படத்தில் செல்வநாயகம் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.
16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார். அதை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில் , சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை , முதல் மரியாதை போன்ற மெகா ஹீட் படங்களை இயக்கினார்.
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு மாற்றிய கலைஞர்களில் பாரதி ராஜா முக்கியமான ஒருவர். படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் பிறப் படங்களில் நடித்துக இருக்கிறார். ஆயுதஎழுத்து திரைப்படத்தில் செல்வநாயகம் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து பாண்டியநாடு, குரங்கு பொம்மை, நம்ம வீட்டு பிள்ளை, ராக்கி, வாத்தி, திருசிற்றம்பலம் போன்ற படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
சமீபத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த கள்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து அறிமுக இயக்குனரான பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் "நிறம் மாறும் உலகில்" நடித்துள்ளார்.
பாரதிராஜாவுடன் நட்டி, ரியோராஜ் மற்றும் சாண்டி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உட்பட பலர் நடிக்கின்றனர்.
மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக் ஷன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமாஇன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கிறது.
இப்படத்தில் 4 நபர்களின் வாழ்க்கையையும் அதை ஒருப் புள்ளியில் இணையும் கதைகக்களமாக அமைந்து இருக்கிறது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படம் இது என குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. படம் வெளியாகும் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் பாரதி ராஜா தற்போது அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
- அன்னையர் தினத்தை முன்னிட்டு 'நிறம் மாறும் உலகில்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் பாரதி ராஜா தற்போது அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது, போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. படத்தின் கில்ம்ப்ஸ் வீடியோ சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்ட நிலையில் தற்பொழுது
அன்னையர் தினத்தை முன்னிட்டு 'நிறம் மாறும் உலகில்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






