என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    `கிஷ்கிந்தாபுரி பாக்ஸ் ஆபிஸ் வரவேற்பு - வில்லன் அவதாரத்தில் கலக்கும் சாண்டி மாஸ்டர்
    X

    `கிஷ்கிந்தாபுரி' பாக்ஸ் ஆபிஸ் வரவேற்பு - வில்லன் அவதாரத்தில் கலக்கும் சாண்டி மாஸ்டர்

    ஹாரர்-த்ரில்லர் "கிஷ்கிந்தாபுரி" படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    பெல்லங்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்த ஹாரர்-த்ரில்லர் "கிஷ்கிந்தாபுரி" படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    டிக்கெட் விற்பனையிலும் உயர்வு பதிவாகியுள்ளது. புக் மை ஷோ தகவல்படி, சனிக்கிழமையே சுமார் 75,000 டிக்கெட்டுகள் விற்பனையானது. இது வெள்ளிக்கிழமை விட 25,000 அதிகமாகும்.

    இப்படத்தை கவுஷிக் பேகல்பட்டி ( Chavu Kaburu Challaga புகழ்) இயக்கியுள்ளார். இது ஒரு ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.

    சாண்டி மாஸ்டர், தனிக்கெல்லா பாரணி, ஸ்ரீகாந்த் அய்யங்கார், ஹைப்பர் ஆதி, மக்ரந்த் தேஷ்பாண்டே, சுதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    சாண்டி மாஸ்டர் இதி ஒரு வித்தியாசமான வில்லன் கதாப்பாத்திரம் மற்றும் தோற்றத்தில் நடித்துள்ளார். அவர் நடித்த ஒரு காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் வெளியாகி வசூல் வேட்டை நடத்திவரும் லோகா படத்திலும் வில்லன் கதாப்பாத்திரத்தில் சாண்டி நடித்தது குறிப்பிடத்தக்கது.

    பிரபல நடன இயக்குநராக இருந்து தற்போது வில்லன் கதாப்பாத்திரத்தில் மிரட்டி வருகிறார். இன்னும் பல மொழிகளில் பல திரைப்படங்களில் கமிட் ஆகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    தொழில்நுட்பம்:

    இசை: சைதன் பாரத்வாஜ்

    தயாரிப்பு: சாகு கருபட்டி – ஷைன் ஸ்க்ரீன்ஸ்

    ஒளிப்பதிவு – சின்மயி சலஸ்கர்

    எடிட்டிங் – நிரஞ்சன் தேவரமணே

    கலை இயக்கம் – டி. சிவ காமேஷ்

    தயாரிப்பு வடிவமைப்பு – மனிஷா தத்

    Next Story
    ×