search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trending"

    • பெண்ணின் உணர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலானது.
    • பெண்ணிடம் ஒரு பரிசு பையை கொடுத்து திறக்க சொல்கிறார்.

    ஏழைகளுக்கு உணவு, உடை கொடுத்து பலரும் உதவி செய்வார்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த சமூகவலைதள பிரபலம் ஒருவர் வீடற்ற ஒரு பெண்ணுக்கு குடியிருப்பு வழங்கி உள்ளார்.

    இதுதொடர்பாக அந்த பெண்ணின் உணர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலானது. இன்ஸ்டாகிராமில் இசாஹியா கிராஸா என்ற பயனர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், அவர் தனது வாகனத்தில் ஒரு பெண்ணை வாழ்த்தும் காட்சிகள் உள்ளது.

    அப்போது அந்த பெண்ணிடம் ஒரு பரிசு பையை கொடுத்து திறக்க சொல்கிறார். அந்த பையில் வீட்டு சாவி இருக்கிறது. அப்போது, நான் உங்களுக்கு ஒரு குடியிருப்பை தருகிறேன் என கூறுகிறார். இதைகேட்டதும் அந்த பெண்ணின் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது.

    தொடர்ந்து வீடியோவில், அந்த பெண்ணை கிராஸா புதிய வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அந்த வீட்டில் படுக்கை வசதி, டி.வி. உள்ளிட்ட கூடுதல் வசதிகள் இருக்கிறது.

    வீடியோவுடன் கிராஸாவின் பதிவில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு இல்லாமல் தெருக்களில் வாழ்ந்து வந்த பெண்ணுக்கு வீட்டை கொடுத்து ஆச்சரியப்படுத்துகிறேன். அந்த பெண் ஒரு அற்புதமானவர். இந்த அழகான தருணத்தை என்னால் மறக்க முடியாது.

    சமூக வலைதளங்களில் 200 மில்லியன் பார்வைகளை பெற்றதன் விளைவாக இந்த சிறிய மாற்றத்தை ஏற்படுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு 1.10 கோடிக்கும் மேல் பார்வைகளையும், 9 லட்சம் விருப்பங்களையும் குவித்துள்ளது. பயனர்கள் பலரும் கிராஸாவை வாழ்த்தியும், பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.

    • தற்போது தவுபா தவுபா பாடல் டிரெண்டிங்கில் உள்ளது.
    • நடிகர் விக்கி கவுசல் அசத்தலாக நடனம் ஆடியிருப்பார்.

    சமூக ஊடகங்களில் தற்போது தவுபா தவுபா பாடல் டிரெண்டிங்கில் உள்ளது. பேட் நியூஸ் படத்தில் இடம் பெற்ற இந்த பாடலுக்கு நடிகர் விக்கி கவுசல் அசத்தலாக நடனம் ஆடியிருப்பார்.

    இந்த பாடலுக்கு இளசுகள் நடனமாடி வலைத்தளத்தில் பதிவேற்றி லைக்குகளை அள்ளிக் குவித்துவரும் நிலையில், கர்நாடகத்தின் ஆதரவற்ற முதியோர் இல்ல மூதாட்டிகளும் நடனமாடி யாவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளனர்.

    மூதாட்டிகள் 6 பேர் குழுவாக ஒரே நிறத்தில் சேலை கட்டி, தவுபா பாடலுக்கு அழகாக நடனம் ஆடுகிறார்கள். துள்ளல் நடனம் நிறைந்த அந்த பாடலுக்கு, மூதாட்டிகள் எளிமையாக நடனமாடி இருப்பது, நடிகரான விக்கி கவுசலையும் கவர்ந்துள்ளது.

    அவரும் அந்த நடன வீடியோவின் கீழ் கருத்து பதிவிட்டு பாராட்டி உள்ளார். தனது வலைத்தள பக்கத்திலும் பகிர்ந்தார்.

    இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது. 3.5 லட்சம் பேர் விருப்பப் பொத்தானை அழுத்தி ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    • டெட்பூல் திரைப்படத்திற்கு இந்தியாவிலும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர்.
    • இப்படம் வரும் 26ஆம் தேதி திரையங்களில் வெளியாக உள்ளது.

    மார்வெல் யுனிவர்ஸின் டெட்பூல் திரைப்படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது Deadpool & Wolverine என்ற படம் வெளியாக உள்ளது.

    ஷான் லெவி இயக்கும் இப்படத்தில் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் 21 லேப்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    டெட்பூல் திரைப்படத்திற்கு இந்தியாவிலும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர். அவ்வகையில் வரும் வாரம் வெளியாகவுள்ள டெட்பூல் & வோல்வரின் படத்திற்கான கொண்டாட்டங்களில் இந்திய ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    டெட்பூல் & வோல்வரின் படம் வெளியாவதை ஒட்டி ஐதராபாத்தில் இப்படத்தின் மிகப்பெரிய கட் அவுட்களை வைத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக ஹக் ஜேக்மேன் பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வார்னர் ப்ரோஸ்-க்கு சொந்தமானது அமெரிக்க கேபிள் தொலைக்காட்சி சேனலான கார்ட்டூன் நெட்வொர்க்.
    • டாம் அண்ட் ஜெரி, ஸ்கூபி டூ, பவர் கர்ல்ஸ் , ஜானி பிராவோ கார்ட்டூன்களை பார்த்து மகிழ்ந்திருப்போம்.

    வார்னர் ப்ரோஸ்-க்கு சொந்தமானது அமெரிக்க கேபிள் தொலைக்காட்சி சேனலான கார்ட்டூன் நெட்வொர்க். அனைவரும் சிறுவயதில் டாம் அண்ட் ஜெரி, ஸ்கூபி டூ, பவர் கர்ல்ஸ் , ஜானி பிரேவோ கார்ட்டூன்களை பார்த்து மகிழ்ந்திருப்போம். இதை அனைத்தும் தயாரித்து அனைவரும் மகிழ்ச்சிக்கு வழிவகையாக இருந்தது கார்ட்டூன் நென்வொர்க் சேனல் ஆகும்.

    ஆனால் நாளடைவில் இதற்கு போட்டியாக பல தொலைக்காட்சி சேனல்கள் வந்தன. ஆனாலும் கார்ட்டூன் நெட்வொர்க்கின் உச்சம் குறையவில்லை. 2021 ஆம் ஆண்டு கோவிட் வந்த போது பல நிறுவனத்தில் இருந்து பணியிடை நீக்கம் நடந்தது. ஆனால் கோவிட் காலத்தில் எந்த ஒரு நட்டமும் இல்லாமல் இயங்கியது இந்த அனிமேஷன் துறை மட்டுமே ஆனால் பணத்தாசை பிடித்த முதலாளிகளுக்கு பலியாகும் விதமாக பல அனிமேஷன் நிபுணர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதனால் அடுத்த சில ஆண்டுகளில் பல பிரபல அனிமேஷன் ஸ்டூடியோக்களில் இருந்து பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் பல டிசைனர்ஸ் ஒன்றிணைந்து ஒரு கார்ட்டூன் நெட்வொர்க்கை கிண்டல் செய்யும் விதமாக எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் உங்களுக்கு பிடித்தமான கார்ட்டுன் நெட்வொர்க் சேனலின் பிடித்த ஷோவின் கிலிப்பை #ripcartoonnetwork என்று பதிவிடமாறு கூறியிருந்தனர்.

    இதன் விளைவாக இந்த ஹேஷ்டாக் டிவிட்டரில் வைரலாகி , இன்று முழுவதும் டிரெண்டிங்கில் உள்ளது. இதனால் பலரும் கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனம் மூடப்பட்டது என தவறான கண்ணோட்டத்தில் புரிந்துக்கொண்டனர்.

    • இவருக்காக இதை செய்ய வேண்டும்' என்ற விஷயத்தில் எனக்கு விருப்பம் இல்லை.
    • சமூக வலைதளங்களில் வலம்வரும் #DoItForDravid பதிவுகள் குறித்து ராகுல் டிராவிட் கருத்து.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஓய்வு பெறும் ராகுல் டிராவிட்டிற்காக டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என #DoltForDravid என்கிற ஹேஷ்டேக் வலைதளங்களில் ட்ரெண்ட் ஆவது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறியிருப்பதாவது:-

    'DO IT FOR DRAVID'- இதெல்லாம் எனக்கு புடிக்காது

    "எவெரஸ்ட் சிகரத்தை ஏன் ஏற வேண்டும்?" என்ற கேள்விக்கு, "எவெரஸ்ட் சிகரம் என்ற ஒரு விஷயம் உள்ளது.

    அதில் ஏறப் போகிறேன்.. அவ்வளவுதான்" என ஒருவர் சொன்னதாக கூறுவார்கள். அப்படித்தான் உலக கோப்பை என ஒன்று உள்ளது, அதை வெல்ல வேண்டும் என விரும்புகிறேன். அவ்வளவுதான். வேறு யாருக்காகவும் கிடையாது.

    'இவருக்காக இதை செய்ய வேண்டும்' என்ற விஷயத்தில் எனக்கு விருப்பம் இல்லை. வேறு ஒருவருக்காக ஒரு செயலை செய்வது என்னுடைய நம்பிக்கை, தன்மைக்கு எதிரானது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இவர் பிரபல தமிழ் பின்னணி பாடகரான திப்பு மற்றும் ஹரிணியின் மகன் ஆவார்.
    • டந்த ஜனவரி மாதம் ’கட்சி சேர’ என்ற பாடலை இசையமைத்து பாடி இருந்தார். இப்பாடல் வெளியாகிய குறுகிய நாட்களிலே இணைய தளத்தில் வைரலாகியது.

    இளம் இசையமைப்பாளர் பட்டியலில் மிக முக்கியமானவராக திகழ்கிறார் சாய்  அபியங்கர், இவர் பிரபல தமிழ் பின்னணி பாடகரான திப்பு மற்றும் ஹரிணியின் மகன் ஆவார். 21 வயது ஆகும் இவர் கடந்த ஜனவரி மாதம் 'கட்சி சேர' என்ற பாடலை இசையமைத்து பாடி இருந்தார். இப்பாடல் வெளியாகிய குறுகிய நாட்களிலே இணைய தளத்தில் வைரலாகியது. இன்ஸ்டாகிராம் மக்கள் ரீல்ஸ்-சை இப்பாடலுக்கு நடனம் ஆடி  பதிவு செய்த வண்ணம் கொண்டு இருந்தனர்.

    கட்சி சேர வீடியோ பாடலில் சாய் அபியங்கர் பாடுவது போல, இவர் கூட நடிகை சம்யுக்தா மேனன் நடனம் ஆடியிருப்பார். இப்பாடலில்  சம்யுக்தா ஆடும் ஒரு குறிப்பிட்ட ஸ்டெப் மிகப் பெரிய வைரல் எலெமண்ட் ஆனது. அதனை அனைவரும் ரீகிரியேட் செய்து போஸ்டுகளை பதிவிட்டனர். யூடியூபில் இப்பாடலை இதுவரை 12 கோடியே 90 லட்ச பார்வைகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வைரல் பாடலை தொடர்ந்து தற்பொழுது சாய் அபியங்கர் அவரது அடுத்த பாடலான 'ஆச கூட' என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இப்பாடலை அவரே இசையமைத்து , பாடியும் உள்ளார். இவருடன் அவரது தங்கையான சாய் ஸ்மிருத்தியும் இணைந்து பாடியுள்ளார்.

    இந்த பாடலின் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பாடலில் ஸ்டார் திரைப்படத்தில் நடித்த ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இப்பாடலும் கூடிய விரைவில் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாய் அப்யங்கர் தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக காலடி எடுத்து வைக்கும் தூரம் வெகு தூரமில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள்.
    • கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    'வடக்கன்' திரைப்படத்தின் பெயரை தணிக்கை அதிகாரிகள் தடை செய்ததால், தற்போது அப்படத்தின் பெயர் 'ரயில்' என மாற்றப்பட்டுள்ளது

    எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகவுள்ள இப்படத்தை டிஸ்கவரி சினிமாஸ் தயாரிக்கிறது.

    வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    இப்படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

    தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மாமா எர்த் 2016 ஆம் ஆண்டில் காஸல் அலாக் மற்றும் வருண் தம்பதிகள் இருவராலும் தொடங்கப்பட்ட ஒரு ஸ்கின் கேர் நிறுவனமாகும்,
    • மாமா எர்த் பொருட்கள் நீங்கள் உபயோகித்து கொண்டு இருந்தால் அதை உடனே குப்பையில் எறிந்து விடுங்கள்" என ஒரு பதிவை அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார்.

    மாமா எர்த் 2016 ஆம் ஆண்டில் காஸல் அலாக் மற்றும் வருண் தம்பதிகள் இருவராலும் தொடங்கப்பட்ட ஒரு ஸ்கின் கேர் நிறுவனமாகும், மார்கெட்டில் உள்ள பெரும்பாலும் ஸ்கின் கேர் பொருட்களில் நிறைய கெமிகல்களும் , நச்சு தன்மை அதிகம் உடைய வேதி பொருட்களையும் கலக்கின்றனர்.

    இதனால் அந்த பொருட்களை நாம் உபயோகிக்கும் பொழுது நமக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. இதை உடைக்க வேண்டும் என்பதற்காக முழுக்க முழுக்க இயற்கை முறையில் தயார் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் தான் மாமா எர்த்.

    மாமா எர்த்தின் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து இன்று பிரபல நிறுவனமாக திகழ்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் அதிதி என்பவர்," மாமா எர்த் பொருட்கள் நீங்கள் உபயோகித்து கொண்டு இருந்தால் அதை உடனே குப்பையில் எறிந்து விடுங்கள்" என ஒரு பதிவை அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார்.

    இந்த பதிவு எக்ஸ் பக்கத்தில் வைரலாகி, பத்து லட்சத்திற்கும் அதிக பார்வைகளை பெற்றது. இப்பதிவிற்கு மாமா எர்த்தின் சி.இ.ஓ. ஆன காசல், "வணக்கம் அதிதி , காலையில் இவ்வளவு வெறுப்புணர்வோடு இருபீங்கன்னு நான் நினைக்கவில்லை, உங்களுக்கு எங்களோட பொருட்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் கூறுங்கள் அதை சரி செய்து தருகிறோம்" என்றார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் அதிதி, "எப்படி நியாயமான கருத்து பதிவை நீங்கள் ஏற்க மறுக்கின்றீர்கள், இது எனக்கு மட்டும் நடந்தது அல்ல மக்களில் நிறைய பேர் இதை உணர்கிறார்கள், உங்கள் பொருட்களில் தரம் இல்லை" என்று குற்றம் சாட்டியுள்ளார். இவர் செய்த பதிவிற்கு மக்கள் அதற்கு ஆதரிக்கும் வகையில்  அதிகளவில் மாமா எர்த் பொருட்களின் மீது குற்றம் சாட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

    சாசி இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஐடி செல் மற்றும் ஆர்.சி.பி. சோக்கர் கூட்டமைப்பின் சி.இ.ஓ. என்பது குறிப்பிடத்தக்கது

    • வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
    • 'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள்.

    எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகியுள்ள வடக்கன் படத்தின் டீசரை சில வாரங்களுக்கு முன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

    வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள்.கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

    தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் அமைந்து இருக்கிறது வடக்கன் திரைப்படம். படத்தின் வெளியீட்டு தேதி மே மாதம் முதலில் வெளியாக இருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அந்த தேதி மாற்றமடைந்தது. இந்த நிலையில் வடக்கன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிஸ்கவரி சினிமாஸ் படத்தின் தலைப்பை மாற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதுகுறித்து டிஸ்கவரி சினிமாஸ் உரிமையாளர் மு.வேடியப்பன் தெரிவித்துள்ளதாவது..

    "எங்கள் டிஸ்கவரி சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான விரைவில் வெளியீடு காண இருக்கும் 'வடக்கன்' திரைப்படத்தின் பெயர், தணிக்கை அதிகாரிகள் தடை செய்ததால், தற்போது 'ரயில்' என்று மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். படத்தின் வெளியீட்டுத் தேதி அடுத்த அறிவிப்பில் வெளியாகும்! உங்கள் அனைவரின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்." என மு.வேடியப்பன் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டி20 உலகக் கோப்பை தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒளிபரப்பி வருகிறது.
    • ஹர்திக் பாண்ட்யாவின் படத்தை தவறாக ஒளிபரப்பியது.

    டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை ஓ.டி.டி.-யில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒளிபரப்பி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூகினியா அணிகள் மோதின. இந்த போட்டி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது. அப்போது ஒளிபரப்பாளர்கள் இரு அணி வீரர்களின் ஸ்கோரையும், சிறந்த வீரர்கள் யார் என்பவர்களின் படத்தையும் காட்டினார்கள்.

    இதில் பிராண்டன் கிங், சேசா புவா, ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் ஆசாத் வாலா ஆகியோரின் புகைப்படங்களுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவின் படத்தை வைத்துவிட்டது. மேலும், இதே படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஐந்துமுறை ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது. 

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    • மைக்கேல் என்பவருக்கு சமீபத்தில் முக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
    • இணையத்தில் வைரலான நிலையில் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    துருக்கியை சேர்ந்த மைக்கேல் என்பவருக்கு சமீபத்தில் முக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரை இளமையாக காட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையை தொடர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது.

    அதில், சிகிச்சைக்கு முன்பு அவரது தோற்றம் மற்றும் சிகிச்சைக்கு பின்னர் அவரது தோற்றம் குறித்த படங்கள் உள்ளன.

    புகைப்படங்களுடன் அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த நிபுணர்கள் வெளியிட்ட பதிவில், மைக்கேலுக்கு பேஸ் லிப்ட், நெக் லிப்ட், கீழ் கண் இமை உள்ளிட்ட இடங்களில் முடி மாற்று செயல்முறைகளை நாங்கள் செய்தோம். அவர் நம்பமுடியாத மாற்றத்தை பெற்றார். அதை நீங்கள் புகைப்படங்களில் காணலாம். நாங்கள் எப்போதும் முழுமையானதாக எடுத்துக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளனர்.

    இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த மாற்றத்தை நம்ப முடியவில்லை என ஒரு பயனரும், துருக்கியில் அற்புதங்களை செய்கிறார்கள் என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளனர். இதேபோல பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட இந்த பதிவு விவாதமாக மாறி உள்ளது.

    • தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் நயன்தாரா.
    • நயன்தாரா கடந்த ஆண்டு சாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

    தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் நயன்தாரா. விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்து வரும் நயன்தாரா கடந்த ஆண்டு சாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படம் சர்வதேச அளவில் வெளியாகி வெற்றி பெற்றதுடன் ரூ.1200 கோடி வசூலிலும் சாதனை படைத்தது.

    தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் குடும்பத்துடன் சொந்த ஊரான கொச்சி மற்றும் வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் அடிக்கடி சுற்றுலா சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ஹாங்காங் நாட்டுக்கு கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் விடுமுறையை கொண்டாடுவதற்காக சென்றுள்ளார்.

    ஹாங்காங் கடற்கரையில் குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஜாலியாக வலம் வந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் நயன்தாரா.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×