என் மலர்
சினிமா செய்திகள்

கலையரசன் - பிரியாலயா நடித்த ட்ரெண்டிங் திரைவிமர்சனம்
- சமூக வலைத்தளங்களின் அவலத்தை கூறி எச்சரிக்கும் ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது.
- இருவரும் படம் முழுக்க பயணித்து திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
கதைக்களம்
நாயகன் கலையரசன், நாயகி பிரியாலயா இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு பெரிய வீடு, கார் என வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். திடீரென்று ஒரு நாள் அவர்களது யூடியூப் சேனல் முடங்கி விட, வருமானம் இன்றி தவிக்கிறார்கள். மேலும் கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள்.
இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் அவர்களை தொடர்பு கொண்டு, தாங்கள் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துவதாகவும், அதில் பங்கேற்று வெற்றி பெற்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று கூறுகிறார். பண கஷ்டம் தீர, சில விதிகளுக்கு உட்பட்டு அந்த போட்டியில் இருவரும் கலந்துக் கொள்கிறார்கள். முதலில் அதிக பணம் சம்பாதிக்கும் தம்பதியினர், பின்னர் சில சிக்கல்களை சந்திக்கிறார்கள்.
இறுதியில் கலையரசன், பிரியாலயா இருவரும் சந்தித்த சிக்கல்கள் என்ன? கடன் பிரச்சனையில் இருந்து மீண்டார்களா? மர்ம நபர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கலையரசன் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் பிரியாலயா இருவரும் படம் முழுக்க பயணித்து திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இருவரும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். பிரேம் குமார், பெசன்ட் நகர் ரவி, வித்யா போர்கியா ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
சமூக வலைதளங்களை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிவராஜ். சமூக வலைதளங்களில் அன்றாட வாழ்வியல் சம்பவங்களை பகிர்ந்துக் கொள்வதோடு, சில அந்தரங்க விசயங்களையும் பகிர்ந்துக் கொள்ளும் அவலங்களும் நடந்து வருகிறது. அத்தகைய மனிதர்களுக்கு அறிவுரையாக இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவராஜ். ஆனால், ஒரு ஆங்கில படத்தின் சாயல் திரைக்கதையில் தோன்றுகிறது. அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும் படி இருப்பது பலவீனம்.
ஒளிப்பதிவு
ஒரே வீட்டில் நடக்கும் கதை என்றாலும் காட்சிகளில் வித்தியாசத்தை காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு.
இசை
சாம்.சி.எஸ் இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
தயாரிப்பு
Ram Film Factory நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ரேட்டிங்- 2/5
மொத்தத்தில் டிரெண்டிங்... டிரெண்ட் ஆகவில்லை...






