என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரெண்டிங்"

    • நியூயார்க்கின் முதல் முஸ்லீம் மேயர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயர்.
    • மக்களை எளிதில் அணுகக்கூடிய உத்திகளை கையாண்டவர்.

    "இந்தப் பக்கம் பாத்தா சோனு மழ... இந்தப் பக்கம் பாத்தா சோனு மழ... சரி பின்னாடி திரும்பி பாப்போமேனு பாத்தா அந்த பக்கமு மழ" என்பது வடிவேலு காமெடி. அந்த மழைபோல 2025ல் எல்லா பக்கமும் பேசப்பட்டவர்தான் நியூயார்க் மேயர் ஜோரான் மம்தானி. "மழ பெஞ்சா சுத்தியுதாண்டா பெய்யும்" என்ற பிரபுவின் பதில்போல, ஒரு நாட்டில் நடக்கும் முக்கிய செய்தி உலக நாடுகளுக்கு பரவும் அல்லவா. அப்படி பரவினார் மம்தானி.

    நியூயார்க்கின் முதல் முஸ்லீம் மேயர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயர். ஆளும்கட்சியை வீழ்த்தி ஜனநாயக கட்சியின் உறுப்பினரான இவர் நியூயார்க் மேயர் ஆகிறார். உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் மேயர் தேர்தல் நடக்கும். எந்தக் கட்சியின் உறுப்பினராவது வெற்றிப் பெற்றுதான் ஆகவேண்டும். அவர்கள் பதவி ஏற்பார்கள். ஆனால் மம்தானிக்கு மட்டும் எப்படி இவ்வளவு பிரபலம் கிடைத்தது? நம்பர் 1 டிரெண்டிங் ஆனது எப்படி? 




    "பில்டப் பண்ட்ரனோ, பீலா விட்ரனோ அது முக்கியமில்ல. நம்ம எது பண்ணாலும் இந்த உலகம் நம்மல உடனே திரும்பி பாக்கணு" எனும் வடிவேலு வசனத்திற்கு ஏற்ப தனது நடவடிக்கைகள் மூலம் பெரும் கவனம் ஈர்த்தவர் மம்தானி. குஜராத் கலவர வழக்கில் மோடியை பகிரங்கமாக விமர்சித்தவர். இஸ்ரேல் - காசாப் போரில் காசாவுக்கு ஆதரவாக பேசினார். மற்றொரு முக்கிய விஷயம் மக்களை எளிதில் அணுகக்கூடிய உத்திகளை கையாண்டவர். அதாவது உடை, உணவு, இருப்பிடம், இலவசப் பேருந்து சேவை என மக்களின் அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

    இந்தியாவில் மும்மொழிக் கொள்கையால், பல்வேறு பிரச்சனைகள் எழுத்தொடங்கின. தமிழ்நாட்டின் பட்ஜெட் தாக்கலில் ரூபாய் குறியீடு எல்லாம் மாற்றப்பட்டு ரூ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் பெரும் பூகம்பம் வெடித்தது. இதற்கு காரணம் ஹிந்தி திணிப்பு எனவும் வாதங்கள் வைக்கப்பட்டன.

    இந்த புயல் ஓயத்தொடங்கிய சில மாதங்களில் அமெரிக்காவில் ஹிந்தியில் ஓட்டு கேட்டவர் மம்தானி. இவற்றையெல்லாம் தாண்டி மிக முக்கியமாக தமிழ்நாட்டு அரசியலை, இந்திய அரசியலை கையிலெடுத்தார். அதாவது புதிதாக வரும் கட்சிகள், எப்படி ஆளும் கட்சியை விமர்சித்து கவனம் பெறுகிறதோ, அதுபோல அமெரிக்காவின் முக்கிய தலை, அதாவது அதிபர் டிரம்புக்கும் நேரடி தாக்குதான்.



    இன்னும் சொல்ல வேண்டுமானால் தனது பதவி ஏற்பு விழாவில் நேருவின் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார். இது இன்னும் கூடுதல் கவனத்தை பெற்றுத் தந்தது. இதுபோன்ற செயல்களால் இளம் வயதினர் மத்தியிலும் மிகவும் பிரபலமடைந்தார். சமூக வலைதளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் மம்தானி தனது பெயரை உச்சரித்த விதம் "The Name Is M-A-M-D-A-N-I" என்ற சொற்கள் பாடலாகவே வைரலானது. தற்போதுவரை வைரலாகிக்கொண்டுதான் இருக்கிறது. 

    இப்படி, யாரு சாமி நீ? என அனைவரும் ஆச்சயர்ப்பட்டு கூகுளில் தேட, 2025-ல் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்தார் நியூயார்க் மேயர் மம்தானி.

    • சமூக வலைத்தளங்களின் அவலத்தை கூறி எச்சரிக்கும் ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது.
    • இருவரும் படம் முழுக்க பயணித்து திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    கதைக்களம்

    நாயகன் கலையரசன், நாயகி பிரியாலயா இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு பெரிய வீடு, கார் என வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். திடீரென்று ஒரு நாள் அவர்களது யூடியூப் சேனல் முடங்கி விட, வருமானம் இன்றி தவிக்கிறார்கள். மேலும் கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

    இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் அவர்களை தொடர்பு கொண்டு, தாங்கள் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துவதாகவும், அதில் பங்கேற்று வெற்றி பெற்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று கூறுகிறார். பண கஷ்டம் தீர, சில விதிகளுக்கு உட்பட்டு அந்த போட்டியில் இருவரும் கலந்துக் கொள்கிறார்கள். முதலில் அதிக பணம் சம்பாதிக்கும் தம்பதியினர், பின்னர் சில சிக்கல்களை சந்திக்கிறார்கள்.

    இறுதியில் கலையரசன், பிரியாலயா இருவரும் சந்தித்த சிக்கல்கள் என்ன? கடன் பிரச்சனையில் இருந்து மீண்டார்களா? மர்ம நபர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கலையரசன் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் பிரியாலயா இருவரும் படம் முழுக்க பயணித்து திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இருவரும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். பிரேம் குமார், பெசன்ட் நகர் ரவி, வித்யா போர்கியா ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    சமூக வலைதளங்களை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிவராஜ். சமூக வலைதளங்களில் அன்றாட வாழ்வியல் சம்பவங்களை பகிர்ந்துக் கொள்வதோடு, சில அந்தரங்க விசயங்களையும் பகிர்ந்துக் கொள்ளும் அவலங்களும் நடந்து வருகிறது. அத்தகைய மனிதர்களுக்கு அறிவுரையாக இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவராஜ். ஆனால், ஒரு ஆங்கில படத்தின் சாயல் திரைக்கதையில் தோன்றுகிறது. அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும் படி இருப்பது பலவீனம்.

    ஒளிப்பதிவு

    ஒரே வீட்டில் நடக்கும் கதை என்றாலும் காட்சிகளில் வித்தியாசத்தை காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு.

    இசை

    சாம்.சி.எஸ் இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

    தயாரிப்பு

    Ram Film Factory நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    ரேட்டிங்- 2/5

    மொத்தத்தில் டிரெண்டிங்... டிரெண்ட் ஆகவில்லை...

    • அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்க, கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • வீடியோ பாடல், டிரைலர் ஏற்கனவே ரிலீஸ் ஆகியுள்ளது.

    நடிகர் கலையரசன் நடிப்பில் வெளியான வாழை மற்றும் மெட்ராஸ்காரன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து கலையரசன் அடுத்ததாக கதாநாயகனாக டிரெண்டிங் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் நாயகியாக பிரியாலயா நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சந்தானம் நடித்த இங்க நான் தான் கிங்கு மற்றும் குட் நைட் திரைப்படத்தில் நடித்துள்ளார் குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பிரேம் குமார் மற்றும் பெசண்ட் ரவி நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்கியுள்ளார்.

    இப்படம் ஒரு வ்லாகிங் செய்யும் தம்பதிகளை பற்றிய கதையாக அமைந்துள்ளது. இப்படத்தை ராம் பிலிம் பேக்டரி புரொடக்ஷன், பேர்ஃபூட் ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளது.

    வரும் 18ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது. என்னிலே என்னிலே வீடியோ பாடலும் வெளியாகியுள்ளது. கடந்த 9ஆம் தேதி டிரைலர் வெளியானது. இந்த நிலையில் நாளை டிரெண்டிங் பொன்னு பாடல் நாளை ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    • கலையரசன், பிரியாலயா நடிப்பில் படம் உருவாகியுள்ளது.
    • அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்கியுள்ள நிலையில், வருகிற 18ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

    நடிகர் கலையரசன் நடிப்பில் வெளியான வாழை மற்றும் மெட்ராஸ்காரன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து கலையரசன் அடுத்ததாக கதாநாயகனாக டிரெண்டிங் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் நாயகியாக பிரியாலயா நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சந்தானம் நடித்த இங்க நான் தான் கிங்கு மற்றும் குட் நைட் திரைப்படத்தில் நடித்துள்ளார் குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பிரேம் குமார் மற்றும் பெசண்ட் ரவி நடித்துள்ளனர்.

    இப்படத்தை அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்கியுள்ளார்.

    இப்படம் ஒரு வ்லாகிங் செய்யும் தம்பதிகளை பற்றிய கதையாக அமைந்துள்ளது. இப்படத்தை ராம் பிலிம் பேக்டரி புரொடக்ஷன், பேர்ஃபூட் ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளது.

    வரும் 18ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது. என்னிலே என்னிலே வீடியோ படலும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நாளை டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    • கலையரசன் அடுத்ததாக கதாநாயகனாக டிரெண்டிங் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் நாயகியாக பிரியாலயா நடித்துள்ளார்.

    நடிகர் கலையரசன் நடிப்பில் வெளியான வாழை மற்றும் மெட்ராஸ்காரன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து கலையரசன் அடுத்ததாக கதாநாயகனாக டிரெண்டிங் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்கியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

    இப்படத்தில் நாயகியாக பிரியாலயா நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சந்தானம் நடித்த இங்க நான் தான் கிங்கு மற்றும் குட் நைட் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

    இவர்களுடன் பிரேம் குமார் மற்றும் பெசண்ட் ரவி நடித்துள்ளனர். இப்படம் ஒரு வ்லாகிங் செய்யும் தம்பதிகளை பற்றிய கதையாக அமைந்துள்ளது. இப்படத்தை ராம் பிலிம் பேக்டரி புரொடக்ஷன், பேர்ஃபூட் ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள என்னிலே என்னிலே பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவர் நடிகர் கலையரசன்.
    • இப்படத்தை அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்கியுள்ளார்.

    மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவர் நடிகர் கலையரசன். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வாழை மற்றும் மெட்ராஸ்காரன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து கலையரசன் அடுத்ததாக கதாநாயகனாக டிரெண்டிங் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்கியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

    இப்படத்தில் நாயகியாக பிரியாலயா நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சந்தானம் நடித்த இங்க நான் தான் கிங்கு மற்றும் குட் நைட் திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவர்களுடன் பிரேம் குமார் மற்றும் பெசண்ட் ரவி நடித்துள்ளனர். இப்படம் ஒரு வ்லாகிங் செய்யும் தம்பதிகளை பற்றிய கதையாக அமைந்துள்ளது. இப்படத்தை ராம் பிலிம் பேக்டரி புரொடக்ஷன், பேர்ஃபூட் ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    • லெஹங்கா உடைகள், சமீபகாலமாக தென்னிந்தியாவிலும் ‘டிரெண்டிங்’கில் இருக்கின்றன.
    • திருமணத்திற்கு தயாராகும் ‘டீன்-ஏஜ்’ பெண்களும், ‘லெஹங்கா’வை விரும்புகிறார்கள்.

    'லெஹங்கா அணிவது ஒரு கலை'… ஆரம்பமே உற்சாகமாக பேசினார் காஸ்டியூம் டிசைனர், அனாமிகா. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த அனாமிகாவிற்கு, 52 வயதாகிறது. வட இந்தியாவின் பிரபல காஸ்டியூம் டிசைனராக இவர், லெஹங்கா உடைகளை வடிவமைப்பதிலும், தைப்பதிலும் ஸ்பெஷலிஸ்ட்.

    பாலிவுட் நட்சத்திரங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு, பெரும்பாலும் இவரே லெஹங்கா உடைகளை வடிவமைத்து கொடுப்பார். இவர், லெஹங்கா உடைகள் பற்றியும், அதை அணியும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

    ''வட இந்தியாவில் பிரபலமான லெஹங்கா உடைகள், சமீபகாலமாக தென்னிந்தியாவிலும் 'டிரெண்டிங்'கில் இருக்கின்றன.

    சினிமா நட்சத்திரங்களை தாண்டி, திருமணத்திற்கு தயாராகும் 'டீன்-ஏஜ்' பெண்களும், 'லெஹங்கா'வை விரும்புகிறார்கள். தாலி கட்டும் நிகழ்வின்போது பட்டுப்புடவைகளையும், திருமண வரவேற்பிற்கு 'லெஹங்கா' உடைகளையும் அணியும் கலாசாரம், தமிழ்நாட்டிற்குள்ளும் புகுந்துவிட்டது'' என்றவர், லெஹங்கா நிற தேர்வில் கவனமாக இருக்க சொல்கிறார்.

    ''காலம் காலமாக தென்னிந்திய பட்டுப் புடவைகளுக்கு வட இந்திய பெண்களும், வட இந்திய லெஹங்காக்களுக்கு தென்னிந்திய பெண்களும் ஆசைப்படுவது புதிது இல்லை. ஆனால் எதை எப்படி அணிய வேண்டுமோ அதை அப்படிதான் அணிய வேண்டும்.

    எப்படி முகூர்த்தப் பட்டுப்புடவைகளில் 'பெய்ஜ்', 'பீச்', 'பேஸ்டல்' போன்ற நிறங்களில் அணியும்போது அவ்வளவு பிரைட் 'லுக்' கொடுக்காதோ அதேபோல் லெஹங்கா அணிவதிலும் சில விதிமுறைகள் இருக்கிறது.

    நம்மூர் பெண்கள் பெரும்பாலும் 'டஸ்கி', 'டார்க் பியூட்டிகள்'. அந்த பெண்கள் லெஹங்கா அணியும்போது நிறங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கிளிப்பச்சை, அடர்ந்த சிவப்பு, மெரூன் சிவப்பு பயன்படுத்தலாம். சிக்னல் லைட் சிவப்பு நிறத்தை நிச்சயம் பயன்படுத்தக்கூடாது.

    அதேபோல் அடர்ந்த பஞ்சு மிட்டாய் நிற 'பிங்க்' மாதிரியான ரேடியம், லேசர் லைட் நிறங்கள் அறவே கூடாது. கரும்பச்சையிலேயே கொஞ்சம் மங்கலான பச்சை, பிரவுன் நிறம் இவைகளையும் தவிர்ப்பது நல்லது'' என்னும் அனாமிகா, லெஹங்கா ஸ்டைலிங் குறித்து மேலும் விவரித்தார்.

    ''பொதுவாகவே தென்னிந்திய பெண்களுக்கு இடைப்பகுதி கொஞ்சம் நீளம் குறைவுதான். அதேபோல் பின்பக்கமும் கொஞ்சம் பருமனாக இருக்கும். அடிப்படையிலேயே புடவைக்கும், தாவணிக்குமான உடல்வாகு தென்னிந்தியப் பெண்களுக்கு உண்டு.

    மார்பு, இடைப்பகுதிகள் கொஞ்சம் பப்ளியாக இருக்கும். லெஹங்காவை அந்த அழகை 'ஹைலைட்' செய்யும் மாதிரியில் டிசைன் செய்து கொண்டால் அழகாக இருக்கும். உங்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.

    அடுத்ததாக லெஹங்கா அணிய வேண்டும். ஆனால் இடுப்பு அவ்வளவாக தெரியக்கூடாது என்பது தென்னிந்திய பெண்களின் விருப்பம். அந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு லெஹங்காவையே தாவணி ஸ்டைலில் போட்டுக்கொள்வதுதான்.

    அடுத்த தீர்வு இடைப்பகுதியில் கொஞ்சம் லேஸ் அல்லது வலை மாதிரியான துணி கொடுத்து மேலும் அழகு சேர்க்கலாம்.

    சராரா ஸ்டைலில் லெஹங்கா அல்லது கிராண்ட் ஓவர் கோட் போலவும் தைக்கலாம்'' என்றவர், லெஹங்காவை தென்னிந்திய பெண்கள் மிக குறைவாக பயன்படுத்துகிறார்கள் என்கிறார்.

    ''வட இந்திய பெண்கள், ஒருமுறை வாங்கிய லெஹங்காவை குறைந்தது 20 நிகழ்ச்சிகளுக்காவது அணிவது உண்டு. ஆனால் தென்னிந்திய பெண்கள், வரவேற்பு நிகழ்ச்சியில் அணிவதோடு சரி, அதை ஓரங்கட்டிவிடுகிறார்கள். அதனாலேயே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பெரும்பாலும் லெஹங்கா வேண்டாம் என கூறிவிடுகிறார்கள். ஒருமுறை பயன்படுத்த எதற்கு அவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று கோபப்படுகிறார்கள். அதிலும் முகூர்த்தங்களுக்கு குறைந்தது ரூ.20 ஆயிரம் கொடுத்தால் கூட நல்ல பட்டுப்புடவை கிடைத்துவிடும்.

    ஆனால் லெஹங்காக்களுக்கு ரூ.30 ஆயிரமாவது செலவழித்தால் தான் கிராண்ட் 'லுக்' கிடைக்கும். அப்படி செலவு செய்து வாங்கும், லெஹங்காக்களை குறைந்தது 10 விழாக்களுக்காவது அணிய பழகிக் கொள்ளுங்கள். அப்போதுதான் பெரியவர்களும், லெஹங்காக்களை ஆதரிப்பார்கள்'' என்றவர், லெஹங்கா உடை அணியும்போது செய்யக்கூடிய மேக்கப் விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.

    ''பாரம்பரிய புடவைக்கு உரிய மேக்கப் வேறு. லெஹங்காவிற்கு உரிய மேக்கப் வேறு. தென்னிந்திய புடவை என்றாலே 'பேபி பிங்க்' அல்லது 'ஸ்கின் டோன்' லிப்ஸ்டிக்குகளுடனான லைட் மேக்கப்தான் போட வேண்டும். லெஹங்கா என்றால் கொஞ்சம் இண்டோ-வெஸ்டர்ன் டார்க் நிற லிப்ஸ்டிக், மினுமினுக்கும் ஐ-ஷேடோஸ், பிளஷ், குளோ இப்படி எல்லாமே பளிச்சென்று மேக்கப் செய்யலாம். அப்போதுதான், லெஹங்காவிற்கு மேட்சாக இருக்கும்.

    அணிகலன்களை பொறுத்தவரை, லெஹங்காக்களுக்கு ஒரே ஒரு கிராண்ட் நெக்லெஸ் மற்றும் கிராண்ட் தோடு போதும்'' என்றவர், ''அடுத்த 10 வருடங்களில், சுடிதார் போலவே, லெஹங்காவும் தமிழகத்தில் சர்வ-சாதாரண உடையாக மாறியிருக்கும்'' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

    • நயன்தாரா தனது தந்தை குரியன் கொடியாட்டின் பிறந்த நாளை கொச்சியில் உள்ள அவரது வீட்டில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.
    • அடுத்ததாக சஷிகாந்த் இயக்கத்தில் 'டெஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    மீண்டும் டிரெண்டாகும் நயன்தாராவின் புகைப்படங்கள்தமிழ்திரை உலகில் முன்னணி கதாநாயகியான வலம் வரும் நயன்தாரா, திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக, கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை நயன்தாரா தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்தார். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

    அடுத்ததாக சஷிகாந்த் இயக்கத்தில் 'டெஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் நயன்தாரா தனது தந்தை குரியன் கொடியாட்டின் பிறந்த நாளை கொச்சியில் உள்ள அவரது வீட்டில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.

    அங்கு மின் விளக்கில் அலங்காரம் செய்யப்பட்ட மரத்தின் கீழ் இருவரும் இணைந்து நின்றபடி எடுத்த புகைப்படம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து விக்னேஷிவனுடன் கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை குட் டைம்ஸ் என்று பதிவிட்டு நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் பகர்ந்துள்ளார்.

    பிறந்த நாள் நிகழ்ச்சியில், நயன்தாரா குழந்தைகள் கேக் சாப்பிடும் வீடியோவையும் விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    நயன்தாராவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஜித்தின் 62 - வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
    • இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். அஜித்தின் 62 - வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது.

    ஷூட்டிங் நடைப்பெற்ற போது ஆரவ் எடுத்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைராலிகியது. பின் அஜித்திற்கு உடலில் சிறிய பிரச்சனை இருந்ததால் அதற்கு அறுவை சிகிச்சை செய்தார்.

    அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.

    இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அக்காட்சியில் ஆரவ் சீட்டில் கட்டப்பட்டு இருக்கிறார். அஜித் ஜீப்பை ஓட்டுகிறார். சில நிமிடங்களில் அந்த ஜீப் கவிழ்கிறது. இக்காட்சியை ஸ்டண்ட் டூப் உதவி இல்லாமல் அவரே நடித்து இருப்பது பிரமிக்க வைக்கிறது. இக்காட்சி இப்பொழுது இணையதளத்தில் வைரலாகியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஹாலிவுட் நடிகர் எட்வெஸ்ட் விக்கை எமிஜாக்சன் காதலித்தார்.
    • மகனுடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

    மதராச பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமிஜாக்சன். தொடர்ந்து ஐ, தெறி, மிஷன் சாப்டர்-1 உள்பட தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து இருக்கிறார்.

    இவர் ஜார்ஜ் பனயிட்டோவுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். அவருக்கு 2019-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

    அடுத்ததாக ஹாலிவுட் நடிகர் எட்வெஸ்ட் விக்கை எமிஜாக்சன் காதலித்தார். அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.

    சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்ட எமிஜாக்சன் தனது காதலர் எட்வெஸ்ட் விக், மகனுடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு எட்வெஸ்ட் விக்குடன் நடந்த நிச்சயதார்த்த விருந்து புகைப்படங்களை வெளியிட்டார்.

     

    தற்போது மகனுடன் ஜாலியாக மரத்தில் ஏறி விளையாடும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் எமிஜாக்சன். புகைப்படத்தோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில் புதிய வீட்டில் இது எங்களின் முதல் வசந்தகாலம் என பதிவிட்டுள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் திரைக்கு வந்து கோடி கணக்கில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
    • அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் அமலாபால். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

    சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் திரைக்கு வந்து கோடி கணக்கில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

    படத்தில் அவர் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.

    படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது அவர் நிஜத்தில் கர்ப்பிணியாக கலந்து கொண்டார்.

    அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளதாக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.

    கர்ப்பிணியாக கணவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் கர்ப்பகால உடற்பயிற்சிகள் செய்வது போலவும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மகிழ்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.

     

    கர்ப்பமடைந்து எட்டாவது மாதம் தொடங்க உள்ள நிலையில் அமலா பாலுக்கு தற்போது வளைகாப்பு நடந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த நிகழ்ச்சியில் வடமாநில பாரம்பரிய முறையில் உடை அணிந்து இருக்கும் அமலா பாலுக்கு அவரது குடும்பத்தினர் வளைகாப்பு சடங்குகளை சம்பிரதாய முறைப்படி நடத்தினர்.

    இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். தாய்மை பூரிப்பில் கணவரோடு மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களை அமலாபால் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
    • காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் பிரத்தியேக போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    இப்படம் மிக நீண்ட காலமாக தயாரிப்பு பணிகளிலும். பின் பல்வேறு சூழ்நிலை காரணமாக படப்பிடிப்பு தாமதமானது. பின் மீண்டும் சமீபமாக படப்பிடிப்பு பணிகள் வேகமெடுக்க ஆரம்ப்பித்தன.

    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி கவனம் பெற்றது.

    இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் பிரத்தியேக போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் இப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது என் அறிவிப்பை தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×