கலையரசன் - பிரியாலயா நடித்த Trending படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவர் நடிகர் கலையரசன். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்கியுள்ளார்.
கலையரசன் - பிரியாலயா நடித்த Trending படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Published on

மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவர் நடிகர் கலையரசன். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வாழை மற்றும் மெட்ராஸ்காரன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து கலையரசன் அடுத்ததாக கதாநாயகனாக டிரெண்டிங் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்கியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

இப்படத்தில் நாயகியாக பிரியாலயா நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சந்தானம் நடித்த இங்க நான் தான் கிங்கு மற்றும் குட் நைட் திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் பிரேம் குமார் மற்றும் பெசண்ட் ரவி நடித்துள்ளனர். இப்படம் ஒரு வ்லாகிங் செய்யும் தம்பதிகளை பற்றிய கதையாக அமைந்துள்ளது. இப்படத்தை ராம் பிலிம் பேக்டரி புரொடக்ஷன், பேர்ஃபூட் ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com