புஷ்பா தி ரூல் டீசர் ரெடி

இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
புஷ்பா தி ரூல் டீசர் ரெடி
Published on

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடி வரை வசூலை ஈட்டியது.

இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில் புஷ்பா -2 படத்தின் டீசர் ஏப்ரல் 8 ஆம் தேதி அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்போவதாக படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தண்ணா, விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் போன்ற பல நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த போஸ்டரில் சலங்கையிட்ட கால் ஒன்று நடனம் ஆடுவதுப்போல் இடம் பெற்றுள்ளது. புஷ்பா-2 திரைப்படம் எந்த கதைச்சூழலில் நடக்கப்போகிறது என தெரியவில்லை. இப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com