என் மலர்
நீங்கள் தேடியது "Star"
- பள்ளியில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் ஆய்வு.
- பச்சை வால் நட்சத்திரம் குறித்த பள்ளி மாணவிகளுக்கான விண்வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.
பின்பு, சி.2002, இ.3 என பெயரிடப்பட்ட பச்சை வால் நட்சத்திரம் குறித்த பள்ளி மாணவிகளுக்கான விண்வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
பின்னர், பள்ளி மாணவி நீலவேணி தான் வரைந்த கலெக்டர் அருண் தம்புராஜின் உருவப்படத்தை அவரிடம் வழங்கினார்.
ஆய்வின்போது நாகை முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், வட்டாரக்கல்வி அலுவலர் ராஜமாணிக்கம், பள்ளி துணை ஆய்வர் ராமநாதன், தலைமையாசிரியர் ஸ்டெல்லா, ஜேனட் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் ராஜாராம், ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி சுப்பிரமணியன் உதவி தலைமை ஆசிரியர் பரஞ்சோதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும் இடையில் புருவ மத்தியில் அக்னி (நெற்றிக்கண்) உள்ளது.
- 9 சுவாதி நட்சத்திரத்தில் வழிபாடு செய்தால் எண்ணியவை எண்ணியபடி நடக்கிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அடுத்த வல்லத்தில் யோக நரசிம்மப் பெருமாள் கோவில் உள்ளது.
யோக நரசிம்மர் இங்கு சுயம்பு மூர்த்தி ஆவார். நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும் இடையில் புருவ மத்தியில் அக்னி(நெற்றிக்கண்) உள்ளது.
நரசிம்மர் மனித உடலும் சிங்க முகமும் கொண்டவர் என்பதால் இக்கோவிலில் யோக நரசிம்மர் கல், சுதை இரண்டும் கலந்து யோக நரசிம்மராக பக்தர்களுக்கு இங்கு காட்சி தருகிறார்.
இவருக்கு தைலக்காப்பு மட்டுமே சாற்றுகிறார்கள்.
தமிழ்நாட்டில் இது போன்ற அமைப்புகள் உடைய யோக நரசிம்மர் இவர் ஒருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதி மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று காலையில் ஹோமமும் அபிஷேகமும் நடைபெறுகிறது.
தொடர்ந்து ஒன்பது சுவாதி நட்சத்திரத்தில் வழிபாடு செய்தால் எண்ணியவை எண்ணியபடி நடக்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.
இந்த நிலையில் இன்று நரசிம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலை 6.30மணிக்கு உற்வர் லெட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் விஷேட திருமஞ்சனமும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சுதர்சன ஹோமம் நடைபெற்றது.
இதில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு யோக நரசிம்மப் பெருமாளை தரிசனம் செய்தனர்.
இன்று மாலையில் யோக நரசிம்மப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும் சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாராதனை நடைபெறும்.
இந்த விழாவிற்காக ஏற்பாடுகளை கோவில் பட்டர்கள் மற்றும் சுவாதி கைங்கர்ய குழுவினர் செய்திருந்தனர்.
- ஏற்காடு பகுதியில் விளிம்பிப்பழம் என்ற ழைக்கப்படும் நட்சத்திர பழம் விளைச்சல் அதிக ரித்துள்ளது.
- மே மாதம் முதல் 3 மாதங்கள் வரை மகசூல் கிடைக்கிறது.
சேலம்:
ஏற்காடு பகுதியில் விளிம்பிப்பழம் என்ற ழைக்கப்படும் நட்சத்திர பழம் விளைச்சல் அதிக ரித்துள்ளது. தனியார் தோட்டங்களிலும், சாலை யோரத்திலும் பரா மரிக்கப்பட்டு வரும் விளிம்பு மரங்களில் இருந்து இந்த பழங்கள் கிடைக்கிறது.
மே மாதம் முதல் 3 மாதங்கள் வரை மகசூல் கிடைக்கிறது. மரத்தில் தானாக பழுத்து கீழே விழும் பழங்களை சேகரித்து விற்பனைக்காக வியாபாரி கள் சேலத்திற்கு கொண்டு வருகின்றனர்.
மருத்துவ குணம்
மருத்துவ குணம் அதிகம் கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் பி,சி மற்றும் பொட்டாசியம், இரும்பு சத்து, நார்சத்து உளளது. இப்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது.
இந்த பழம் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்ப டுகிறது. ஏற்காடுக்கு சுற்றுலா வருபவர்கள் இந்த பழத்தை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
- பியார் பிரேமா காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் எலன் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
- இந்த படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் யுவன் சங்கர் ராஜாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பி.ஜி.எம். கிங் என்று ரசிகர்களால் போற்றப்படும் யுவன் சங்கர் ராஜா இசையை கடந்து திரையுலகில் பல்வேறு பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.

அந்த வகையில், யுவன் சங்கர் ராஜா ஒய்.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படத்தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தயாரித்து வெளியான முதல் படம் பியார் பிரேமா காதல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் எலன் இயக்கி இருந்தார்.
இந்த நிலையில், பியார் பிரேமா காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் எலன் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. கவின் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

ஸ்டார் போஸ்டர்
அதன்படி, இப்படத்திற்கு 'ஸ்டார்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரையும் பகிர்ந்துள்ளனர். 'ஸ்டார்' படத்தின் புரோமோ ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
2001-ஆம் ஆண்டில் பிரசாந்த் மற்றும் ஜோதிகா நடிப்பில் 'ஸ்டார்' படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் கவின் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இயக்குனர் எலன் இயக்கத்தில் கவின் நடிக்கும் திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தில் லால், அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஏ ராகவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் வருகிற 12-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது.
- ஸ்டார் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- ஸ்டார் படத்தில் கவின் நாயகனாக நடித்துள்ளார்.
டாடா பட வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடித்துள்ள திரைப்படம் "ஸ்டார்" என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது. பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கவினுடன் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை எழில் அரசு மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பிரதீப் இ செய்துள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி வெளியாக இருக்கும் ஸ்டார் படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டார் படத்தின் "காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ்" என்ற பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். யுவன் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் வேகமாக வைரல் ஆகி வருகிறது.
- கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிப்பது கிறிஸ்துமஸ் மரம்.
- கிறிஸ்தவர்களின் வீடுகளில் ஒளிவீசும் ஸ்டார் தொங்கவிடப்பட்டிருக்கும்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில், அவர் பிறந்த தினமான டிசம்பர் 25-ந் தேதி நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின் தொடக்கமாக, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவூட்டும் பல சின்னங்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் போதும், விழாவின் ஆயத்த பணி நாட்களின் போதும் இந்த சின்னங்கள் பிரதானமாக இடம் பெறுகின்றன.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் சின்னங்களான கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரம், மணிகள், சாண்டா கிளாஸ், ஏஞ்சல்ஸ், புறா போன்ற பல சின்னங்கள் உள்ளன.
ஒளிரும் கிறிஸ்துமஸ் மரம்
கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முக்கிய பங்கு வகிப்பது கிறிஸ்துமஸ் மரம். அதாவது பசுமை மாறாத ஊசியான கூம்பு வடிவில் உள்ள மரங்களை வெட்டி ஆலயத்தின் வெளியே வைத்து, அதில் வண்ண விளக்குகள், நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரிப்பர். சிலர் பண்டிகையை கொண்டாடும் விதமாக தங்களது வீட்டின் முன்பும் கிறிஸ்துமஸ் மரங்களை வைத்து விழாவை கொண்டாடுவார்கள்.
கிறிஸ்துமஸ் மரத்தின் பிறப்பிடம் ஜெர்மனி. புனித போனிடஸ் என்பவர் ஜெர்மனியில் கிறிஸ்தவ மத போதனை செய்திருந்த வேளையில் அங்கிருந்த மக்கள் ஓக் மரத்தை தெய்வமாக வழிபட்டனர். அதனை கண்ட அவர் அம்மரத்தை வெட்டி வீழ்த்தினார். அதனடியில் இருந்து கிறிஸ்துமஸ் மரம் முளைத்து வளர்ந்ததாக ஓர் நிகழ்வு கூறப்படுகிறது. இதுவே கிறிஸ்துமஸ் மரத்திற்கு அனைவர் கூறும் கதை.
1500-ம் ஆண்டு மார்ட்டின் லூதர்கிங் பனிபடர்ந்த மரங்கள் மீது வெளிச்சம் பட்டு ஒளிர்வதை கண்டு பீர்மரத்தை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்துமஸ் விழாவில் பயன்படுத்தினார் என கூறப்படுகிறது.
18-ம் நூற்றாண்டிற்கு பிறகு கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் நிகழ்வு உலக நாடுகள் முழுவதும் பரவியது. கிறிஸ்துமஸ் மரத்தின் கிளைகள் சிலுவையின் அடையாளத்தை கொண்டிருப்பதும், அதன் முக்கோண வடிவம் தந்தை, மகன், தூயஆவி எனும் முப்பரிமாணங்களை குறிப்பதாகவும் உள்ளது என கிறிஸ்துவ விளக்கங்கள் கூறுகின்றன.
கிறிஸ்துமஸ் ஸ்டார்
கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்திற்கு முன்பாகவே, டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கிறிஸ்தவர்களின் வீடுகளில் ஒளிவீசும் அழகிய நட்சத்திரம் (கிறிஸ்துமஸ் ஸ்டார்) தொங்கவிடப்பட்டிருக்கும். கிறிஸ்துமஸ் விழாவில் நட்சத்திரத்தின் அலங்கார அணிவகுப்பு நிகழ காரணமாய் யாதெனின், பெத்லேகம் விண்மீன் அல்லது கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்பது இயேசுவின் பிறப்பை ஞானிகளுக்கு சுட்டிக்காட்டிய விண்மீன். பெத்லகேமில் இயேசு பிறந்த இல்லம் வரை ஞானிகளுக்கு வழிகாட்டியது இந்த நட்சத்திரம்.
அதன் நினைவாய் தங்கள் இயேசு பிறப்பு வழிகாட்டிய விண்மீன் தொங்கட்டும் என கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் "கிறிஸ்துமஸ் ஸ்டார்" என்ற விண்மீன் விளக்கை ஒளிர விடுகிறார்கள்.
கிறிஸ்துமஸ் குச்சி
250 வருடங்களுக்கு முன்பு ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த கிறிஸ்துமஸ் இனிப்பு குச்சி. 1670-ல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது குழந்தைகள் அமைதியாக அமர்வதற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட' ஜே' வடிவிலான இனிப்பு குச்சி. இருப்பினும் இந்த ஆடுமேய்ப்பர் துரடு வடிவ இனிப்பு குச்சியின் வடிவம் ஜீசஸ்சை குறிப்பதாகவும், இதில் உள்ள சிவப்பு கோடு சிலுவையின் ரத்தத்தையும், வெண்ணை நிறம் தூய்மையை குறிப்பதாகவும் கூறப்படுகிறது. பெப்பர்மின்ட் சுவை ஹைசாப் செடியை நினைவு கூறும் வகையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிறிஸ்துமஸ் விழாவை நினைவு கூறும் வகையில் இன்னும் நிறைய சின்னங்கள் உள்ளன. இவை கிறிஸ்துமஸ் விழாவின் மகிழ்ச்சியை, அதன் புனிதத்தை அறிவிக்கும் நோக்கிலேயே உள்ளன.
- ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
- ஸ்டார் திரைப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடீயோ நேற்று வெளியானது.
இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் 'ஸ்டார்' பட உருவாக்கத்தின் முழு வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த கவின், "லிப்ட்" என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். கவினின் இரண்டாவது திரைப்படமான "டாடா" மாபெரும் வெற்றி பெற்றது.
இதையடுத்து கவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஸ்டார். ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ப்ரோமோ வெளியானது. ஏற்கனவே இத்திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடீயோ மற்றும் பாடல் வெளியானது.
தொடர்ந்து, ஸ்டார் திரைப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடீயோ நேற்று வெளியானது.
இந்நிலையில், ஸ்டார் திரைப்படம் உருவாக்கத்தின் முழு விடியோ இன்று வெளியானது.
- ஸ்டார் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார்.
இயக்குநர் எலன் இயக்கத்தில் கவின் நடிக்கும் திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தில் லால், அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஏ ராகவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், ஸ்டார் படத்தில் இடம்பெற்றுள்ள "ஸ்டார் இன் தி மேக்கிங்" பாடலின் ஆர்கெஸ்ட்ரா வெர்ஷனை படக்குழு வெளியிட்டு உள்ளது.
- கவின் ஸ்டார் மற்றும் கிஸ் படத்தில் நடித்து வருகிறார்.
- இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர் கவின். சின்னதிரை நாயகனாக இருந்து வெள்ளிதிரைக்கு வந்தார். சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவினின் புகழ் ஓங்கியது.
குருபிரசாத் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு இயக்கத்தில் ஓடிடி யில் வெளியான லிஃப்ட் திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படம் மக்கள் இடையே நல்ல விமர்சனத்தை பெற்றது.
பின் மணிகண்டன் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த டாடா படத்தில் நடித்து இருந்தார். அபர்னா தாஸ், பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ் போன்ற முன்னணி கதாப்பாத்திரங்கள் நடித்து இருந்தனர். இந்த படம் மக்களிடயே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது,
கவின் அடுத்ததாக ஸ்டார் மற்றும் கிஸ் படங்களில் நடித்து வருகிறார்.இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் சென்ற மாதம் வெளியானது. அடுத்ததாக இப்படத்தின் இரண்டாம் பாடலான "விண்டேஜ் லவ்" முன்னோட்டம் இன்று வெளியாகியது. பாடலின் முழு வீடியோ ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டாடா படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த கவின் அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்
- கவின் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கவிருக்கிறார்
டாடா படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த கவின் அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். டாடா படத்திற்கு அடுத்து ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலின் காட்சி முன்னோட்டம் நேற்று வெளியானது.
இதற்கடுத்து நடன இயக்குனரான சதீஷ் இயக்கத்தில் கிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார், தற்பொழுது அடுத்ததாக கவின் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
ஆண்ட்ரியா நெகட்டிவ் ஷேட் கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாத இறுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தின் முதல் பாடல் சென்ற மாதம் வெளியானது.
- இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மணிகண்டன் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த டாடா படத்தில் கவின் நடித்து இருந்தார். அபர்னா தாஸ், பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ் போன்ற முன்னணி கதாப்பாத்திரங்களும் நடித்து இருந்தனர். இந்த படம் மக்களிடயே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது,
கவின் அடுத்ததாக ஸ்டார் மற்றும் கிஸ் படங்களில் நடித்து வருகிறார்.இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஸ்டார் படம் உருவாகியுள்ளது.
இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் முதல் பாடல் சென்ற மாதம் வெளியானது. அடுத்ததாக இப்படத்தின் இரண்டாம் பாடலான "விண்டேஜ் லவ்" பாடல் வீடியோ இன்று வெளியாகியது. இதில் கவின் ஒரு கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் காதலியைப் பார்த்து பாடுவதாக காட்சிகள் அமைந்து இருக்கிறது. இப்பாடலின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






