என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kiss"
- பேருந்து நிலையத்தில் வெளிப்படையாக முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாக காதல் செய்து வருகின்றனர்.
- பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தங்களது ஊர்களுக்கு செல்ல பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் தினமும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்களில் சில காதல் ஜோடிகள் பேருந்து நிலையத்தில் வெளிப்படையாக முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாக காதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் காதல் ஜோடிகள் அத்துமீறியதை கண்ட பொதுமக்கள் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நேரடியாக சென்று பார்த்த போதும் போலீசார் வருவது கூட தெரியாமல் கல்லூரி காதல் ஜோடி முத்தமழை பொழிந்து கொண்டிருந்தனர். இருவரையும் பிடித்த போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- வீதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- இளம்பெண்ணை முத்தமிட்டு கொண்டு வாகனம் ஓட்டிய காட்சிகள் பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நாட்டின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு போக்குவரத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் வீதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தானில் ஜெய்பூரில் ஒரு இளம்ஜோடி ஓடும் பைக்கில் முத்தமழை பொழிந்த சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. அதில் ஒரு வாலிபர் பைக் ஓட்டுகிறார். அவர் சாலையை பார்க்காமல் தனக்கு பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணை முத்தமிட்டு கொண்டு வாகனம் ஓட்டிய காட்சிகள் பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அந்த ஜோடி ஹெல்மெட்டும் அணிந்திருக்கவில்லை. இந்த வீடியோ வைரலானதை அடுத்து போக்குவரத்து போலீசார் அந்த பைக்கின் எண் மூலம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் மருத்துவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
- பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த டாக்டர் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த பெண் டாக்டர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு எர்ணாகுளம் மருத்துவமனையில் பணி புரிந்தபோது, பொது மருத்துவதுறையில் தலைவராக பணியாற்றிய டாக்டர் மனோஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது புகார் கொடுத்துள்ளார்.
அறுவை சிகிச்சை செய்த போது மூத்த ஆலோசகர் ஒருவர் தன்னிடம் அத்துமீற முயன்றது குறித்து புகார் அளிக்க, மனோஜின் ஆலோசனை அறைக்கு சென்றபோது, அவர் தன்னை பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்றதாக அந்த பெண் மருத்துவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் மருத்துவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமின்றி போலீசாருக்கு இ-மெயிலில் தனது புகார் மனுவை அனுப்பினார்.
அதன்பேரில் மின்னஞ்சல் மூலமாக பெண் டாக்டரை தொடர்பு கொண்டு புகார் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தனக்கு டாக்டர் மனோஜ், பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து போலீசாரிடம் பெண் டாக்டர் தெரிவித்திருக்கிறார்.
தனது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் டாக்டர் மனோஜ் மீது 4 ஆண்டுகளாக புகார் கொடுக்காமல், தற்போது கொடுத்திருப்பதாகவும் அப்போது அவர் போலீசாரிடம் விளக்கமும் அளித்திருக்கிறார்.
இந்நிலையில் பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த டாக்டர் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தற்போது டாக்டர் மனோஜ், எர்ணாகுளத்தில் உள்ள மற்றொரு மருத்துவ மனையில் பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து திரும்பியபோது பைக்கில் ஜாலியாக சென்றது தெரியவந்தது.
- தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி அந்த வாலிபர் அங்கிருந்த இரும்பு கேட்டில் முகத்தை வேகமாக இடித்துகொண்டார்.
புதுச்சேரி:
புதுவை-கடலூர் சாலையில் அதிகாலையில் வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் பைக்கில் நெருங்கியவாறு உட்கார்ந்து சென்றனர். பைக்கில் சென்ற அவர்கள் மற்ற வாகனங்களுக்கு வழி விடாமல் சென்றனர்.
பைக்கின் பின்னால் அமர்ந்து வந்த இளம் பெண்ணுக்கு முத்தம் கொடுத்தபடியும் சில்மிஷத்தில் ஈடுபட்டவாறும் வாலிபர் பைக் ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது மணவெளி ரோடு சந்திப்பில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். பைக்கில் வாலிபரும், இளம்பெண்ணும் சில்மிஷத்தில் ஈடுபட்டவாறு ஜாலியாக வருவதை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாலிபர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தவர் அவரது தோழி என்பதும் தெரியவந்தது.
அவர்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து திரும்பியபோது பைக்கில் ஜாலியாக சென்றது தெரியவந்தது.
அந்த வாலிபர் குடிபோதையில் இருந்தார். போலீசாரிடம் வாக்குவாதம் செய்த அவர் அவ்வழியே வந்த வாகனங்கள் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார்.
இதையடுத்து போலீசார் வாலிபரையும், அவரது தோழியையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி அந்த வாலிபர் அங்கிருந்த இரும்பு கேட்டில் முகத்தை வேகமாக இடித்துகொண்டார்.
இதில் காயமடைந்த வாலிபரை போலீசார் அழைத்து சென்று அரியாங்குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
