என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நாளை வெளியாகிறது KISS.. வீடியோ வெளியிட்ட கவின்
    X

    நாளை வெளியாகிறது KISS.. வீடியோ வெளியிட்ட கவின்

    • இதுவரைக்கும் நடித்த படங்களை விட இந்த படம் ஜாலியான படமாக இருக்கும்.
    • எப்பவும் போல கருத்து சொல்லுங்க. எப்பவும் போல கூட இருங்க.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ் தற்போது கிஸ் படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரித்துள்ளார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

    இந்த திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் நடிகர் கவின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், இதுவரைக்கும் நடித்த படங்களை விட இந்த படம் ஜாலியான படமாக இருக்கும். உங்களுக்கு பிடிக்கும் என நம்புறேன். ஒன்னுமே இல்லாதவன இவ்வளவு தூரம் கூப்பிட்டு வந்து விட்டுது நீங்கதான். இங்கிருந்து ரொம்ப தூரம் கூப்பிட்டு போவீங்கனு நம்புறேன். நாளைக்கு தியேட்டருக்கு வந்த படத்தை பாருங்க. எப்பவும் போல கருத்து சொல்லுங்க. எப்பவும் போல கூட இருங்க. நன்றி.

    என கூறினார்.

    Next Story
    ×