என் மலர்
சினிமா செய்திகள்

கவின் நடித்த KISS படத்தின் திரைவிமர்சனம்!
கதைக்களம்
விஜய் சேதுபதி குரலில் ஒரு ராஜாவின் கதையின் மூலம் இப்படம் தொடங்குகிறது. கதாநாயகி ப்ரீத்தி அஸ்ரானியின் மூலம் ஒரு புத்தகம் கவினிற்கு கிடைக்கிறது. ஆனால் அந்த புத்தக்கத்தை அவரால் திறக்க முடியவில்லை. அந்த புத்தகம் வந்த பிறகு யார் முத்தம் கொடுப்பதை பார்த்தாலும் கவினிற்கு அவர்களின் எதிர்காலம் தெரிகிறது. ப்ரீத்தி அஸ்ரானி மூலம் இப்புத்தகம் கிடைத்ததால் அந்த புத்தக்கத்தை பற்றி தெரிந்துக் கொள்ள ப்ரீத்தியிடம் பழகி வருகிறார்.
காதல் என்றாலே கடுப்பாகும் கவின், இந்த சக்தியை வைத்துக்கொண்டு காதலர்களை பிரித்துவிட்டு வருகிறார். இந்நிலையில் காதலே வேண்டாம் என்று இருந்த கவின் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி மீது காதல் வயப்படுகிறார். அப்போது ஒரு கட்டத்தில் ப்ரீத்தி கவினிற்கு முத்தம் கொடுக்கிறாள். அப்போது அவளுடைய எதிர்க்காலம் கவினுக்கு தெரிய வருகிறது. அந்த எதிர்காலம் யாரும் எதிர்ப்பார்க்காத விஷயமாக இருக்கிறது. இதனால் கவின் பயந்து விடுகிறார். இதற்கு பிறகு என்ன ஆனது? இந்த புத்தகத்திற்கும் கவினுக்கும் என்ன சம்பந்தம்? கவின் கண்ட எதிர்காலம் என்ன? இருவரும் இணைந்தார்களா இல்லையா? என்கிற பல கேள்விகளுக்கு விடையளிப்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
கவின் முழுப்படத்தை ஒற்றை ஆளாக தோழில் சுமந்துள்ளார். நகைச்சுவை, காதல், எமோஷன் என அனைத்து காட்சிகளிலும் ஸ்கோர் செய்துள்ளார். படத்தின் அடுத்த நாயகன் என சொல்லும் அளவுக்கு விடிவி கணேஷ் பங்காற்றியுள்ளார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பலையால் நிரம்பியுள்ளது. மிர்ச்சி விஜய் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம்
நடனத்தில் பட்டையை கிளப்பி கொண்டிருந்த சதிஷ் இப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானதிற்கு வாழ்த்துக்கள். இந்த காலத்து இளைஞர்களுக்கு ஏற்ப ஒரு ஃபேண்டசி ராம் -காம் படத்தை இயக்க முயற்சித்துள்ளார். படத்தின் காமெடி காட்சிகள் பல இடத்தில் வொர்க் அவுட் ஆகியுள்ளது. ஆனால் படத்தின் எமோஷன் காட்சிகள், மற்றும் , ஃபேண்டசி விஷயங்கள் மக்களிடையே கனெக்ட் ஆகவில்லை. இது படத்தின் பெரிய பின்னடைவாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சி மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
இசை
படத்திற்கு மிகப்பெரிய பலம் ஜென் மார்ட்டின் பின்னணி இசை.
ஒளிப்பதிவு
ஹரிஷின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக அமைந்துள்ளது.
தயாரிப்பு
ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ரேட்டிங்: 2/5






