search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "preethi asrani"

  • பிரீத்தி அஸ்ரானி அப்பாவி முகத்துடன் தன் அம்மாவை இழந்த துக்கத்தை மிகத் திறம்பட அயோத்தி படத்தில் நடித்திருப்பார்.
  • பிரீத்தி அஸ்ரானி அடுத்ததாக கவினின் 5 வது படத்தில் நடித்து வருகிறார்.

  சசிகுமார் நடிப்பில் அறிமுக இயக்குனரான மந்திர மூர்த்தி இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு அயோத்தி திரைப்படம் வெளியாகியது. யாஷ்பால் ஷர்மா, பிரீத்தி அஸ்ரானி, புகழ், போஸ் வெங்கட் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பர்.

  பிரீத்தி அஸ்ரானி அப்பாவி முகத்துடன் தன் அம்மாவை இழந்த துக்கத்தை மிகத் திறம்பட அயோத்தி படத்தில் நடித்திருப்பார். அயோத்தி திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

  இதைத் தொடர்ந்து பிரீத்தி அஸ்ரானி அடுத்ததாக கவினின் 5 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நடன இயக்குனரான சதீஷ் இயக்கி வருகிறார். இது ஒரு ஜாலியான நகைச்சுவை கதைக்கள பிண்ணனியில் உருவாகவுள்ளது. அயோத்தியில் நான் நடித்த கதாப்பாத்திரத்தை விட இது முற்றிலும் மாறுப்பட்டது என்று சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

  இதற்கடுத்து ரியோ நடிக்கும் அடுத்த படத்திலும் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக கூறியுள்ளார் பிரீத்தி அஸ்ரானி.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • 21-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் 14-ம் தேதி தொடங்கியது.
  • இதன் நிறைவு விழா டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெற்றது.

  21-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் 14-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெற்றது.

  இந்த விழாவில் இந்த ஆண்டு போட்டியில் தமிழ் பிரிவில், வசந்த பாலனின் அநீதி, மந்திர மூர்த்தியின் அயோத்தி, தங்கர்பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் ஆகியோரின் போர் தோழில், விக்ரம் சுகுமாரனின் இராவண கோட்டம், அனிலின் சாயவனம், பிரபு சாலமனின் செம்பி, சந்தோஷ் நம்பிராஜனின் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், கார்த்திக் சீனிவாசனின் உடன்பால் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை பகுதி 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டது.  இதில் சிறந்த படமாக தேர்வான அயோத்தி பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக தேர்வான உடன்பால் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.50,000 வழங்கப்பட்டது. விடுதலை படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குனர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது.


  பிரீத்தி அஸ்ரானி

  மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. அயோத்தி படத்துக்காக பிரீத்தி அஸ்ரானிக்கு சிறந்த நடிகை விருதும், போர்தொழில் பட ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி சிறந்த ஒளிப்பதிவாளராகவும், போர்தொழில் பட எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் சிறந்த எடிட்டராகவும், மாமன்னன் படத்தில் பணியாற்றிய சுரேன் சிறந்த ஒளிப்பதிவாளராகவும், சிறந்த குறும்படமாக பகவத் இயக்கிய லாஸ்ட் ஹார்ட் தேர்வு செய்யப்பட்டது. உலக சினிமா பிரிவிலும் விருதுகள் வழங்கப்பட்டது.

  • நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கவின் நடித்து வருகிறார்.
  • இப்படத்தின் படப்பிடிப்பில் கவின் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

  டாடா பட வெற்றியை தொடர்ந்து கவின், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்தின் மூலம் அனிருத் முதல் முறையாக கவினுடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.  நடிகர் கவின் நேற்று தனது பிறந்தநாளை கொண்டினார். இவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் கவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

  • நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கவின் நடிக்கிறார்.
  • இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.

  தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ், முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா பட வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.  இப்படத்தின் மூலம் அனிருத் முதல் முறையாக கவினுடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெறவுள்ளது. இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ×