என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பல்டி: கபடி வீரனாக களம் இறங்கும் ஷேன் நிகாம்
    X

    பல்டி: கபடி வீரனாக களம் இறங்கும் ஷேன் நிகாம்

    • ஷேன் நிகாமின் 25- வது திரைப்படத்தை அறிமுக இயக்குநரான உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார்.
    • இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

    மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஷேன் நிகாம் முக்கியமானவர். இவர் சில மாதங்களுக்கு முன் மெட்ராஸ்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் கலையரசன், நிஹாரிகா, ஐஷ்வர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    இந்நிலையில் ஷேன் நிகாமின் 25- வது திரைப்படத்தை அறிமுக இயக்குநரான உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார். இப்படத்தில் இவருடன் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

    படத்தை சந்தோஷ் குருவில்லா தயாரிக்க தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் டைட்டில் கிள்ம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. படத்திற்கு பல்டி என தலைப்பு வைத்துள்ளனர். திரைப்படம் ஓனத்தை முன்னிட்டு வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×