search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shane Nigam"

    • இந்த படம் ஆக்‌ஷன் டிராமா கலந்த கதையம்சம் கொண்டிருக்கிறது.
    • அவரின் வளர்ச்சியைப் பார்க்க மகிழ்ச்சியாகவுள்ளது.

    நடிகர்கள் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில், இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கும் புதுமையான ஆக்ஷன் டிராமா "மெட்ராஸ்காரன்" திரைப்படம்.

    எஸ்.ஆர். புரோடக்ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படத்தின் இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கும் புதிய படத்திற்கு மெட்ராஸ்காரன் என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், நிஹாரிகா, கலையரசன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கின்றனர்.

    இந்த படம் ஆக்ஷன் டிராமா கலந்த கதையம்சம் கொண்டிருக்கிறது. இப்படத்தின் பூஜை, எளிமையாக நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

     


    இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் பொன்ராம், "வாலி என் நண்பர் ஒவ்வொரு படத்திலும் திரைக்கதை பணிகளின்போது பேசிக்கொள்வோம். மிகத்திறமையானவர் அவரின் வளர்ச்சியைப் பார்க்க மகிழ்ச்சியாகவுள்ளது. ஷேன் நிகாம் எனக்குப் பிடித்த நடிகர், கலையரசனும் என் நண்பர்."

    "இந்தக்குழுவே மிகவும் உற்சாகம் தரக்கூடிய குழுவாக உள்ளது. இவர்கள் சிறப்பான ஒரு படத்தைத் தருவார்கள் என நம்புகிறேன் இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்."

    இந்த படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் வாலி மோகன் தாஸ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • நடிகர் கலையரசன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்.

    ரங்கோலி படம் மூலம் பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் "மெட்ராஸ்காரன்". இதில் மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நடிகர் கலையரசன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்.


    எஸ்.ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி ஜகதீஸ் தயாரிப்பில் திரில்லர் டிராமாவாக உருவாகும் இந்த படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார். தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி மாதம், இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.

    படத்தின் நாயகி மற்றும் துணை கதாப்பாத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    • மலையாள திரையுலகில் போதை பொருள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார் கிளம்பியது.
    • இதனால் மலையாள படப்பிடிப்பு உள்ளிட்ட சினிமா தொழில் பாதிக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.

    மலையாள திரையுலகில் போதை பொருள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார் கிளம்பியது. இதனால் மலையாள படப்பிடிப்பு உள்ளிட்ட சினிமா தொழில் பாதிக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.

    இது தொடர்பாக மலையாள திரையுலகின் இளம் நடிகர்கள் ஷான் நிகாம், ஸ்ரீநாத் பாசி ஆகியோருக்கு தயாரிப்பாளர் சங்கம் சினிமாவில் நடிக்க தடை விதித்தது. மேலும் மலையாள திரையுலகில் போதைக்கு அடிமையானவர்கள் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிப்போம் எனவும் மலையாள சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்தனர்.

    இந்த நிலையில் கேரளாவில் போதை பொருள் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில் கேரள சினிமா உலகில் சில தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் என 10 பேர் பற்றிய தகவல் கிடைத்து இருப்பதாகவும், அவர்கள் பற்றிய பட்டியலை தயாரித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கு சினிமா பிரமுகர்களிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர். என்றாலும் போதை பொருள் சப்ளை செய்வோரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • மலையாள திரையுலகின் இளம் நடிகர்களாக வலம் வருபவர்கள் ஷேன்நிகம், ஸ்ரீநாத் பாசி.
    • இவர்கள் இருவரும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளனர்.

    மலையாள திரையுலகின் இளம் நடிகர்கள் ஷேன்நிகம், ஸ்ரீநாத் பாசி. இவர்களில் ஷேன்நிகம், தாந்தோணி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கிஸ்மத், பூதகாலம், உல்லாசம் உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.

    இதுபோல ஸ்ரீநாத்பாசி, ஹனிபீ, கும்பளங்கி நைட்ஸ், அஞ்சாம்பாதிரா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்தனர். சமீபத்தில் ஷேன்நிகம், ஸ்ரீநாத் பாசி இருவரும் படபிடிப்புகளுக்கு ஓழுங்காக வருவதில்லை என்று படத்தயாரிப்பாளர்கள் புகார் கூறினர்.

    மேலும் படபிடிப்பு தளத்தில் போதையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு கிளம்பியது. இதையடுத்து மலையாள பட தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் நேற்று கொச்சியில் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் இளம்நடிகர்கள் ஷேன்நிகம், ஸ்ரீநாத் பாசி இருவருக்கும் படங்களில் நடிக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் ரஞ்சித் கூறும்போது, நடிகர்கள் ஷேன்நிகம், ஸ்ரீநாத் பாசி இருவரும் தொடர்ந்து படக்குழுவினருக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள். போதைக்கு அடிமையாகி படபிடிப்புக்கும் ஒழுங்காக வருவதில்லை. எனவே அவர்களுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம், என்றார்.

    மலையாள திரையுலகில் சில நடிகர்கள் இதுபோன்ற போதை பழக்கத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து அதனை போலீசாரிடம் அளிக்க உள்ளோம். திரையுலகின் நன்மைக்காகவே இதனை செய்கிறோம், என்றார்.

    ×