என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Selvaraghavan"
- இயக்குனர் செல்வராகவன் பல படங்களை இயக்கியுள்ளார்.
- இவர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், அதன்பின்னர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் செல்வராகவன் மும்முரம் காட்டி வருகிறார்.

இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் 'பீஸ்ட்', 'சாணிக் காயிதம்', 'பகாசூரன்' போன்ற திரைப்படங்களில் நடித்து கவர்ந்தார். தொடர்ந்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார்
இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் 'தான் அழுது கொண்டே இருந்ததாக' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, "நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது" என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி நிச்சயமாக வெற்றி பெரும் என நம்பி இருந்த ரசிகர்களுக்கு இந்த தோல்வி பேரிடியாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், இந்திய அணி வீரர்களும் களத்திலேயே மனமுடைந்து கண்ணீர் சிந்தியபடி வெளியேறினர்.
- இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி’.
- இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இளைஞர்கள் கொண்டாடும் படங்களை இயக்கியவர் செல்வராகவன். 2004-ம் ஆண்டில் ரவி கிருஷ்ணா-சோனியா அகர்வால் நடிப்பில் இவர் இயக்கிய '7ஜி ரெயின்போ காலனி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது.

19 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்குவதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த பாகம் இயக்கவுள்ளதாகவும் இதில், ஹீரோவாக ரவி கிருஷ்ணாவும் ஹீரோயினாக அனஸ்வர ராஜனும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக செய்தி பரவி வந்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, '7ஜி ரெயின்போ காலனி 2' திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்துள்ளதாகவும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் செய்தி வலம் வருகிறது.
- 2007-ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே’.
- இப்படம் ‘யாரடி நீ மோகினி’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.
கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 'ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே' திரைப்படம் வெளியானது. இப்படத்தில் திரிஷா மற்று வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 2008-ஆம் ஆண்டு இப்படம் தமிழில் 'யாரடி நீ மோகினி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில், தனுஷ், நயன்தாரா, ரகுவரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதுவும் பெரும் வரவேற்பை பெற்றது.

ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே
இதனிடையே, கடந்த 2013-ம் ஆண்டு செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'நீண்ட நாட்களுக்கு பின்னர் 'ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே' திரைப்படத்தைப் பார்த்தேன். வெங்கடேஷ் மற்றும் த்ரிஷாவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாகம் எடுக்கவும் தயார்' என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குனர் செல்வராகவனின் ட்வீட்டுக்கு நடிகை த்ரிஷா 'நான் ரெடி' என பதிலளித்துள்ளார். இந்தபதிவு தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
I'm ready @selvaraghavan ? https://t.co/9DCojSHe3u
— Trish (@trishtrashers) September 10, 2023
- அஜித்தின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
- தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
எச். வினோத் இயக்கத்தில் வெளியான 'துணிவு' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதே போன்று நடிகர் தனுஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர்கள் அஜித், தனுஷ் மற்றும் பரத் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் அஜித், தனுஷ் மற்றும் பரத் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் இந்த படம் உறுதியானால் தன் வாழ்க்கை வேறு மாதிரி மாறிவிடும் என பரத் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- இயக்குனர் செல்வராகவன் தமிழில் பல படங்களை இயக்கியுள்ளார்.
- இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருகிறார்.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன் அதன்பின் பல படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

கடந்த 2004-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி'. இப்படத்தின் மூலம் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் செல்வராகவன் தீவிரம் காட்டி வருவதாகவும் இதிலும் நடிகர் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, '7ஜி ரெயின்போ காலனி-2' திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை பணிகள் முடிந்துள்ளதால் இதன் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளதாகவும் இதில் கதாநாயகியாக நடிக்க அதிதி ஷங்கர் மற்றும் இவானாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
- தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.

தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு சில தினங்களுக்கு முன்பு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷை தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகப்படுத்திய செல்வராகவனை, தனுஷ் இயக்கவுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 'மாமன்னன்' பட வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியது.
- இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'மாமன்னன்' படத்தின் வெற்றியை நேற்று படக்குழு கேக் வெட்டி கொண்டானர். இதையடுத்து 'மாமன்னன்' பட வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியது.

இந்நிலையில் 'மாமன்னன்' படத்தில் இடம்பெற்ற பாடல் குறித்து இயக்குனர் செல்வராகவன் பதிவிட்டுள்ளார். அதில், தமிழில் இப்படி ஒரு பாடல் கேட்டு எவ்வளவு நாளாயிற்று!! நெஞ்சமே நெஞ்சமே, ஐயா ஏ.ஆர்.ரகுமான் தலைவா! நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம். என்ன ஒரு வரிகள் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழில் இப்படி ஒரு பாடல் கேட்டு எவ்வளவு நாளாயிற்று !! #நெஞ்சமேநெஞ்சமே
— selvaraghavan (@selvaraghavan) July 4, 2023
ஐயா @arrahman தலைவா!
நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம்.
என்ன ஒரு வரிகள் #யுகபாரதி #மாமன்னன்
- நடிகர் செல்வராகவன், விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- இவர் அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் செல்வராகவன். படம் இயக்குவது மட்டுமில்லாது நடிப்பதிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் பீஸ்ட், சாணிக் காயிதம், பகாசூரன் போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் செல்வராகவன், சமூக வலைத்தளத்தில் மலையாள இசை குறித்து பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தி ஈர்த்து வருகிறது. அதில், "கடந்த சில வருடங்களாக நான் மலையாள மொழி இசை, திரைப்படங்கள் மற்றும் இண்டி இசைக்கு மிகவும் அடிமையாகிவிட்டேன், அதன் ஏற்பாடுகள் மற்றும் குரல்களின் தரம் மனதைக் கவர்கிறது. எப்பொழுதும் புதிய ஒலிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவர்களின் தேடல் அலாதியானது" என்று பதிவிட்டுள்ளார்.
In the last few years I have become so addicted to Malayalam music , both films and indie music. The quality of arrangements and voices are mindblowing. Their quest to always find new sounds is phenomenal ??
— selvaraghavan (@selvaraghavan) June 16, 2023
- ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் செல்வராகவன் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்.
- செல்வராகவன் சமூக வலைத்தளத்தின் வாயிலாக பிரபலம் ஒருவரை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
அஜித் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான 'வாலி' படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. அதன்பின்னர் குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் கள்வனின் காதலி, வியாபாரி, நண்பன், மெர்சல், மாநாடு, டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொம்மை' படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பொம்மை
இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் 'பொம்மை' படத்தின் ஸ்னீப் பீக் வீடியோவை பதிவிட்டு, என்ன ஒரு நடிப்பு! புல்லரிக்கிறது என்று எஸ்.ஜே. சூர்யாவை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்றுள்ளது.
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் செல்வராகவன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Wow! What a performance!
— selvaraghavan (@selvaraghavan) June 12, 2023
Goosebumps @iam_SJSuryah sir#Bommai#Sneakpeakhttps://t.co/01XUzOUpEt
- நடிகர் செல்வராகவன், விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- இவர் அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், அதன்பின்னர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் செல்வராகவன் மும்முரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் பீஸ்ட், சாணிக் காயிதம், , பகாசூரன் போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். தொடர்ந்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் செல்வராகவன் தற்போது பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தி ஈர்த்து வருகிறது. அதில், "அவர் சொல்கிறார் என கொஞ்சம் , இவர் சொல்கிறார் என கொஞ்சம் என்று நம்மை நாம் மாற்றிக் கொண்டே போனால் இறுதியில் மண்டை ஓடு கூட மிஞ்சாது. கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத்தான் இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
அவர் சொல்கிறார் என கொஞ்சம் , இவர் சொல்கிறார் என கொஞ்சம் என்று நம்மை நாம் மாற்றிக் கொண்டே போனால் இறுதியில் மண்டை ஓடு கூட மிஞ்சாது. கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத்தான் இருக்க வேண்டும்.
— selvaraghavan (@selvaraghavan) May 25, 2023