search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7G Rainbow colony"

    • இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி’.
    • இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    இளைஞர்கள் கொண்டாடும் படங்களை இயக்கியவர் செல்வராகவன். 2004-ம் ஆண்டில் ரவி கிருஷ்ணா-சோனியா அகர்வால் நடிப்பில் இவர் இயக்கிய '7ஜி ரெயின்போ காலனி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது.


    19 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்குவதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த பாகம் இயக்கவுள்ளதாகவும் இதில், ஹீரோவாக ரவி கிருஷ்ணாவும் ஹீரோயினாக அனஸ்வர ராஜனும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக செய்தி பரவி வந்தது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, '7ஜி ரெயின்போ காலனி 2' திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்துள்ளதாகவும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் செய்தி வலம் வருகிறது.

    • இயக்குனர் செல்வராகவன் தமிழில் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருகிறார்.

    துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன் அதன்பின் பல படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.


    கடந்த 2004-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி'. இப்படத்தின் மூலம் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.


    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் செல்வராகவன் தீவிரம் காட்டி வருவதாகவும் இதிலும் நடிகர் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, '7ஜி ரெயின்போ காலனி-2' திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை பணிகள் முடிந்துள்ளதால் இதன் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளதாகவும் இதில் கதாநாயகியாக நடிக்க அதிதி ஷங்கர் மற்றும் இவானாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

    தானும் தனுசும் சிறுவயதில் வறுமையால் வாடியதை பற்றி இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #Dhanush #selvaraghavan
    காதல் கொண்டேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் என வெற்றிப் படங்களை கொடுத்தவர். தமிழ் சினிமாவில் செல்வராகவனுக்கு என தனியிடம் இருக்கிறது.

    தற்போது இவர் சூர்யா நடிப்பில் என்ஜிகே படத்தை இயக்கி வருகிறார். தனது மற்றும் தனது தம்பி தனுஷின் சிறுவயது பற்றி டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது, “கொடூரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவர்கள் நாங்கள். இருவேளை உண்டால் அரிது.

    அண்டை வீட்டுக்காரர்களின் அன்பு காப்பாற்றியது. ஆயினும் சமூகம் கேலி செய்யும். நீ எல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய் என. எனக்கு தோள் கொடுத்து என் ரசிகர்கள் சாதித்தனர். அதனால்தான் அவர்கள் மட்டுமே என் நண்பர்கள்” என தெரிவித்துள்ளார்.

    செல்வராகவனின் இந்தப் பதிவால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு ஆதரவாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் அவர்கள் பதில் அளித்து வருகின்றனர். #Dhanush #selvaraghavan
    ×