என் மலர்
நீங்கள் தேடியது "யுவன் சங்கர் ராஜா"
- படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்
- பன்மொழி திரைப்படமாக உருவாகிறது
3, வை ராஜா வை, லால் சலாம் படங்களை இயக்கியவர் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்நிலையில் தற்போது பன்மொழி திரைப்படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனத்தின் 9வது படமான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி வெளியாகிறது. படத்திற்கு டெக்ஸ்லா என பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் அனிரூத் ரவிச்சந்தர் டீசரை வெளியிட்டுள்ளார்.
இந்த டீசர் தற்போது ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துவருகிறது.
- கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 9-வது படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார்.
- தற்போது இரண்டாவது முறையாக இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
நடிகர் தனுஷ் நடித்த '3' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்றை பெற்றதை தொடர்ந்து 'வை ராஜா வை', 'லால் சலாம்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா தற்போது புதிய படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகி உள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது. கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 9-வது படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தற்போது இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இதற்கு முன்னதாக 'வை ராஜா வை' படத்தில் ஐஸ்வர்யா- யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைந்து பணியாற்றியது. தற்போது இரண்டாவது முறையாக இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
- இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- இப்படத்தை கோடையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான 'சிவா மனசுல சக்தி' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இக்கூட்டணி மீண்டும் இணையுமா? என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.
இதனிடையே, ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். அப்படத்திற்கு 'ஜாலியா இருந்த ஒருத்தன்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். Malik Streams Corporation தயாரிக்கும் இப்படத்தை கோடையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி இப்படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், 'ஜாலியா இருந்த ஒருத்தன்' படத்தின் கதாநாயகியாக இவானா நடித்துள்ளார். இவானாவின் பிறந்தநாளை படக்குழுவினர் கொண்டாடிய நிலையில் புகைப்படத்தை பகிர்ந்து படக்குழு அறிவித்துள்ளது.
- இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பராசக்தி.
சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் ஜனவரி 5 வெளியானது. இதுவரை இந்த டிரெய்லர் 53 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா குரலில் பராசக்தியின் இடம்பெற்ற சேனைக் கூட்டம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
- இயக்குநர் ராஜேஷ் உடன் ஜீவா மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார்.
- இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது 'ப்ளாக்' திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது.
இதனை தொடர்ந்து, ஜீவாவின் 45 ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவாகி உள்ளது. இந்நிலையில், இயக்குநர் ராஜேஷ் உடன் ஜீவா மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார். ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு 'ஜாலியா இருந்த ஒருத்தன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ராஜேஷ் - ஜீவா கூட்டணியில் உருவான சிவா மனசுல சக்தி படம் பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- இப்படம் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
யுகபாரதி, பா. விஜய், சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு ஆகியோரின் பாடல் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். இப்படம் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதற்கு முன்னதாக, இப்படத்தின் 'உன்ன நான் பாத்தா', 'வஸ்தாரா' ஆகிய பாடல்கள் வெளியானது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது 'கொம்புசீவி' படத்தின் 3-வது பாடலான 'கருப்பன்' வெளியாகி உள்ளது. பாலா சிவசாமி எழுதியுள்ள பாடல் வரிகளுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க மகாலிங்கம் பாடியுள்ளார்.
- இயக்குநர் பொன்ராமிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும்.
- இன்றைய தலைமுறையினர் இதைத்தான் ரசிக்கிறார்கள் என தெரிந்து கொண்டு இப்படி ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்.
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
யுகபாரதி, பா. விஜய், சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு ஆகியோரின் பாடல் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். இப்படம் நாளை மறுநாள் முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'கொம்புசீவி' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பிரேமலதா விஜயகாந்த், எல். கே. சுதீஷ், விஜய பிரபாகரன், இயக்குநர்கள் எஸ். ஏ. சந்திரசேகரன், எம். ராஜேஷ், மித்ரன் ஆர். ஜவகர், நடிகர் ரியோ, நாயகர்கள் சரத்குமார் - சண்முக பாண்டியன் விஜயகாந்த், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், கலை இயக்குநர் சரவணன் அபிராமன், படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், நடிகர் கல்கி ராஜா, தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா, இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில், ''கொம்பு சீவி படத்தின் போஸ்டரை பார்க்கும்போது எனர்ஜியாக இருக்கிறது. கொம்பு சீவி என கிராமப்புறத்தில் காளையை குறிப்பிடுவார்கள். இதில் யார் கொம்பு சீவி என தெரியவில்லை. இரண்டு பேரும் அந்த அளவிற்கு இருக்கிறார்கள். கேப்டன் விஜயகாந்த் கண்களில் ஒரு நெருப்பு இருக்கும், ஒரு வேகம் இருக்கும். அந்த நெருப்பு கலந்த பார்வை சண்முக பாண்டியனிடமும் இருக்கிறது. 'உனக்கு நான் சளைத்தவன் இல்லடா..!' என சரத்குமாரும் அதில் ஆக்ரோஷமாக இருக்கிறார். அவரது கெட்டப் நன்றாக இருக்கிறது. 'வயதானாலும் நான் கொம்பு சீவின காளை டா..!' என்பது போல் இருக்கிறது அவருடைய தோற்றம். அந்த வகையில் இந்த போஸ்டரே படத்தின் வீரத்தை காட்டுகிறது.
இயக்குநர் பொன்ராமிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நகைச்சுவையை விட வேகம் - ஆக்ஷன் அதிகம் இருக்கும் என நம்புகிறேன். ஏனெனில் இன்றைய தலைமுறையினர் இதைத்தான் ரசிக்கிறார்கள் என தெரிந்து கொண்டு இப்படி ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு படமும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏனென்றால் பொன்ராம் என்னுடைய பிள்ளைகளில் ஒருவர்.
இயக்குநர் ஒரு இளைஞர், ஹீரோ ஒரு இளைஞர், சரத்குமார் ஒரு இளைஞர், இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா ஒரு இளைஞர். இப்படி இளைஞர்கள் புதிய வேகத்துடன் இணைந்திருக்கிறார்கள்.
உலகத்திற்கே உரிய ஒரு சரித்திரம் இருக்கிறது. மாற்றம் என்பது மட்டுமே மாறாதது. அது எல்லாத்துறையிலும் உண்டு. சமூகம்- அரசியல்- திரைத்துறை- என எல்லாத் துறையிலும் இது உண்டு. எனக்குத் தெரிந்து திரையுலகில் ஒரு காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர்-பி யு சின்னப்பா, அதற்குப் பிறகு எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல் அதற்குப் பிறகு இன்றைய சூப்பர் ஸ்டார்கள் என மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை யாராலும் மாற்ற முடியாது. இது காலத்தின் கட்டாயம். ஆகவே மாற்றத்திற்குரிய இளைஞர்கள் வெற்றி பெற வேண்டும். ஏனெனில் இந்த இளைஞர்களும், தமிழகத்தில் உள்ள மக்களும் ஒரு மாற்றத்தை விரும்பி கொண்டிருக்கிறார்கள். அந்த மாற்றம் இந்த திரைப்படத்திலும் நிகழ வேண்டும், வாழ்த்தி விடைபெறுகிறேன், நன்றி,'' என்றார்.
- இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
- ‘கொம்புசீவி’ கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
யுகபாரதி, பா. விஜய், சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு ஆகியோரின் பாடல் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் என வெளியானது. அதனை தொடர்ந்து 'கொம்புசீவி' கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், 'கொம்புசீவி' படம் கிறிஸ்துமஸுக்கு முன்னதாக வருகிற 19-ந்தேதி வெளியாகும் என டிரெய்லரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. டிரெய்லரில் கிராமத்திற்காக போராடும் சரத்குமார், சண்முக பாண்டியனை சுற்றி வரும் கதையில் ஆக்ஷன், காதல், நகைச்சுவை கலந்து உருவாகி உள்ளது.
- இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
- யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்.ஜி.ஆர் மகன்' மற்றும் 'டி.எஸ்.பி' போன்ற திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் தற்போது 'கொம்புசீவி' என்ற படத்தை இயக்கியுள்ளார். கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ள இந்தப் படத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் வெளியானது.
இந்த நிலையில், 'கொம்புசீவி' படத்தின் 'வஸ்தாரா' பாடல் வெளியாகி உள்ளது. சூப்பர் சுப்பு வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்பாடலை விஷ்ணு பிரியாவுடன் இணைந்து யுவனும் பாடியுள்ளார்.
- இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் என வெளியானது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குநர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற திரைப்படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் என வெளியானது. இருப்பினும் இப்படம் வெளியாவது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், 'கொம்புசீவி' படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று அருண் விஜயின் 'ரெட்ட தல' படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- ஆனந்த கிருஷ்ணன் தற்போது 'நான் வயலன்ஸ் (NON Violence) என்ற படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் தற்போது 'நான் வயலன்ஸ் (NON Violence) என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில், நான் வயலன்ஸ் படத்திலிருந்து நடிகை ஸ்ரேயா நடனமாடியுள்ள 'கனகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
திருமணம் ஆனதில் இருந்து தமிழில் நடிப்பதை குறைத்துகொண்ட ஸ்ரேயா, இந்தாண்டு வெளியான ரெட்ரோ படத்தில் பாடல் ஒன்றுக்கு சிறப்பு நடனம் ஆடி கம்பேக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமைமிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற திரைப்படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'.
இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.
தொடர்ந்து, 'கொம்புசீவி' படத்தின் முதல் சிங்கிளான 'உன்ன நான் பாத்த' பாடல் இன்று மாலை 4.45 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்தது. இந்த நிலையில், "கொம்புசீவி" படத்தின் முதல் பாடலான "உன்ன நான் பாத்த" பாடல் வெளியாகியுள்ளது.






